சோக்லம்சர்
சோக்லம்சர் (Choglamsar) இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியில் அமைந்த லே மாவட்டத்தில் பாயும் சிந்து ஆற்றின் கரையில் அமைந்த சிற்றூர் ஆகும்.[1] [2]சோக்லம்சர் ஊரில் ஆண்டுதோறும் சூன் மாத குரு பூர்ணிமாவை ஒட்டி 3 நாட்கள் சிந்து தர்சன விழா கொண்டாடப்படுகிறது.
சோக்லம்சர் | |
---|---|
சிற்றூர் | |
இந்தியாவின் லடாக்கில் சோக்லம்சர் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 34°07′07″N 77°35′20″E / 34.1185°N 77.5889°E | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி | லடாக் |
மாவட்டம் | லே மாவட்டம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 10,754 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 194101 |
வாகனப் பதிவு | LA- |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சோக்லம்சர் ஊரின் மொத்த மக்கள் தொகை 10,754 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 648 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 79.01% ஆக உள்ளது. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 881 ஆக உள்ளனர். மக்கள் தொகையில் பௌத்தர்கள் 68.67%, இந்துக்கள் 26.41%, இசுலாமியர்கள் 3.68% மற்றும் மற்றவர்கள் 1.24% ஆக உள்ளனர்.[3]
உள்கட்டமைப்புகள்
தொகுஇவ்வூரில் இந்திய அரசு மற்றும் திபெத்தியர்களின் மைய நிர்வாகம் இணைந்து திபெத்திய அகதிகள் முகாம் நடத்துகிறது.[2][4]
2010-ஆம் ஆண்டில் இப்பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் இவ்வூர் மிகவும் பாதிக்கப்பட்டது.[5]
இவ்வூரில் 3 நடுநிலைப் பள்ளிகள், 3 உயர்நிலைப் பள்ளிகள், 1 மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்திய அரசு 2016-இல் இவ்வூரில் பௌத்த படிப்புகளுக்கான மைய நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகத் தகுதியுடன் துவக்கப்பட்டது. [6]
இவ்வூரில் பாயும் சிந்து ஆற்றின் கரைகளை இணைக்க நீளமான மைத்திரி தொங்கு பாலம் 2019-ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தினரால் கட்டப்பட்டது.[7]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Village directory: Jammu & Kashmir" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2020-02-07.
- ↑ 2.0 2.1 Vanessa Betts; Victoria McCulloch, eds. (2013). India - The North. Footprint. p. 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-907263-74-3.
- ↑ Chuglamsar Population Census 2011
- ↑ Punohit, Kunal (24 September 2020). "Tibetan SFF soldier killed on India-China border told family: 'we are finally fighting our enemy'". South China Morning Post. https://scmp.com/week-asia/politics/article/3102744/tibetan-sff-soldier-killed-india-china-border-told-family-we-are. பார்த்த நாள்: 24 September 2020. "Choglamsar, one of more than 45 “settlements” – special colonies for Tibetan refugees – constructed by the Central Tibetan Authority (CTA), the Tibetan government-in-exile and Indian authorities."
- ↑ Radek Kucharski (2015). Trekking in Ladakh. Cicerone Press. p. 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78362-262-7.
- ↑ "Central Institute of Buddhist Studies (CIBS) shall be a deemed-to-be-university, provisionally for a period of five years, under the de novo category". Press Information Bureau. 27 January 2016. https://pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=135856.
- ↑ "Longest suspension bridge over Indus river opens to public". Business Today. 3 April 2019. https://www.businesstoday.in/current/economy-politics/longest-suspension-bridge-over-indus-river-opens-to-public-heres-all-you-need-to-know/story/333520.html.