சொல் (எண் தொகை)
எண் தொகை என்பது பொருள்களையும், செய்திகளையும் எண்ணிக்கை வகையால் தொகுத்துப் பார்க்கும் ஒருவகைப் பார்வை. ஆசிரிய நிகண்டு, திவாகர நிகண்டு போன்ற நூல்கள் இதனைப் ‘பல்பெயர்க் கூட்டம்’ [1] எனக் குறிப்பிடுகின்றன. இவை வடமொழி நெறியைப் பின்பற்றியும், தமிழர் கற்பனை வழியிலும் தோன்றியவை.[2]
தொகை
தொகு2 (இருமை)
தொகு- அறம் – இல்லறம், துறவறம்
- இன்பம் – இல்லது, உள்ளது
- சுடர் – ஞாயிறு, திங்கள்
- பயன் – நன்மை, தீமை
- பேறு – இம்மை, மறுமை
- பொருள் – கல்வி, செல்வம்
- மரபு – தாய்வழி, தந்தைவழி
- வினை – நல்வினை, தீவினை
3 (மும்மை)
தொகு- இடம் – தனமை, முன்னிலை, படர்க்கை
- உலகு – பூமி, ஆகாயம், சுவர்க்கம்
- காலம் – இறந்த்து, நிகழ்வது, வருவது
- குற்றம் – காமம், வெகுளி, மயக்கம்
- செயல் – படைத்தல், காத்தல், அழித்தல்
- பொறி – மனம், வாக்கு, காயம்
- மும்மை – உம்மை, இம்மை, மறுமை
- மொழி – பட்டாங்கு, பழித்தல், புகழ்தல்
4
தொகு- அரண் – மலை, காடு, மதில், நீர்
- இழிசொல் – பொய், குறளை, கடுஞ்சொல், பயனில்சொல்
- கேள்வி – அறம், பொருள், இன்பம், வீடு
- நிலை [3] – பைசாசம் [4], ஆவீடம் [5], மண்டிலம் [6], பிரத்தியாவீடம் [7]
- புண்ணியம் – தவம், நல்லொழுக்கம், தானம், கல்வி
- புலமை – கவி, கமகன், வாதி, வாக்கி
- புலமை (கமகன்) – ஞாபகம், செம்பொருள், நடைபொருள், காசுபொருள் – திறமறிந்து கூறுபவன்.
- புலமை (கவி) – ஆசுகவி, மதுரகவி, சித்திரம், வித்தாரம்
- புலமை (வாக்கி) – அறம், பொருள், இன்பம், வீடு - கூறுபவன்
- புலமை (வாதி) – ஏது, மேற்கோள், எடுத்துக்காட்டு, தன்திறம் – காட்டிப் பேசுபவன்
- வேதம் – இருக்கு, தைத்திரியம், சாமம், அதர்வணம்
5
தொகு- ஈசன் முகம் – சத்தியோசாதம் [8], வாமம் [9], அகோரம் [10], தற்புருடம் [11], ஈசானம் [12]
- உண்டி – கடித்து, பருகி, விழுங்கி, நக்கி, எடுத்து உண்ணும் உணவு.
