சோயூஸ் டிஎம்ஏ-08எம்
சோயூஸ் டிஎம்ஏ-08எம் (Soyuz TMA-08M, அமெரிக்கப் பெயரீடு: 34எஸ், 34S) என்பது பன்னாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கிய உருசியாவின் 2013 ஆம் ஆண்டுப் பயணத்தைக் குறிக்கும். இப்பயணத்தில் மூன்று விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர். 1967 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சோயூஸ் திட்டத்தின் 117வது பயணம் இதுவாகும்.
Soyuz TMA-08M Союз ТМА-08M சோயூஸ் டிஎம்ஏ-08எம் | |
---|---|
திட்ட விபரம் | |
திட்டப்பெயர்: | Soyuz TMA-08M Союз ТМА-08M சோயூஸ் டிஎம்ஏ-08எம் |
ஏவுதளம்: | பைக்கனூர், கசக்ஸ்தான் |
ஏவுதல்: | 28 மார்ச் 2013 20:43:20 ஒசநே [1][2] |
இறக்கம்: | செப்டம்பர் 2013 |
கால அளவு: | |
பயணக்குழுப் படம் | |
(இ-வ) காசிடி, வினொகிராதொவ், மிசூர்க்கின் |
வழக்கமான 2 நாட்கள் பயணமாக விண்வெளி நிலையத்தை நோக்கிச் செல்லும் பயணம் இம்முறை 6 மணி நேரத்துக்குள் நிறைவேற்றப்பட்டுள்ளது. உருசியாவின் நடுவண் விண்வெளி நிறுவனத்தினால் முன்னர் ஆளில்லா புரோகிரசு திட்டத்தில் இரு முறை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்ட இந்தக் குறுகிய நேரப் பயணம் இம்முறை சோயூஸ் டிஎம்ஏ-08எம் மூலம் ஆட்களுடன் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.[3][4]
விண்வெளி வீரர்கள்
தொகு- பவெல் வினொகிராதொவ், தலைவர், உருசிய நடுவண் விண்வெளி நிறுவனம் (உவிநி), மூன்றாவது பயணம்
- அலெக்சாண்டர் மிசூர்க்கின், வான்பயணப் பொறியியலாளர் 1, உருசிய நடுவண் விண்வெளி நிறுவனம் (உவிநி), முதலாவது பயணம்
- கிறித்தோபர் காசிடி, வான்பயணப் பொறியியலாளர் 2, தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம், இரண்டாவது பயணம்
ஏவல்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ NASA. "Consolidated Launch Manifest". NASA. பார்க்கப்பட்ட நாள் June 6, 2011.
- ↑ பிபிசி (29 மார்ச் 2013). "Soyuz spacecraft docks at ISS after just six hours". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 30 மார்ச் 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Harding, Pete (21 டிசம்பர் 2012). "The Soyuz TMA-07M Santa Sleigh docks with ISS". NASASpaceflight. பார்க்கப்பட்ட நாள் 30 மார்ச் 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Clark, Stephen (5 மார்ச் 2013). "Soyuz crew approved for fast approach to space station". SPACEFLIGHT NOW. Archived from the original on 2013-03-09. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)