சோடியம் அலுமினேட்டு

வேதிச் சேர்மம்

சோடியம் அலுமினேட்டு (Sodium aluminate) என்பது NaAlO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பல்வேறு தொழில்துறை மற்றும் தொழில் நுட்பப் பயன்பாடுகளைக் கொண்ட சோடியம் ஐதராக்சைடு காரத்தை தயாரிப்பதற்கு உதவும் ஒரு திறனுள்ள மூலப்பொருளாக இது கருதப்படுகிறது. தூய்மையான நிரற்ற சோடியம் அலுமினேட்டு வெண்மை நிறத்தில் படிகத் திண்மமாகக் காணப்படுகிறது. இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாடு NaAlO2, NaAl(OH)4 (நீரேறியது), Na2O•Al2O3, அல்லது Na2Al2O4 என்று பல்வேறு விதமாக குறிக்கப்படுகிறது[2]. வர்த்தக முறையிலான சோடியம் அலுமினேட்டு நீர்மம் அல்லது திண்ம நிலையில் கிடைக்கிறது. தொடர்புடைய பிற சேர்மங்கள் சில சமயங்களில் சோடியம் அலுமினேட்டு என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. இவை சோடியம் ஆக்சைடு மற்றும் அலுமினியம் ஆக்சைடுகள் வினை புரிவதால் Na5AlO4 கிடைக்கிறது. இதில் வெவ்வேறான AlO45− எதிர்மின் அயனிகள், Na7Al3O8, மற்றும் அணைவு பல்பகுதி எதிர்மின் அயனியைக் கொண்டுள்ள Na17Al5O16 மற்றும் ஒரு காலத்தில் தவறுதலாக பீட்டா-அலுமினா என்று கருதப்பட்ட அலுமினியம் ஆக்சைடின் ஒரு நிலையான NaAl11O17 போன்ற வகைகள் காணப்படுகின்றன[3][4].

சோடியம் அலுமினேட்டு
சோடியம் மெட்டா அலுமினேட்டு மாதிரி
பெயர்கள்
வேறு பெயர்கள்
சோடியம் அலுமினியம் ஆக்சைடு
சோடியம் மெட்டா அலுமினேட்டு
அலுமினேட்டு, ((AlO2)1−),
இனங்காட்டிகள்
1302-42-7 Y
EC number 215-100-1
InChI
  • InChI=1S/Al.Na.2O/q-1;+1;;
    Key: IYJYQHRNMMNLRH-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14766
SMILES
  • O=[Al-]=O.[Na+]
பண்புகள்
NaAlO2
வாய்ப்பாட்டு எடை 81.97 கி/மோல்
தோற்றம் வெண்மையான தூள் (சிலசமயங்களில் இள மஞ்சள்)
நீருறிஞ்சும்/ நீரில் கரையும்போது கருப்பு நிற கூழ்மத்துகள் உருவாகும்.
மணம் நெடியற்றது
அடர்த்தி 1.5 கி/செ.மீ3
உருகுநிலை 1,650 °C (3,000 °F; 1,920 K)
நன்றாகக் கரையும்
கரைதிறன் ஆல்ககாலில் கரையாதுl[1]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.566
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-1133.2 கிலோயூல்/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
70.4 யூல்/மோல் கெல்வின்
வெப்பக் கொண்மை, C 73.6 யூல்/மோல் கெல்வின்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

கட்டமைப்பு தொகு

நீரற்ற சோடியம் அலுமினேட்டு, NaAlO 2, மூலையில் இணைக்கப்பட்ட ALO 4 நான்முகியுடன் ஒரு முப்பரிமாண கட்டமைப்பை கொண்டுள்ளது. நீரேறிய வடிவமான NaAlO 2 • 5/4H 2 O என்ற வடிவத்தில் AlO 4 நான்முகி அடுக்குகள் வளையங்களாக இணைந்துள்ளன மற்றும் அடுக்குகள் சோடியம் அயனிகளுடன் நீர் மூலக்கூறுகளால் ஒன்றிணைக்கப்படுகின்றன, அவை AlO 4 சேர்மத்திலுள்ள நான்முகியில் ஆக்சிசன் அணுக்களுடன் ஐதரசன் பிணைப்பை ஏற்படுத்துகின்றன.

