சோம்நாத், குஜராத்

சோம்நாத் அல்லது சோமநாதபுரம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா தீபகற்பத்தில், கிர் சோம்நாத் மாவட்டத்தில் அரபுக் கடற்கரையில் அமைந்த பண்டைய இந்திய நகரங்களில் ஒன்றாகும். தில்லி சுல்தானகம் மற்றும் முகலாயர்களால் பலமுறை சிதைக்கப்பட்ட சோம்நாத் நகரத்தை பதான்-சோம்நாத் அல்லது சோம்நாத்-பதான் என்றும் அழைப்பர். 12 சோதிர் லிங்க தலங்களில் முதன்மையான சோமநாதபுரம் சோமநாதர் கோயில் இவ்வூரில் அமைந்துள்ளது. [1]இதிகாச, புராண காலத்தில் சோம்நாத்தில் உள்ள கடற்கரை பகுதியை பிரபாச பட்டினம் என்பர். பிரபாச பட்டினத்தில், வேடுவனின் அம்பு துளைக்கப்பட்டு கிருஷ்ணர் தனது உடலை துறந்தார் என பாகவத புராணம் மற்றும் மகாபாரதம் கூறுகிறது.

2010-இல் சோமநாதபுரம் சோமநாதர் கோயில்

வரலாற்றில் சோம்நாத் நகரத்தில் இருந்த சோமநாதபுரம் சிவன் கோயிலை முதன் முதலில் 1024–1025-ஆம் ஆண்டுகளில் இடித்து சூறையாடி கொள்ளையிட்டவர் கசினியின் மகுமூது ஆவார். 1169-ஆம் ஆண்டில் சோம்நாத் கோயில் மறுசீரமைக்கப்பட்டது. பல முறை இசுலாமிய படையெடுப்பாளர்களால் இடிக்கப்பட்ட சோமநாதபுரம் கோயில், இறுதியாக 13-ஆம் நூற்றாண்டில் சோம்நாத்திற்கு படையெடுத்து வந்த முகலாயர்கள் மீண்டும் சோமநாதபுரம் கோயிலை இடித்தனர். சமீபத்திய் சோம்நாத் அகழாய்வுகள் மூலம் பண்டைய சோம்நாத் நகரத்தின் காலம் கிமு 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக்கணித்துள்ளனர். இதனருகில் அமைந்த தொடருந்து நிலையம் மற்றும் மீன்பிடி துறைமுக நகரம் [[வேராவல்] ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோம்நாத்,_குஜராத்&oldid=3501462" இலிருந்து மீள்விக்கப்பட்டது