- ஐம்பால் முடி – கொண்டை, சுருள், குழல், பனிச்சை சடை வார்முடி வாரிச் செருகல்
- குதிரை நடை – மல்லகதி [13], மயூரகதி [14], வானரகதி [15], சரகதி [16], அசர-கதி [17]
- சத்தம் – தோல், துளை, நரம்பு, கஞ்சனை, பாடல்
- தாய் – பாராட்டும் தாய் [18], ஊட்டும் தாய் [19], முலைத்தாய் [20], கைத்தாய் [21], செவிலித்தாய் [22]
- திணை – குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம்
- பஞ்சாங்கம் – திதி, வாரம், நாள், யோகம், கரணம்
- படுக்கை (பஞ்ச சயனம்) – மயிரின் சேணம் [23], வன்பஞ்சு [24], தூவி [25], பயிற்றந்தண்வீ [26], பாய்
- பாதகம் (பஞ்சபாதகம்) – கொலை, களவு, கள்ளுண்ணல், குருநிந்தை [27], பொய்
- பால் – ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல
- பூதம் (பஞ்சபூதம்) – மண், நீர், கனல், காற்று, விண்
- பொறி (ஐம்பொறி) – மெய், வாய், கண், மூக்கு, செவி
- மன்மதன் பானம் – முல்லை [28], அசோகு [29], நீலம் [30], அல்லி [31], முளரி [32]
- வாய்மணம் (பஞ்ச வாசனம்) – தக்கோலம், ஏலம், இலவங்கம், சாதிக்காய், கருப்பூரம்
- வினா – அறியான் வினாவுதல், அறிவு ஒப்புமை காண்டல், ஐயம் அறுத்தல், அவன்றிவு தான்கோடல், மெய் அவற்குக் காட்டல்
6
தொகு- அரசியல் – படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் [33]
- உட்பகை – காமம், வெகுளி, உலோபம், மாற்கொள் மோகம், மதம், மாச்சரியம்
- உலகியல் நிலை – அறநிலை-அறம் [34], மறநிலை-அறம் [35], அறநிலைப்பொருள் [36], மறநிலைப்பொருள் [37], அறநிலை-இன்பம் [38], மறநிலை-இன்பம் [39]
- கருமம் (கரும பூமி) – உழவு, தொழில், வரைவு, வாணிகம், விச்சை, சிற்பம் ஆகிய தொழில்கள்
- சக்கரவர்த்தி – அரிச்சந்திரன், நளன், முசுகுந்தன், பரூரவன், சகரன், கார்தவீரியன்
- சமயம் – வைசேடிகம், நையாயிகம், மறுவில் மீமாம்சை, ஆருகதம், பௌத்தம், பிரதி-லோகாயதம் [40]
- சுவை – தித்தித்தல், புளித்தல், கைத்தல், துவர்த்தல், கூர்த்தல்,[41] காழ்த்தல் [42]
- தொழில், அறுதொழில், 6 தொழில் – அந்தணர் [43], அரசர் [44], வணிகர் [45], வேளாளர் [46][47][48]
- தொழில், ஆறு அங்கம் – மந்திரம், வியாகரணம், நிகண்டு, சந்தோ-பிசிதி, நிருத்தம், சோதிடம்
- நன்னாட்டமைதி – செல்வம், விளைவு, பல்வளம், செங்கோன்மை, கொல்குறுபு இன்மை, கொடும்பிணி இன்மை [49]
- படை (தானை) – வேல், வாள், வில், தேர், பரி, களிறு
- போகபூமி - ஆதியரிவஞ்சம், நல்லரிவஞ்சம், ஏமதவஞ்சம், அரணவஞ்சம், தேவகுருவம், உத்தரகுருவம்
7
தொகு- உலகம், கீழுலகம் – அதலம், விதலம், சுதலம், நிதலம், தராதலம், ரசாதலம், மகாதலம்
- உலகம், மேலுலகம் - பூலோகம், புவலோகம், சுவலோலம், மகலோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம்
- கடல் – உவர், கரும்பு, மது, நெய், தயிர், பல், புனல்,
- தாது, உடலிலுள்ள தாது – இரதம் மஞ்ஞை என்னும் வழுக்குப்பசை, உதிரம், என்பு, தோல், தசை, மூளை, சுக்கிலம்
- தீவு (பொழில்) – நாவலந்தீவு, இறலித்தீவு, குசையின்தீவு, கிரவுஞ்சத்தீவு, சான்மலித்தீவு, தெங்கின்தீவு. புட்கரத்தீவு
- நரகம் – பெருங்களிற்று வட்டம், பெருமணல் வட்டம், எரியின் வட்டம், புகையின் வட்டம், இருளின் வட்டம், பெருங்கீழ் வட்டம், அரிபடை வட்டம்
- பேறு – செங்கோலாட்சி தரும் பேறு – அறம், பொருள், இன்பம், அன்பு, பொறுமை, புகழ், மதி
- மலை, குலவரை - இமயம் மந்தரம், கைலை, வடவிந்தம், நிடதம், எமகூடம், நீலகிரி
- மழை, (சொரிவன) – பொன், பூ, புனல், மணி, மண், கல், தீ
- மாதர், சத்த மாதர் – அபிராமி, இந்திராணி, வைணவி, வராகி, கௌமாரி, மயேசுவரி, மாகாளி
- முகில், மேகம் – புட்கலாவர்த்தம், சங்காரித்தம், ஆவர்த்தம், சமவர்த்தம், துரோணம், காளமுகில், நீலவருணம்
8