பெருமளவில் தயாரித்தல் தொகு

அலுமினியம் ஐதராக்சைடை சோடியம் ஐதராக்சைடு கரைசலில் கரைத்து சோடியம் அலுமினேட்டு பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. அலுமினிய ஐதராக்சைடு ( கிப்சைட் ) 20-25% நீரிய சோடியம் ஐதராக்சைடு கரைசலில் அதன் கொதி நிலைக்கு அருகிலுள்ள வெப்பநிலையில் கரைக்க முடியும்.. அதிக செறிவூட்டப்பட்ட NaOH கரைசல்களின் பயன்பாடு அரை-திண்ம பொருட்கள் தயாரிப்புக்கு வழிவகுக்கிறது. இந்த செயல்முறையை நிக்கல் அல்லது எஃகு உலோகத்தால் ஆன நீராவியால் சூடுபடுத்தக்கூடிய பாத்திரங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும், மேலும் அலுமினியம் ஐதராக்சைடு ஒரு கூழாக உருவாகும் வரை சுமார் 50% நீர்த்த சோடியம் ஐதராக்சைடுடன் சேர்த்து வினைபுரிய வைக்க வேண்டும். இறுதி கலவையை ஒரு தொட்டியில் ஊற்றி குளிர்விக்க வேண்டும்; சுமார் 70% NaAlO 2 சேர்மத்தைக் கொண்ட ஒரு திண்ம நிறை பின்னர் உருவாகிறது. நன்றாக நொறுக்கப்பட்ட பிறகு, இந்த தயாரிப்பு ஒரு சுழலும் அடுப்பில் நீர் நீக்கம் செய்யப்படுகிறது. இதன் விளைவாக 90% NaAlO 2 மற்றும் 1% நீர், மற்றும் 1% தனி NaOH போன்றவை உருவாகின்றன.

2Al + 2NaOH + 2H2O → 2NaAlO2 + 3H2

இருப்பினும் கரைசலில் இச்சேர்மம் தயாரிக்கப்படும்போது [Al(OH)4] அயனி அல்லது ஒருவேளை [Al(H2O)2(OH)4] அயனியைப் பெற்றிருக்கக் கூடும் [5]

வினைகள் தொகு

சோடியம் ஐதராக்சைடு தனிம நிலை அலுமினியத்துடன் வினை புரிந்து சோடியம் அலுமினேட்டு உருவாகிறது, இது ஓர் ஈரியல்பு நிலை உலோகமாகும். இவ்வினை ஓர் உயர் வெப்பம் உமிழ் வினையாகும். வினை தொடங்கியதும் ஐதரசன் வாயுவின் வெளியீடும் உடன் நிகழ்கிறது. வினை சில நேரங்களில் கீழுள்ளவாறு எழுதப்படுகிறது:

பயன்கள் தொகு

நீர் சுத்திகரிப்பில் சோடியம் அலுமினேட்டு நீர் மென்மையாக்க அமைப்புகளுக்கு ஒரு இணைப்பாகவும், கூழ்மத்துகள்களை மேம்படுத்துவதற்கான ஓர் உறை பொருள்உதவியாகவும், கரைந்த சிலிக்கா மற்றும் பாசுப்பேட்டுகளை அகற்றவும் பயன்படுத்தப்படுகிறது. கட்டுமான தொழில்நுட்பத்தில், கருங்கற் குழம்பை திண்மமாக்கும் செயலை துரிதப்படுத்த முக்கியமாக உறைபனியின் போது வேலை செய்கையில் சோடியம் அலுமினேட்டு பயன்படுத்தப்படுகிறது, சோடியம் அலுமினேட்டு காகிதத் தொழிலிலும், தீ செங்கல் உற்பத்தி, அலுமினா உற்பத்தி போன்ற தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. சோடியம் அலுமினேட்டு கரைசல்கள் சியோலைட்டுகளின் உற்பத்தியில் இடைநிலைகளாகப் பயன்படுகிறது

மேற்கோள்கள் தொகு

  1. The Merck Index. 10th ed. Rahway, New Jersey: Merck Co., Inc., 1983., p. 1229
  2. "Aluminium". chemguide.co.uk.
  3. "Identification and characterisation of three novel compounds in the sodium–aluminium–oxygen system", Marten G. Barker, Paul G. Gadd and Michael J. Begley, J. Chem. Soc., Dalton Trans., 1984, 1139–1146, எஆசு:10.1039/DT9840001139
  4. Egon Wiberg, Arnold Frederick Holleman (2001) Inorganic Chemistry, Elsevier ISBN 0-12-352651-5
  5. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_அலுமினேட்டு&oldid=2932301" இலிருந்து மீள்விக்கப்பட்டது