சோண்டேகொப்பா

கருநாடக சிற்றூர்

சோண்டேகொப்பா (Sondekoppa) என்பது இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள சிற்றூர் ஆகும். கெம்பேகவுடா ஆட்சியின் போது பின்னிபேட்டை சோண்டேகொப்பாவின் நுழைவாயில் என்று அழைக்கப்பட்டது. கிராமத்தின் மக்கள் தொகை சுமார் 15000 ஆகும்.

சோண்டேகொப்பா
சிற்றூர்
சோண்டேகொப்பா is located in கருநாடகம்
சோண்டேகொப்பா
சோண்டேகொப்பா
கருநாடகத்தில் அமைவிடம்
சோண்டேகொப்பா is located in இந்தியா
சோண்டேகொப்பா
சோண்டேகொப்பா
சோண்டேகொப்பா (இந்தியா)
ஆள்கூறுகள்: 13°00′N 77°22′E / 13.000°N 77.367°E / 13.000; 77.367
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
562130
வாகனப் பதிவுKA-
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)
அருகில் உள்ள நகரம்பெங்களூர்
மக்களவைத் தொகுதிசிக்கபள்ளாபூர்

கோயில்கள்

தொகு

இந்த ஊரில் மூன்று கோயில்கள் உள்ளன. அதில் இரண்டு சிவன் கோயில்கள் பல நூற்றாண்டுகள் பழமையானவை. அவை காசி விசுவநாதர் கோயில் மற்றும் சந்திரமௌலீசுவரர் கோயில் ஆகும். அடுத்து சுமார் 25 ஆண்டுகள் பழமையான விஷ்ணு கோயில் உள்ளது. இந்த கிராமத்தில் சென்னகேசவர் கோயில் உள்ளது. இது தெப்போற்சவாவுக்கு பெயர் பெற்றது.[சான்று தேவை] ஜாத்ரே எனப்படும் தேர்த் திருவிழா இந்த கிராமத்தில் பிரபலமானது. அது 7 நாட்கள் பூசை மற்றும் பிற செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.[சான்று தேவை] ஒரு சிவன் கோயில் சுமார் 800 ஆண்டுகள் பழமையானது மற்றும் கோயிலுக்கு எதிரே ஒரு ஏரி உள்ளது. அண்மையில் கிராமவாசிகளால் தர்மஸ்தல அறக்கட்டளையின் உதவியுடன் கோயில் புதுப்பிக்கப்பட்டது[எப்போது?] கார்த்திகை மாத, மகா சிவராத்திரி மற்றும் அனைத்து முக்கிய பண்டிகைகளின் போதும் சிறப்பு வழிபாடு நடத்தபடுகிறது.[சான்று தேவை]

கல்வி

தொகு

கிராமத்தில் தொடக்க மற்றும் உயர் தொடக்கப்பள்ளிகள் உள்ளன. தொடக்கப்பள்ளியில் சுமார் 500 மாணவர்களும், உயர் தொடக்கப்பள்ளியில் சுமார் 300 மாணவர்களும் பயில்கின்றனர். தனியார் உயர்நிலைப் பள்ளியும், அரசு தொடக்கப் பள்ளியும் உள்ளது.

பொருளாதாரம்

தொகு

இந்த ஊரில் 70% மக்கள் வேளாண்மையை நம்பியே வாழ்கின்றனர். அவர்கள் கேழ்வரகு, நெல் மற்றும் பல்வேறு வகையான பருப்புகளை பயிரிடுகின்றனர். ஏராளமான மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் பால் சேகரிப்பு மையம் இங்கு உள்ளது.

தடுப்பு மையம்

தொகு

கர்நாடக தடுப்பு மையம் ஒன்று சொண்டேகொப்பாவில் கட்டப்பட்டு வருகிறது. இது 2020 சனவரி முதல் நாள் முதல் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது [1] [2] மையத்தைச் சுற்றி 10 அடி உயர சுவர் முள்வேலிகளுடன் அமைக்கபட்டுள்ளன. மேலும் வளாகத்தின் இரண்டு மூலைகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் இருக்கும். [3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோண்டேகொப்பா&oldid=3749851" இலிருந்து மீள்விக்கப்பட்டது