சோடியம் டெட்ராகுளோரோ அலுமினேட்டு
சோடியம் டெட்ராகுளோரோ அலுமினேட்டு (Sodium tetrachloroaluminate) என்பது NaAlCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தை சோடியம் நாற்குளோரோ அலுமினேட்டு என்றும் இலத்தின் மொழியில் சேடியத்தை நேட்ரியம்[1] என்ற பெயரால் அழைப்பதால் இதை நேட்ரியம் குளோரோ அலுமினேட்டு என்ற பெயர்களாலும் அழைக்கலாம். 20 ஆம் நூற்றாண்டில் இச்சேர்மம் கண்டறியப்பட்டது. சோடியம் குளோரைடுடன் அலுமினியம் டிரைகுளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து சோடியம் டெட்ராகுளோரோ அலுமினேட்டை தயாரிக்கிறார்கள்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம் குளோரோ அலுமினேட்டு
| |
வேறு பெயர்கள்
நேட்ரியம் குளோரோ அலுமினேட்டு, சோடியம் டெட்ராகுளோரோ அலுமினேட்டு
| |
பண்புகள் | |
NaAlCl4 | |
வாய்ப்பாட்டு எடை | 191.78331 கி/மோல் |
உருகுநிலை | 157 °செல்சியசு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பயன்
தொகுஉருகிய நிலையில் உள்ள சோடியம் டெட்ராகுளோரோ அலுமினேட்டை ஒரு மின்பகுளியாக சோடியம்-நிக்கல் குளோரைடு மின்கலங்களில் பயன்படுத்துகிறார்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Newton, David E. (1999). Baker, Lawrence W. (ed.). Chemical Elements. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7876-2847-5. இணையக் கணினி நூலக மைய எண் 39778687.