சோனாலி சக்கரவர்த்தி பானர்ஜி
சோனாலி சக்கரவர்த்தி பானர்ஜி (Sonali Chakravarti Banerjee) ஓர் இந்திய கல்வியாளர் ஆவார். இவர் தற்போது கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளார்.[1]
சோனாலி சக்கரவர்த்தி பானர்ஜி | |
---|---|
கொல்கத்தா பல்கலைக்கழகம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 15 ஜூலை 2017 | |
அதிபர் | மேற்கு வங்காள ஆளுநர் |
முன்னையவர் | அசுதோஷ் கோஷ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியா |
துணைவர் | அலபன் பந்தோபாத்யாய் |
வேலை | கல்வியாளர் |
சுயசரிதை
தொகுபானர்ஜி, கொல்கத்தாவின் மாநிலக் கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்தார் பின்னர், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலையையும் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.[2] ஆகஸ்ட் 2017இல், கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அப்போதைய துணைவேந்தர் சுரஞ்சன் தாஸ் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டார்.
பெங்காலி கவிஞர் நரேந்திரநாத் சக்கரவர்த்தியின் மகளான இவர் மேற்கு வங்காள முதல்வரின் தலைமை ஆலோசகராக பணியாற்றும் அலபன் பந்தோபாத்யாய் என்பவரை மணந்தார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vice-Chancellors". www.caluniv.ac.in. University of Calcutta. Archived from the original on 20 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 4 May 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "SCB" (PDF). Archived from the original (PDF) on 4 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 4 May 2019.
- ↑ "Interim VC at CU, again" (in en). The Telegraph (india). https://www.telegraphindia.com/states/west-bengal/interim-vc-at-cu-again/cid/1404145. பார்த்த நாள்: 4 May 2019.