தொகு- அச்சம், பிறப்பில் சிறப்பிலா எண்பேர் அச்சம் – சிறப்பில் சிதடு, உறுப்பில் பிண்டம், கூன், குறள், ஊமை, செவிடு, முடம், மருள் [50]
- கணம் [51][52] – நீர் [53], தீ [54], அந்தரம் [55], இயமானன் [56][57], மதி [58], எரிகதிர் [59], மாருதம் [60][61], மாநிலம் [62]
- கணிதம் – நங்கலிதம், விபகலிதமு, குணகம், பாகாரம், வர்க்கம், வர்க்க-மூலம், கனம், கன-மூலம்
- காட்சி (தெளிவு) – ஐயப்படாமை, அவாவொன்று இன்மை, அறிவு உவர்ப்பு இன்மை, மூடம் அறுத்தல், அறப்பழி அழித்தல், அழிந்தோரை நிறுத்தல், அறத்தை விளக்கல், அறு சமயத்தவர்க்கு அன்புறல்
- குணம் – அனந்த ஞானம், அனந்த தரிசனம், அனந்த வீரியம், அனந்த சுகி, நாமம் இன்மை, கோத்திரம் இன்மை, ஆயு [63] இன்மை, அழியா இன்பம்
- குணம் (வணிகர்) – தனிமையாதல், முனிவிலன் ஆதல், இடன் அறிந்து ஒழுகல், பொழுதொடு புணர்த்தல், உறுவது தெரிதல், இறுவது [64] அஞ்சாமை, ஈட்டம், வகுத்தல்
- குற்றம் – ஞாநாவரணியம், தரிசநாவரணியம், வேதநீயம், மோகநீயம், ஆயுநாமம், கோத்திரம், அந்தராயம் அந்தராயம் இரண்டு, காயவந்தராயம், வாயுவந்தராயம்
- சித்தி, அட்டமா சித்தி, - அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராந்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்
- திக்குப் பாலகர் – இந்திரன் கிழக்கு அருகன் திசை கொடி, அங்கி தென்கிழக்கு பூனை, இயமன் தெற்கு சீயம், நிருதி தென்மேற்கு ஞாளி, வருணன் மேற்கு இடபம், வாயு வடமேற்கு கழுதை, குபேரன் வடக்கு சோமன் திசை யானை, ஈசானன் வடகிழக்கு காகம்,
- நாகம், அட்டமாநாகம் – வாசுகி, அனந்தன், விட்டபற்பன், மகாபற்பன், சங்கபாலன், தக்கன், கார்க்கோடகன், குளிகன்
- மங்கலம், அட்டமங்கலம் – கவரி [65], நிறைகுடம், கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு, பதாகை பறக்கும்-கொடி, இணைகயல்
- மணம் – பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெயுவம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம்
- மூர்த்தம் [66] – பார், நீர், தேயு [67], வாயு [61], ஆகாயம், சூரியன், இந்து, இயமானன்
- மெய்யுணர்வு (மெய்ப்பரிசம்) – ஒட்டுதல், பிடித்தல், தீண்டல், தடவுதல், கட்டுதல், வெட்டல், குத்துதல், ஊன்றல்
- யோகம், அட்டாங்க யோகம் – இயமம் [68], நியமம் [69], ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி
- வெற்றி – வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை[70]
9
தொகு- கண்டம், நவகண்டம் – வடபால்விதேகம், தென்பால்விதேகம், கீழ்பால்விதேகம், மேல்பால்விதேகம், வடபால்-இரேவதம், தென்பால்-இரேவதம், வடபால்-பரதம், தென்பால்-பரதம், மத்திம-கண்டம்
- தாரணை, நவதாரணை – நாமதாரணை, வச்சிரதாரணை, மாயாதாரணை, சித்திரதாரணை, செய்யுள்தாரணை, நிறைவு குறைதலாகிய எண்பொருள்தாரணை [71] , சத்ததாரணை, வத்துதாரணை, சதுரங்கதாரணை
- தானம், நவமானம் – அரிதானம், மருமதானம், சமதானம், சயதானம், சித்திரதானம், துருவதானம், நிவிர்ததானம், படிமதானம், விடதானம்
- புண்ணியம், நவபுண்ணியம் – எதிர்கொளல், பணிதல், இருக்கை, கால்-நீர், புதுமலர், நூபம், விளக்கு, புகழ்தல், அறுசுவை உண்டி அருந் தவர்க்கு ஆற்றுதல்
- மணி, நவமணி – வைரம், வைடூரியம், முத்து, மாணிக்கம், பவளம், கோமேதகம், இந்திரநீலம், மரகதம், புட்பராகம்
- ரசம், நவரசம் – சிங்காரம், பெருநகை, கருணை, வீரியம், அற்புதம், பயம், ரௌத்திரம் [72], குற்றை, சாந்தம்
10
தொகு- அருச்சுனன் பெயர் – பற்குணன், சுவேதன், வாகனன், பார்த்தன், சல்லியசாதி, கிரீடி, தனஞ்சயன், விசயன், விபற்சு, காண்டிவன்
- சிற்பம் – கல், உலோகம், செங்கல், மரம், மண், சுதை, தந்தம், வண்ணம், கண்ட-சருக்கரை, மெழுகு,
- தசாங்கம் நூல் – ஆறு, மலை, யானை, குதிரை, நாடு, ஊர், கொடி, முரசு, தார், தேர் பற்றிப் பாடுவது.
