சோமண்டார்குடி

சோமண்டார்குடி எனும் அழகிய கிராமம், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் கள்ளக்குறிச்சி அருகே 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.[1]

கோமுகி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள இந்த ஊரில் தொன்மையான அருள்மிகு சோமநாத ஈஸ்வர் உடனுறை லோகாம்பாள் திருக்கோவில் உள்ளது. இக்கோயில் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தமிழர்களின் கலை, பண்பாடு ஆகியவகளைப் பிரதிபலிக்கும் இந்த ஊரில் வாழும் மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். குறிப்பாக கரும்பு, நெல் முக்கியமான சாகுபடிகளாகும்.

இவ்வூரைச் சார்ந்த பண்ணையத்தார் ஞான வள்ளளல் திரு அம்மாவாசியாப்பிள்ளை அவர்கள் சுதந்திரப் போராட்ட தியாகி, அத்துடன் திரு எஸ்.பி.பச்சையப்பன் ஒரு முறை எம்..எல். ஏ-ஆகவும். திரு எஸ் எஸ்.கலிதீர்த்தான் இருமுறை சட்ட மன்ற உறுப்பினராாகவும் பணியாற்றி உள்ளனர்.(சங்கராபுரம்)[சான்று தேவை]. கோமுகி ஆற்றிின் கரைகளில் , அடர்ந்த மரங்களும் மணற் பரப்பும் கொண்டிருந்த கோமுகி ஆறு இன்று களை இழந்து காணப்படுகிறது.இவ்வூரை சார்ந்த திரு க.காமராஜ் தற்போது கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார் .இவ்வூரின் சோமநாதர் ஆலயம் கடந்த 1.05.2015 அன்று மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது .

மேற்கோள்கள்

தொகு
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமண்டார்குடி&oldid=4099160" இலிருந்து மீள்விக்கப்பட்டது