சோமேசுவர சுவாமி கோவில், அப்பிகொண்டா

சிறீ சோமேஸ்வர சுவாமி கோயில் (Someswara Swamy Temple) என்பது இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் விசாகப்பட்டினத்திலிருந்து 35 கி.மீ தூரத்தில் அப்பிக்கொண்டா என்ற கிராமத்தில் ஒரு மலையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். ஒரு உள்ளூர் புனைவுகளின்படி, 'கபில மகரிஷி'க்கு சிவன் வழங்கிய ஆத்மலிங்கம் கருவறைக்குள் உள்ளது.

சோமேசுவர சுவாமி கோவில்
சோமேசுவர சுவாமி கோவில், அப்பிகொண்டா is located in ஆந்திரப் பிரதேசம்
சோமேசுவர சுவாமி கோவில், அப்பிகொண்டா
ஆந்திரப் பிரதேசத்தில் கோயிலின் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஆந்திரப் பிரதேசம்
அமைவு:விசாகப்பட்டினம்
ஆள்கூறுகள்:17°34′35″N 83°10′23″E / 17.576473°N 83.173084°E / 17.576473; 83.173084
கோயில் தகவல்கள்

கடவுள் மீது அபரிமிதமான பக்தி நம்பிக்கைகளைக் கொண்டிருந்த கபில மகரிஷி, இந்த இடத்தில் நூறு சிவலிங்கங்களை அமைத்தார். இவற்றில், தற்போது ஐந்து சிவலிங்கங்கள் மட்டுமே காணப்படுகின்றன. மற்ற அனைத்தும் காலப்போக்கில் நிலத்தடியில் ஒன்றிணைந்ததாகக் கூறப்படுகிறது.

வரலாறு தொகு

இந்தக் கோயில் 1070ஆம் ஆண்டில் சோழ வம்சத்தின் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. இது சோழ நினைவுச்சின்னம் என்று குறிப்பிடப்படுகிறது.[1]

பின்னணி தொகு

சோமேசுவரர் கோயில் மிகவும் பிரபலமானது. இந்த பிராந்தியத்தில், மகா சிவராத்திரிக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட (100,000) பக்தர்கள் திருவிழாவின் போது வருவார்கள்.[2] இந்தக் கோவிலை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவித்துள்ளது.[3][4]

மேற்கோள்கள் தொகு

  1. "Appikonda Beach temple washed out by modernity | Visakhapatnam News" (in en). தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. TNN (Mumbai). 25 July 2015. https://timesofindia.indiatimes.com/city/visakhapatnam/Appikonda-Beach-temple-washed-out-by-modernity/articleshow/48210744.cms. 
  2. "Lord Shiva temples set for Sivaratri in Visakhapatnam". https://timesofindia.indiatimes.com/city/visakhapatnam/lord-shiva-temples-set-for-sivaratri-in-visakhapatnam/articleshow/57318555.cms. 
  3. "Protected Monuments in Andhra Pradesh". இந்தியத் தொல்லியல் ஆய்வகம். Archived from the original on 25 பிப்ரவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 21 April 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Monuments: Visakhapatnam District". Andhra Pradesh Department of Archeology and Museums. http://aparchmuseums.nic.in/?page_id=1067.