ஹூலி (Hooli) என்பது இந்தியாவின் கர்நாடகாவில் பெல்காம் மாவட்டத்தின் சௌந்தட்டியிலிருந்து சுமார் 9 கி.மீ.தொலைவிலுள்ள ஒரு நகரமாகும். பெல்காம் மாவட்டத்தின் பழமையான கிராமங்களில் ஒன்றான இங்கு, பஞ்சலிகேசுவரர் கோயில், திரிகூடேசுவரர் கோயில் ஆகியவை அமைந்துள்ளது. வரலாற்று ரீதியாக புகழ் பெற்ற இது ஒரு மலையின் மேல் பாழடைந்த கோட்டையையும், ஏராளமான கோவில்களையும் கொண்டுள்ளது. இந்த ஊர் சௌந்தட்டியின் இராட்டாக்கள், இராமதுர்க்கத்தின் பட்வர்தன்கள் ஆகியோரின் ஆட்சியில் இருந்துள்ளது. மேலும், பெரும்பாலான கோயில்கள் சாளுக்கிய கட்டிடக்கலை அம்சங்களைக் கொண்டுள்ளது. சைன நினைவுச்சின்னங்கள் இங்கு ஆரம்பத்தில் சாளுக்கிய ஆட்சியைக் குறிக்கிறது. கிராமத்தின் பெயர் பூவள்ளி (காதுக்கான பூத்தோடு) என்பதிலிருந்து மாறியிருக்கலாம். இந்த கிராமம் பண்டைய காலங்களில் மகிசிபதிநகர் என்றும் அழைக்கப்பட்டது

ஹூலி
நகரம்
பஞ்சலிங்கேசுவரர் கோயில், ஹூலி
பஞ்சலிங்கேசுவரர் கோயில், ஹூலி
ஹூலி is located in கருநாடகம்
ஹூலி
ஹூலி
கர்நாடகாவில் ஹூலியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 15°47′00″N 75°07′00″E / 15.7833°N 75.1167°E / 15.7833; 75.1167
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெல்காம்
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுஐஎன்-கேஏ
வாகனப் பதிவுகேஏ-24
அண்மை நகரம்சௌந்தட்டி
இணையதளம்karnataka.gov.in

ஹூலி கோயில்கள் தொகு

இங்குள்ள பஞ்சலிங்கேசுவரர் கோயிலின் அழகிய கட்டிடக்கலை போற்றப்பட வேண்டிய ஒன்றாகும். இது இந்திய தொல்பொருள் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும். முன்னதாக, கோடைக் காலங்களில் மக்கள் இந்த கோவிலின் நிழலில் ஓய்வெடுப்பார்கள். கோயில் கல்லால் ஆனதால், சுட்டெரிக்கும் கோடையில் கூட நம்பமுடியாத குளிர்ச்சி காணப்படுகிறது. [1]

இந்தக் கோயிலுக்கு எதிரே நவீன ஹரி மந்திர் ஒன்று உள்ளது. ஞானேஷ்வரால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ள சாந்த் கலாச்சாரம் அல்லது நாத சைவப் பாரம்பரியம் இங்கு செழித்தது.

ஹூலியில் உள்ள பிற கோவில்கள் பின்வருமாறு: [2]

 • அந்தகேசுவரர் கோயில்
 • பவானிசங்கர கோயில்
 • காலமேசுவரர் கோயில்
 • காசி விசுவநாதர் கோயில்
 • மதனேசுவரர் கோயில்
 • சூர்யநாராயணன் கோயில்
 • தாருகேசுவரர் கோயில்
 • ஹூலி சங்கமேசுவர் அஜ்ஜனாவரு கோயில்
 • பீர்தேவர் கோயில், ஹூலி

கேலரி தொகு

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஹூலி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 1. "HOOLI PANCHALINGESHWAR TEMPLE". Archived from the original on 2009-03-09. பார்க்கப்பட்ட நாள் 2008-08-07.
 2. "Monuments at Hooli". Archived from the original on 2008-12-01. பார்க்கப்பட்ட நாள் 2008-11-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹூலி&oldid=3136284" இலிருந்து மீள்விக்கப்பட்டது