- தசாவதாரம் – மீன், ஆமை, வராகம், நரசிங்கம், வாமனம், பரசிராமன், இராமன், பலதேவன், கண்ணன், கற்கி
- திசை – 4 திசையும், 4 கோணமும் சேர்ந்து 8. இவற்றுடன் மேலே, கீழே என்னும் திசைகளையும் சோர்த்தால் 10
- வேளாளர் தொழில் – ஆணைவழி நிற்றல், அழிந்தோரை நிறுத்தல், கைக்கடன் ஆற்றல், கசிவு அகத்து உண்மை, ஒக்கல் போற்றல், ஓவா முயற்சி, மன்னனுக்கு இறை தருதல், ஒற்றுமை கோடல், விருந்து புறந்தருதல், திருந்திய ஒழுக்கம்
11
தொகுஉருத்திரர், ஏகதச உருத்திரர் - மாதேவன், சிவன், உருத்திரன், சங்கரன், நீலலோகிதன், ஈசானன், விசயன், வீமதேவன், பவோற்பவன், காபாலி, சௌமியன்
12
தொகு- ஆதித்தர், துவாதசாதித்தர் - தாத்துரு, சக்கரன், அரி, அயன், மித்திரன், வருணன், அஞ்சுமான், இரணியன், பகவான், திவச்சுவான், பூடன், சவித்துருதுவட்டன்,
- உயிர்-வேதனை - அனல், சீதம், வாதம், பனி, புனல், அசனி, விடம், விடமருந்து, பசி, நீர்வேட்கை, பிணி, முனிவு-அறாமை
18
தொகு- அரசர் கிளைஞர் ஐம்பொருங்குழு, எண்பேராயம், பதின்பெரு மக்கள்
- ஐம்பெருங்குழு - அமாத்தியர் [73], புரோகிதர், சேனாபதியர், தூதுவர், சாரணர்
- எண்பேராயம் - கரணக்கிளைஞர் [74], கமவிதிகாரர், கனகச்சுற்றம், கடைகாப்பாளர், நகரமாக்கள், நளிபடைத் தலைவர், குதிரை-வீரர், யானை-வீரர்
- பதின்பெருமக்கள் - அடுத்த-நட்பாளர், அந்தணாளர், படைத்தொழிலாளர், மருத்துவக் கலைஞர், நிமித்தகாரர், நீள்நில வேந்தர் [75] முதலானோர்
- தருமநூல்
- மனு, அந்நிரி,[76] விண்டு, யாஞ்ஞவற்சியம், உசனம், ஆங்கீரசம்
- இயமம், ஆபத்தம்மம், சம்பவர்த்தம், காத்தியாயனம், பிரகற்பதி, பராசரம்
- வியாசம், சங்கலிதம், தர்க்கம், கௌதமம், சாதான்மம், வசிட்டம்
- தேவர்
- அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கிந்நரர்,
- கிம்புடர், காந்தருவர், இயக்கர், விஞ்சையர், அராக்கதர், பூதர்,
- பைசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாசவாசியர், போகபூமியர்
- புராணம்
- மச்சியம், கூர்மம், வராகம், வாமனம், பிரவம், வைணவம்
- பாகவதம், சைவம், இலைஞம், பௌடிகம், நாரதாயம், காருடம்,
- பிரம-கைவர்த்தம், மார்க்கண்டேயம், காந்தம், பிரமாண்டம், ஆக்கினேயம், பதுமம்
- புராணம், உப புராணம்
- உசுனம், கபிலம், காளி, சனற்குமாரம், சாம்பவம், சிவ-தன்மம்,
- சௌரம், துருவாசம், நந்தி, நரசிங்கம், நாரதீயம், பராசரம்
- வியாசம், சங்கலிதம், பாரக்கவம், ஆங்கீரம், மாரீசம், ஆனவம் [77]
- மொழி, பதினெண் பாடை -
