அலபன் பந்தோபாத்யாய்

இந்திய ஆட்சிப் பணி அதிகாரி

அலபன் பந்தோபாத்யாய் (Alapan Bandyopadhyay) (பிறப்பு 17 மே 1961) முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும், மேற்கு வங்காள அரசின் முன்னாள் தலைமைச் செயலாளருமாவார். இவர் 1 ஜூன் 2021 முதல் முதல்வர் மம்தா பானர்ஜியின் முதன்மை ஆலோசகராக இருக்கிறார்.[2] [3]

அலபன் பந்தோபாத்யாய்
ஓய்வு பெற்றஇந்திய ஆட்சிப் பணி அதிகாரி
மேற்கு வங்காள அரசின் தலைமைச் செயலாளர்
பதவியில்
1 அக்டோபர் 2020 – 31 மே 2021
ஆளுநர்ஜகதீப் தன்கர்
முன்னையவர்இராஜிவா சின்கா
பின்னவர்ஹரிகிருஷ்ணா திவேதி
மேற்கு வங்காளத்தின் முதலமைச்சரின் முதல் தலைமை ஆலோசகர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 ஜூன் 2021
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 மே 1961 (1961-05-17) (அகவை 63)[1]
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம் இந்தியா
துணைவர்சோனாலி சக்கரவர்த்தி பானர்ஜி
உறவுகள்அஞ்சன் பந்தோபாத்யாய் (சகோதரர்)

தொழில்

தொகு

அலபன், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி தொகுதி-1987இன் அதிகாரியாக இருந்தார். ஹவுரா, வடக்கு 24 பர்கனா மாவட்டம், தெற்கு 24 பர்கனா மாவட்டம் மாவட்டங்களின் மாவட்ட நீதிபதியாகவும் இருந்தார். கொல்கத்தா நகராட்சி ஆணையராகவும் பணியாற்றினார். போக்குவரத்து, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ), வர்த்தகம் மற்றும் தொழில், தகவல் மற்றும் கலாச்சாரம் மற்றும் உள்துறை ஆகிய பல துறைகளின் முதன்மை செயலாளராக இவர் பணியாற்றினார். 2015இல் இடைக்கால மாநில தேர்தல் ஆணையராகவும் பணியாற்றினார்.[2] இவர் 2017 இல் அம்லர் மோன் என்ற புத்தகத்தை எழுதினார். 31 மே 2021 அன்று ஓய்வு பெற்ற பின்னர், மேற்கு வங்கத்தின் தலைமை ஆலோசகராக 1 ஜூன் 2021 முதல் 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார்.

சொந்த வாழ்க்கை

தொகு

இவர், மேற்கு வங்காளத்தின் ஆசான்சோலில் 1961இல் பிறந்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தரும் கல்வியாளருமான சோனாலி சக்கரவர்த்தி பானர்ஜியை மணந்தார். மேற்கு வங்கத்தில் கொரோனாவைரசுத் தொற்றின் முதல் அலையின் போது இவரும் இவரது மனைவியும் தனிமைப்படுத்தப்பட்டனர்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Civil List of IAS Officers
  2. 2.0 2.1 Sep 29, TNN / Updated; 2020; Ist, 07:28. "ALAPON Bandyopadhyay new West Bengal chief secretary, HK Dwivedi gets charge of home | Kolkata News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-02. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
  3. "Chief Minister's Office - Government of West Bengal". wbcmo.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-04-02.
  4. "How Mother of Bengal's First COVID-19 Patient 'Sent' State Home Secretary and 10 Others Into Isolation". www.news18.com (in ஆங்கிலம்). 2020-03-18. பார்க்கப்பட்ட நாள் 2021-04-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலபன்_பந்தோபாத்யாய்&oldid=3259098" இலிருந்து மீள்விக்கப்பட்டது