சோனி எரிக்சன் கே770ஐ

சோனி எரிக்சன் கே770ஐ (Sony Ericsson K770i) எனப்படுவது சோனி எரிக்சன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு கையடக்கத் தொலைபேசி ஆகும்[1].

சோனி எரிக்சன் கே770ஐ
செப்டம்பர் 2007
திரை படவணுக்கள் (காற்பொது இடைநிலை வடிப்பு+), 262, 144 (18-துணுக்கு) நிற மென்படல மூவாயியியக்கும் படிக நீர்மத் திரை
கேமராதானியங்கிக் குவியத்துடன் 3.2 மெகாபிக்சல்
இரண்டாம் நிலை கேமராஒளித்தோற்ற அழைப்பு ஒளிப்படக்கருவி
உள்ளீடுவிசைப்பலகை
நினைவகம்32 மெகாபைற்று உள்ளக நினைவகம், ஒரு நினைவக அட்டைத் (நினைவகம் 2) துளை, 256 மெகாபைற்று நினைவக அட்டை (நினைவகம் 2) உள்ளடக்கப்பட்டுள்ளது.
பிணையங்கள்மூன்றாவது தலைமுறை, உநஒ 900/1800/1900
தொடர்பாற்றல்பொதுச் சிறு பொதி அலைச் சேவை, உயர்-வேகத் தகவற்சேவையிணைப்புத் தகவல்கள், திறக்கற்றை, அகிலத் தொடர்ப் பாட்டை
அளவு மில்லிமீற்றர்
வடிவம்மிட்டாய்ப்பட்டை

வசதிகள்

தொகு

இந்தக் கையடக்கத் தொலைபேசி மூன்றாவது தலைமுறை வசதி கொண்டதாகும். 30 பெற்ற, அழைத்த, தவறிய அழைப்புகளை இதனுடைய நினைவகத்தில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். இதனுடைய பொதுச் சிறு பொதி அலைச் சேவை வேகம் நொடிக்கு 32-48 கிலோபிற்றுகள் ஆகும். இதில் உநஒ பரிணாம வளர்ச்சிக்கான மேம்பட்ட தரவு வீத வசதி இல்லை. சோனி எரிக்சன் கே770ஐயின் மூலம் நொடிக்கு 384 கிலோபிற்றுகள் என்ற வேகத்தில் மூன்றாவது தலைமுறை மூலமாக இணையத்தில் இணைய முடியும். தொடர்பாடலுக்காக இந்தத் தொலைபேசி திறக்கற்றை, அகிலத் தொடர்ப் பாட்டை ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது. இந்தக் கையடக்கத் தொலைபேசியில் சாவாச் செயலிகளை நிறுவ முடியும். நிறுத்தற்கடிகாரத்தையும் படங்களில் மாற்றம் செய்வதற்கான மென்பொருளையும் இந்தக் கையடக்கத் தொலைபேசி கொண்டுள்ளது.[2]

இதையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனி_எரிக்சன்_கே770ஐ&oldid=1900854" இலிருந்து மீள்விக்கப்பட்டது