- அங்கம், வங்கம், கலிங்கம், கௌசிகம், சிந்து, சோனகம்,
- திராவிடம், சிங்களம், மகதம், கோசலம், மராடம், கொங்கணம்
- துளுவம், சாவகம், சீனம், காம்போசம், பருணம், பப்பரம்
- யாக்கையில் குற்றம்
- பசி, நீர்வேட்கை, பயம், வெகுளி, உவகை, வேண்டல்,
- நினைப்பு, உறக்கம், நரை, நோய்படுதல், மரணம், பிறப்பு,
- மதம், இன்பம், அதிசயம், வியர்த்தல், கேதம், கையறவு
- யாகம் - அக்கினிகோத்திரம், அக்கினிட்டோமம், அக்கினியாதேயம், அட்டகைபார்வனம், அத்தியக்கினிட்டோமம், அதிராத்திரமம், ஆக்கிரகாயனி, ஆக்கிரயணம், ஆசுவாயுசி, உத்தியம், சாதுர்மாசியம், சிராத்தம், சிராவணி, சோடசீ, சௌத்திராமணி, தரிசபூர்ணமாசம், தைத்திரி, தோரியாமம், நிருடப்பந்தம், வாசபேயம்,[78]
மரபு
தொகு25
தொகு- தத்துவம்
- நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் (ஐம்பொரும்பூதம்)
- மெய், வாய், கண், மூக்கு, செவி (ஐந்து வாயில்)
- சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் (ஐம்புலன்)
- கை, கார், குதம், வாய், மானுடக் குறி (கருமேந்திரியங்கள் ஐந்து)
- மனம், புத்தி, ஆங்காரம், சித்தம், இயமானன் (ஞானேந்திரியங்கள்)
என்னும் இவை 25 தத்துவங்கள்
28
தொகு- அணி (அலங்காரம்)
- உருவகம், உவமை, வழிமடக்கு, நிலைமடக்கு, விரிசுடர்-விளக்கு, (5)
- வேற்றுமை-நிலை, வெளிப்படு-நிலை, சொல் [79], தன்மை, பிறபொருள்-வைப்பு, (5)
- சிறப்பு-மொழி, சிலேடை, மறுத்து-மொழி-நிலை, நோக்கு, உள்தொடர், தொகை-மொழி, மிகை-மொழி, உடனிலை, கூட்டம் (9)
- உவமான-உருவகை, நுவலா-நுவற்சி, தலை கட்டிய மொழி [80], நிதரிசனப் பாராட்டு, ஒருங்கிய நிலை, ஐயம், உயர்வு, விரவியல், வாழ்த்து (9)
என 28 அணி வகை
32
தொகு- அறம்
- ஆதுலர் சாலை [81],
- ஓதுவார்க்கு உணவு
- அறுசமயத்தோர்க்கு உணவு
- பசுவுக்கு வாயுறை
- சிறைச்சோறு
- ஐயம்
- தின்பண்டம்
- மகச்சோறு [82]
- மகப்பெறுவித்தல் [83]
- மக வளர்த்தல்
- மகப்பால்
- அறவைப் பிணம் சுடுதல் [84]
- அறவைத் தூரியம் [85]
- வண்ணார்
- நாவிதர்
- வதுவை
- பூணூல்
- நோய் தீர்க்கும் மருந்து
- கண்ணாடி தருதல்,
- காதோலை தருதல்
- கண்ணுக்கு கருந்து
- தலைக்கு எண்ணெய்
- போகத்துக்குப் பெண் தருதல்
- சுண்ணாம்பு தருதல்
- துயரம் போக்கல்
- தண்ணீர் பந்தல்
- மடம் கட்டுதல்
- குளம் வெட்டுதல்
- பூங்கா அமைத்தல்,
- ஆடுமாடுகளுக்கு நீர்த்தொட்டி
- பசுவின் மேல் காளை ஏற விடுதல்
- கொலை-உயிர் மீட்டல்
ஆகிய 32-ம் அறச்செயல்கள்.
