சோடியம் டிரைமெட்டாபாசுப்பேட்டு
சோடியம் டிரைமெட்டாபாசுப்பேட்டு (Sodium trimetaphosphate) என்பது Na3P3O9 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தை சோடியம் மும்மெட்டாபாசுப்பேட்டு என்ற பெயராலும் அழைக்கலாம். சோடியத்தின் மெட்டாபாசுப்பேட்டு உப்பு என்றும் டிரைமெட்டாபாசுபாரிக் அமிலத்தின் சோடியம் உப்பு சோடியம் டிரைமெட்டாபாசுப்பேட்டு என்றும் கருதப்படுகிறது. NaPO3 என்ற அனுபவ வாய்ப்பாட்டாலும் இதை அடையாளப்படுத்துவார்கள். நிறமற்ற திண்மமாக காணப்படும் இச்சேர்மம் உணவு மற்றும் கட்டுமான தொழிற்சாலைகளில் சிறப்புப் பயன்பாட்டைப் பெற்ற சேர்மமாக கருதப்படுகிறது. சோடியம் பாலிபாசுப்பேட்டை சில நூறு பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தி சோடியம் டிரைமெட்டாபாசுப்பேட்டு தயாரிக்கப்படுகிறது [2].
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
சோடியம் டிரைமெட்டாபாசுப்பேட்டு
| |
இனங்காட்டிகள் | |
7785-84-4 | |
EC number | 232-088-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24579 |
| |
பண்புகள் | |
Na3P3O9 | |
வாய்ப்பாட்டு எடை | 305.885 கி/மோல் |
தோற்றம் | நிறமற்றது அல்லது வெண்மை நிற படிகங்கள் |
அடர்த்தி | 2.49 கி/செ.மீ3 (நீரிலி) 1.786 கி/செ.மீ3 (அறுநீரேற்று) |
உருகுநிலை | 53 °C (127 °F; 326 K) அறுநீரேற்று, நீரிலியாக சிதைவடையும் |
22 கி/100 மி.லி | |
கரைதிறன் | ஆல்ககாலில் கரையும் |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.433 (அறுநீரேற்று) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | முச்சாய்வு (அறுநீரேற்று) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஒரு குறிப்பிட்ட ஒத்திசைவுக் கட்டமைப்பினை இச்சேர்மம் பெற்றிருந்தாலும் இம்மூவெதிர்மின் அயனி D3d சீர்மையைக் கொண்டதாக உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ed.). Boca Raton, Florida: CRC Press. pp. 4–86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2.
- ↑ Klaus Schrödter; Gerhard Bettermann; Thomas Staffel; Friedrich Wahl; Thomas Klein; Thomas Hofmann (2008). Phosphoric Acid and Phosphates. Ullmann’s Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a19_465.pub3.