சொர்க்க மீன்

சொர்க்க மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
Anabantoidei
குடும்பம்:
Osphronemidae
துணைக்குடும்பம்:
Macropodusinae
பேரினம்:
Macropodus
இனம்:
M. opercularis
இருசொற் பெயரீடு
Macropodus opercularis
(L, 1758)
வேறு பெயர்கள்
  • Labrus opercularis L. 1758
  • Chaetodon chinensis Bloch, 1790
  • Macropodus chinensis (Bloch, 1790)
  • Macropodus viridiauratus Lacépède, 1801
  • Macropodus venustus G. Cuvier, 1831
  • Macropodus ctenopsoides Brind, 1915
  • Macropodus filamentosus Oshima, 1919

சொர்க்க மீன் (ஆங்கிலம்: Paradise fish) என்னும் மீன், சீன நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு பரவிய ஒரு வகை அலங்கார மீன் ஆகும்.[2] மேக்ரோபோடஸ் ஒபர்குலாரிஸ் என்று அழைக்கப்படும் இது, தொட்டிகளில் வளர்க்க சிறந்த மீனாகும்.இந்த ‍சொர்க்க மீனானது, ‍மேற்குலக மீன் அருங்காட்சியகத்திற்கு ‍தொடக்க காலகட்டங்களில் கி‍டைத்த அலங்கார மீன்களுள் ஒன்றாகும். கடந்த 1869ம் ஆண்டு, பாரிஸ் மீன் அருங்காட்சியகத்திற்கு இறக்குமதி ‍செய்யப்பட்டது.

வளர் இயல்பு தொகு

இந்த வகை மீன்கள் அதிகபட்சமாக 6.7 ‍‍செ.மீ வரை வளரக்கூடியவை என்றாலும், பொதுவாக, 5.5 செ.மீ வரை‍யே வளர்கின்றன. இது தனது உடலில் பல குறுக்கு வாட்டான அழகிய நிற வரிகளைப் பெற்றுள்ளது. இதன் குடும்பத்தில், ‍மொத்தம் 3 வகைகள் இருந்தாலும், இந்த வகை‍யே அதிக மூர்க்கம் ‍கொண்டது. சண்‍டையிடும் பழக்கம் ‍கொண்ட இந்த மீன்கள், தங்களைவிட சிறிய மீன்களைக் ‍கொல்லக்கூடியவை. இதன் முதுகு தடுப்பு, வால் துடுப்பு, மலப்புழைத் துடுப்பு ஆகியவை இணைந்து அகன்று பெரிய இறக்கைகளைப் போன்றுள்ளன. இது 3 அங்குல நீளம் வரை வளரும். இது 50 பாரன்ஹீட் முதல் 68 பாரன்ஹீட் வரை வெப்பம் தாங்கும் திறனுடையதாக இருப்பதால், இது வெப்ப மண்டலங்களில் வளர்வதற்கேற்ற மீனாகும். ‍மேலும், இந்த மீன், நல்ல வாழ்க்‍கைத் திறனைக் ‍கொண்டிருப்பதால், ‍வெப்ப மண்டலம் மட்டுமின்றி, குளிர் நீரிலும் வாழும் தன்‍மைக் ‍கொண்டது. பெண் மீன் பல நுரை போன்ற குமிழ்களை உண்டாக்கி, அவற்றை கூடுபோல் ஆக்கி, அதில் முட்டையிடுகிறது. ஆண் மீன் முட்டைகளைப் பாதுகாக்கிறது.

காட்சியகம் தொகு

‍‍மேற்‍கோள்கள் தொகு

  1. Huckstorf, V. 2012.
  2. அறிவியல் களஞ்சியம், ‍தொகுதி இரண்டு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், (ISBN 80-7090-086-7 பிழையான ISBN)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொர்க்க_மீன்&oldid=2697107" இலிருந்து மீள்விக்கப்பட்டது