33
தொகு- தேவர்
- ஆதித்தர் 12
- அசுவினி தேவர் 2
- ஈசர் 11
- வசுக்கள் 8
ஆக 33 தேவர்
தத்துவம்
தொகு- உயிர் அறிவு
- காவிய இயற்கை
- பிள்ளைத்தமிழ், ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ்
எண்பெயர்
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ பல்பெயர்க் கூட்டத் தொகுதிப்பெயர்த் தொகுதி
- ↑ இக் கட்டுரையில் முன்னோர் நூல்களில் தொகுத்துக் காட்டியவை மட்டும் இடம்பெறுகின்றன. பிற்காலத்து எழும் அவரவர் கற்பனைக்கு இடமில்லை.
- ↑ நின்றுகொண்டோ, அமர்ந்துகொண்டோ இருக்கும் நிலை
- ↑ ஒருகாலை மற்றொரு காலின்மேல் வைத்துக்கொண்டு நிற்கும் திலை
- ↑ வலக்காலைச் சம்மணம் போட்டுக்கொண்டும், இடக்காலைத் தொங்க விட்டுக்கொண்டும் மேடையில் அமர்ந்திருக்கும் நிலை
- ↑ இரு கால்களையும் மடக்கிச் சம்மணம் போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கும் நிலை
- ↑ இடக்காலைச் சம்மணம் போட்டுக்கொண்டும், வலக்காலைத் தொங்கவிட்டுக்கொண்டும் மேடையில் அமர்ந்திருக்கும் நிலை.
- ↑ அம்மையப்பர்
- ↑ பாம்புடன் தோன்றல்
- ↑ எரிக்கும் கண்ணுடன் தோன்றல்
- ↑ ஆண்மகன் கோலம்
- ↑ தவக்கோலம்
- ↑ வளநடை "மல்லல் வளனே (தொல்காப்பியம்)
- ↑ மயில் போன்ற ஒய்யார நடை
- ↑ குரங்கு போல் தவ்வி நடத்தல்
- ↑ பூச்சரம் போல குதிகளோடு சேர்ந்து நடத்தல்
- ↑ இணையாத தனித்தன்மை கொண்ட நடை
- ↑ தாலாட்டுப் பாடி ஆட்டும் தாய்
- ↑ சோறூட்டும் தாய்
- ↑ முலைப்பால் ஊட்டும் பெற்ற தாய்
- ↑ குழந்தையைக் கையில் வைத்திருக்கும் தாய்
- ↑ செவ்விய முறையில் வளர்க்கும் தாய்
- ↑ பூமயிர் மெத்தை
- ↑ இலவம் பஞ்சு மெத்தை
- ↑ அன்னத்தின் தூவியாலான மெத்தை
- ↑ பயிற்றம்பூ திணித்த மெத்தை
- ↑ குருத்துரோகம்
- ↑ உன்மத்தம் செய்து மயக்கும்
- ↑ தீரம் தந்து வலிமை உள்ளவனாக்கும்
- ↑ சந்தாபம் தந்து சுடும்
- ↑ வசீகரணம் செய்து அழகில் ஆழ்த்தும்
- ↑ அழகேற்றி மோகனம் செய்யும்
- ↑ திருக்குறள் 381
- ↑ வருணம் காப்பில் பிறழா நெறிநிலை, பெறு வன்பொருளால் பேணும் பெற்றி
- ↑ ஆனிரை மீட்டல், அரும் வகை தெறுதல், ஊனமில் செஞ்சொல் உதவிப் போர்வயின் ஈனம் செய்தல்
- ↑ நெறிவழி நின்று நெறியால் உழந்து பெறும் பொருள்
- ↑ அமர் உழந்து கொண்டனவும் அதுந்திறை கொண்டனவும் தவறு செய் தீயோர் தண்டப் பொருளும் கவர் சூது வென்றவும்
- ↑ ஒத்த குலம் ஒத்த ஆயுள், ஒத்த செல்வம், ஒத்த நலன் உடைய ஆண்-பெண் உறவு
- ↑ ஏறு தழுவல், இலக்கம் எய்தல், கூறு பொருள் கொடுத்தல் வலிதிற் கோடல், மாறுபடு நிலை
- ↑ பாடாண்டத்தொகை (பிரபந்தம்) 96 வகை.
