சோகல் (Sogal) என்பது இந்தியாவின் கர்நாடகாவின் பெல்காம் மாவட்டத்திலுள்ள சௌந்தட்டி அருகேயுள்ள ஒரு இடமாகும். இப்பகுதியில் வாழ்ந்ததாக நம்பப்படும் சுகோலா முனிவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. ஆனால் ஒரு கல்வெட்டு "சோவாலா" பற்றி பேசுகிறது. ஒரு மலைப்பாதையில் அமைந்துள்ள சோகலில் சோமேசுவரர் கோயில் உட்பட பல கோயில்கள் உள்ளன. மேலும் இது பழங்கால ஆர்வத்தையும் கொண்டுள்ளது.[1]

கர்நாடகாவின் சௌந்தட்டி அருகே அமைந்துள்ள சோகல்
கர்நாடகாவின் சௌந்தட்டி அருகே அமைந்துள்ள சோகல்

புராணக் கதை

தொகு

மத போதனைகளைக் கேட்க புலிகள் இங்கு வந்ததாக உள்ளூர் நாட்டுப்புறக் கதைகள் கூறுகின்றன. அருகிலுள்ள கல்யாண மண்டபம் இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு சிவன் மற்றும் பார்வதியின் திருமணம் நடந்ததாக ஒரு கதைக் கூறப்படுகிறது. பாசிங்கம் மற்றும் பிற பாரம்பரிய ஆபரணங்களுடன் கூடிய சிவன் சிலை ஒன்று உள்ளது. இந்த பகுதியில் யமன், அக்னி, ஈசானியன், இந்திரன் உட்பட அஷ்டதிக்பாலகர்களின் சிலைகளும் உள்ளன. இந்த கலைப்பொருட்கள் அந்தக் காலத்தின் கலை சாதனைகளுக்கு எடுத்துக்காட்டுகளாக திகழ்கிறது.

கோயில்கள்

தொகு

சோகலின் கிழக்கே உள்ள மலையில் ஒரு பழையக் கோட்டை ஒன்று இடிபாடுகளுடன் காணப்படுகிறாது. உள்ளூரில் இது கதம்பராயன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது - ஒருவேளை கதம்ப மன்னரின் பெயரால் இது அழைக்கப்பட்டிருக்கலாம். இந்த கோயிலின் கிழக்கே அஜ்ஜப்பனா கோயில் ஒன்றும், ஒரே கல்லாலான சூரியன்- சந்திரன் சன்னதியும் இங்கே உள்ளது. சோமேசுவரர் கோயிலுக்கு அருகில் கிரிஜாதேவி கோயில் என்று அழைக்கப்படும் சிறிய சன்னதியும் உள்ளது. ஆனால் கட்டிடம் பாழடைந்த நிலையில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Sogal Someshwar Temple, Belgaum". Native Planet.

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோகல்&oldid=3806389" இலிருந்து மீள்விக்கப்பட்டது