ஹரிகிருஷ்ணா திவேதி

இந்திய நிர்வாகி

ஹரி கிருஷ்ணா திவேதி (Hari Krishna Dwivedi) ஓர் இந்திய நிர்வாகி ஆவார். இவர் தற்போது 1 ஜூன் 2021 முதல் மேற்கு வங்காள அரசின் தலைமைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர், அலபன் பந்தோயோபாத்யாவிற்குப் பிறகு இப்பதவிக்கு வந்தார்.[1]

ஹரிகிருஷ்ணா திவேதி
மேற்கு வங்காள அரசின் தலைமைச் செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 ஜூன் 2021
ஆளுநர்ஜகதீப் தன்கர்
முதலமைச்சர்மம்தா பானர்ஜி
முன்னையவர்அலபன் பந்தோபாத்யாய்
மேற்கு வங்காள அரசின் உள்துறைச் செயலாளர்
பதவியில்
1 அக்டோபர் 2020 – 31 மே 2021
முன்னையவர்அலபன் பந்தோபாத்யாய்
பின்னவர்பி பி கோபாலிகா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 சூன் 1963 (1963-06-20) (அகவை 61)
கார்தோய், உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம் இந்தியா
வாழிடம்கொல்கத்தா

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

தொகு

திவேதி, 20 ஜூன் 1963 இல் உத்தரப் பிரதேசத்தில் பிறந்தார். வேதியியலில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார். ஜூலை 2021 இல், மேற்கு வங்காளத்தின் தலைமைச் செயலாளரான இவருக்கு, கொல்கத்தா பல்கலைக்கழகம் வளர்ச்சிப் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் வழங்கியது.[2] இலண்டன் பொருளியல் பள்ளியில் வளர்ச்சி பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும், புகழ்பெற்ற பத்திரிகைகளில் கட்டுரைகளை வெளியிட்டார்.

தொழில்

தொகு

திவேதி, முதலில் சில காலம் இந்திய வெளியுறவுப் பணியில் பணிபுரிந்து வந்தார். பின்னர், இந்திய ஆட்சிப் பணிக்கு மாற்றப்பட்டார். இவர், முன்பு மேற்கு வங்க அரசாங்கத்தில் உள்துறை, மலை விவகாரங்களில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்தார்.[3][4] கூடுதலாக, மேற்கு வங்க அரசாங்கத்தில் நாடாளுமன்ற விவகாரங்கள், திட்டமிடல் மற்றும் புள்ளியியல் மற்றும் திட்ட கண்காணிப்பு துறைகளின் செயலாளராகவும் இருந்தார்.[5] இவர் முன்பு நிதி அமைச்சகத்தில் மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளராகவும் இருந்தார்.[1]

திவேதி, நீண்ட காலமாக வணிக வரி ஆணையராகவும், கலால் துறையின் பொறுப்பாளராகவும் இருந்தார். 2012 முதல் மேற்கு வங்க மின் மேம்பாட்டு கழகத்தின் உறுப்பினராக உள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. "Calcutta University confers PhD in Development Economics to West Bengal Chief Secretary H K Dwivedi". edexlive.com. July 29, 2021. https://www.edexlive.com/news/2021/jul/29/calcutta-university-confers-phd-in-development-economics-to-west-bengal-chief-secretary-h-k-dwivedi-22883.html. 
  3. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  4. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  5. www.ETGovernment.com. "New Bengal chief secretary H K Dwivedi assumes charge, top IAS officer B S Gopalika named new home secretary - ET Government". ETGovernment.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிகிருஷ்ணா_திவேதி&oldid=3480731" இலிருந்து மீள்விக்கப்பட்டது