சொல்லொப்புமை

மொழியியலில், சொல்லொப்புமை என்பது, எந்த அளவுக்குக் குறித்த இரு மொழிகளின் சொற்கள் ஒத்திருக்கின்றன என்பதைக் குறிக்கும் அளவீடு ஆகும். சொல்லொப்புமை 1 (அல்லது 100%) ஆக இருப்பது இரண்டு மொழிச் சொற்களும் முழுமையாக ஒத்திருப்பதைக் குறிக்கும். சொல்லொப்புமை 0 ஆக இருந்தால் அம்மொழிகளில் பொதுச் சொற்கள் எதுவும் இல்லை என்பது பொருள்.

சொல்லொப்புமையை வரையறுப்பதற்குப் பல வழிகள் உள்ளன. பயன்படுத்து வழியைப் பொறுத்து விளைவும் மாறுபடும். எடுத்துக்காட்டாக, எத்னொலோக்கின் கணிப்பீட்டு முறையில் தரப்படுத்தப்பட்ட சொற்பட்டியல்களைப் பயன்படுத்தி இரு மொழிகளிலும் வடிவமும், பொருளும் ஒத்தவையாக உள்ள சொற்கள் கணக்கிடப்படுகின்றன. இம்முறையைப் பயன்படுத்தி ஆங்கில மொழியை மதிப்பீடு செய்தபோது அது செருமன் மொழியுடன் 60% சொல்லொப்புமையும், பிரெஞ்சு மொழியுடன் 27% சொல்லொப்புமையும் கொண்டிருக்கக் காணப்பட்டது.

சொல்லொப்புமையை இரு மொழிகளுக்கிடையே உள்ள இனத்தொடர்பின் அளவை மதிப்பிடுவதற்கும் பயன்படுத்த முடியும். 85% க்கு மேற்பட்ட சொல்லொப்புமை, ஒப்பிடப்பட்ட இரு மொழிகளும் பெரும்பாலும் தொடர்புள்ள கிளைமொழிகள் என்பதைக் காட்டும்.[1]

சொல்லொப்புமை இரு மொழிகளிடையேயான புரியும்திறனைக் காட்டும் குறியீடுகளுள் ஒன்று மட்டுமே. புரியும்திறனானது உருபனியல், ஒலியியல், தொடரியல் ஒப்புமைகளிலும் தங்கியுள்ளது. சொற்பட்டியல் வேறுபாடுகளும் சொல்லொப்புமையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். எடுத்துக்காட்டாக, பண்பாடு சார்ந்த சொற்களைப் பொறுத்தவரை ஆங்கிலத்துக்கும் பிரெஞ்சுக்கும் இடையிலான சொல்லொப்புமையின் அளவு குறிப்பிடத்தக்கது. ஆனால் அடிப்படைச் சொற்களைப் பொறுத்தவரை இது மிகவும் குறைவு. புரியும் திறனைப் போலன்றி சொல்லொப்புமை சமச்சீரானதாகவே இருக்க முடியும்.

இந்திய-ஐரோப்பிய மொழிகள் தொகு

எத்னொலோக் சேகரித்து வெளியிட்டபடி சில இந்திய-ஐரோப்பிய மொழி இணைகளுக்கு இடையிலான சொல்லொப்புமைப் பெறுமானங்களைக் கீழுள்ள அட்டவணை காட்டுகின்றது.[2]

மொழிக்
குறி.
மொழி 1
சொல்லொப்புமைக் குணகங்கள்
கட்டலன் ஆங்கில. பிரெஞ்சு செருமன் இத்தாலி. போர்த்து. ரோமானி. ரோமன்சு உருசியம் சார்டினி. எசுப்பா.
cat கட்டலன் 1 - - - 0.87 0.85 0.73 0.76 - 0.75 0.85
eng ஆங்கிலம் - 1 0.27 0.60 - - - - 0.24 - -
fra பிரெஞ்சு - 0.27 1 0.29 0.89 0.75 0.75 0.78 - 0.80 0.75
deu செருமன் - 0.60 0.29 1 - - - - - - -
ita இத்தாலியம் 0.87 - 0.89 - 1 - 0.77 0.78 - 0.85 0.82
por போர்த்து. 0.85 - 0.75 - - 1 0.72 0.74 - - 0.89
ron ரோமானியம் 0.73 - 0.75 - 0.77 0.72 1 0.72 - 0.74 0.71
roh ரோமன்சு 0.76 - 0.78 - 0.78 0.74 0.72 1 - 0.74 0.74
rus உருசியம் - 0.24 - - - - - - 1 - -
srd சார்டினியம் 0.75 - 0.80 - 0.85 - 0.74 0.74 - 1 0.76
spa எசுப்பானியம் 0.85 - 0.75 - 0.82 0.89 0.71 0.74 - 0.76 1
கட்டலன் ஆங்கில. பிரெஞ்சு செருமன் இத்தாலி. போர்த்து. ரோமானி. ரோமன்சு உருசியம் சார்டினி. எசுப்பா.
மொழி 2 → cat eng fra deu ita por ron roh rus srd spa

(ஆங்கில. - ஆங்கிலம், இத்தாலி. - இத்தாலியம், போர்த்து. - போர்த்துக்கேயம், ரோமானி. - ரோமானியம், சார்டினி. - சார்டினியம், எசுப்பா. - எசுப்பானியம்)

மேற்கோள்கள் தொகு

  1. http://www.ethnologue.com/ethno_docs/introduction.asp
  2. See, for instance, lexical similarity data for French, German, English
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொல்லொப்புமை&oldid=2749407" இலிருந்து மீள்விக்கப்பட்டது