- ↑ இனிப்பு
- ↑ காரம்
- ↑ ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்
- ↑ ஓதல், வேட்டல், புரை தீரப் பெரும் பார்ப்பாரைப் புரத்தல், ஈதல், கரையில்லாத படைக்கலம் கற்றல் (படைக்கலப் பயிற்சி), பகைவெல்ல்ல் (விசயம்)
- ↑ ஓதல், வேட்டல், ஈதல், உழவு, பசுக்காவல், வாணிகம்
- ↑ உழவு, பசுக்காவல், வாணிபம், குயிலுவம், காருகம் குயிலுவம்
- ↑ குயிலுவம் என்பது வாத்தியம் கொட்டுதல்.
- ↑ காருகம் என்பது பருத்தி நூலாலும், பட்டு நூலாலும் ஆடை நெய்து சுமந்து விற்றல்.
- ↑ திருக்குறள் 735, 736
- ↑ பித்து
- ↑ நூலில் முதற்சீர் மூவசைச் சீராக அமையும் பாங்கு
- ↑ தலைவனை நிலம், நீர், மதி, இயமானன் ஆகியோருக்கு உரிய சீர்க்கணம் வைத்துப் பாடினால் தலைவனுக்கு ஊனம் உண்டாகும்
- ↑ நேர்நிரைநிரை, கூவிளங்கனி வாய்பாடு
- ↑ நிரைநேர்நிரை, புளிமாங்கனி வாய்பாடு
- ↑ நிரைநிரைநேர், கருவிளங்காய் வாய்பாடு
- ↑ நேர்நேர்நேர், தேமாங்காய் வாய்பாடு
- ↑ வெட்டவெளி
- ↑ நிரைநேர்நேர், புளிமாங்காய் வாய்பாடு
- ↑ நேர்நிரைநேர், கூவிளங்காய் வாய்பாடு
- ↑ நேர்நேர்நிரை, தேமாங்கனி வாய்பாடு
- ↑ 61.0 61.1 காற்று
- ↑ நிரைநிரைநிரை, கருவிளங்கனி வாய்பாடு
- ↑ கண்ணோட்டம்
- ↑ விளைவு
- ↑ விசிறி
- ↑ முகூர்த்தம், முழுத்தம்
- ↑ தீ
- ↑ கொல்லா விரதம், மெய்மை கூறல், கள்ளாமை, பிறர் பொருள்மேல் காதல் இன்மை
- ↑ தவம், தூய்மை, தத்துவ-நூல் ஓர்தல், மனம் உவந்திருத்தல், தெய்வம் வழிபடல்
- ↑
1 வெண்பாச் சூத்திரம்
- வெட்சி நிரைகவர்தல், மீட்டல் கரந்தையாம்
- வட்கார்மேற் செல்வது வஞ்சியாம் – உட்கார்
- எதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
- அதுவளைத்தல் ஆகும் உழிஞை.
- அதிரப் பொருவது தும்பை ஆகும்
- போர்க்களத்து மிக்கார் செருவென்றது வாகையாம்
- அத்திணைத் தொழிலும் அத்திணைப் பூவும்
- அப்பெயர் பெறுதல் அந்நிலத்து உரியவே
- ↑ எளிமை
- ↑ ஏளனம்
- ↑ அமைச்சர்
- ↑ செயலாளர்
- ↑ இறை செலுத்தும் குறுநில மன்னர்
- ↑ மிகைநூல்(ஔரிதம்),
- ↑ மிகைநூல்கள் (வசிட்டலைங்கம், வாருணம்)
- ↑ 18 எனக் காட்டும் இதனுள் 20 உள்ளன.
- ↑ வார்த்தையணி
- ↑ அந்தாதி
- ↑ போக்கற்ற முடம், குருடு முதலானோர் சாலை
- ↑ பிள்ளைச்சோறு
- ↑ பிள்ளைப்பேறு பார்த்தல்
- ↑ ஆதரவற்றோர் பிணங்களை எரித்தல்
- ↑ அறநிலையங்களை விளக்குமாற்றால் கூட்டுதல்