சோனா பனிப்பாறை

இந்தியப் பனிப்பாறை

சோனா பனிப்பாறை (Sona Glacier) என்பது இந்தியாவின் உத்தரகாண்டின் கிழக்குப் பகுதியில் பித்தோராகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இமயமலைப் பனிப்பாறை ஆகும்.[1]

சோனா
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Tibet" does not exist.
வகைபனிப்பாறை
அமைவிடம்குமாவுன் இமயமலை, உத்தராகண்டம், இந்தியா
ஆள்கூறுகள்30°14′N 80°27′E / 30.233°N 80.450°E / 30.233; 80.450
Map

நிலவியல் தொகு

சோனா பனிப்பாறை லஸ்ஸர் யாங்க்டி - தர்மா பள்ளத்தாக்கில் பஞ்சசூலியின் ஐந்து சிகரங்களின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. மியோலா பனிப்பாறையுடன், இது பிரபலமான பஞ்சுலி பனிப்பாறையின் கூட்டுப் பனிப்பாறையாக அமைந்துள்ளது. தவாகாட்-பெயிலிங்-சன்-டுக்டு வழியாகப் பனிமலை மலையேற்றமாக இங்குச் செல்லலாம். சோனா பனிப்பாறை மற்றும் மியோலா பனிப்பாறை ஆகியவை கிழக்கு நோக்கிய திசையிலிருந்து பஞ்சுலி சிகரங்களை ஏறுவதற்கான பாதையாக உள்ளது.[2] சோனா பனிப்பாறையானது மியோலா பனிப்பாறைக்கு வடக்கே அமைந்துள்ளது. இது நாகலாபு (6,410 மீ) மற்றும் பஞ்சசூலி-1 (6,355 மீ) சிகரங்களுக்குக் கீழே அமைந்துள்ளது. இது மேல் மற்றும் கீழ் பனிப்பாறை என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சோனா பனிப்பாறை தென்மேற்கிலிருந்து வடகிழக்காக உள்ளது. இது கிழக்கு முதல் பஞ்சசூலி மலை வரை அமைந்துள்ளது.

மேலும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனா_பனிப்பாறை&oldid=3392552" இலிருந்து மீள்விக்கப்பட்டது