சோரா சிங் மான்
இந்திய அரசியல்வாதி
சோரா சிங் மான் (Zora Singh Maan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1940 ஆம் ஆண்டு சூன் மாதம் 18 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியாவின் 14ஆவது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். பஞ்சாப் மாநிலத்தின் பிரோசுப்பூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். சிரோமணி அகாலி தளம் அரசியல் கட்சியின் உறுப்பினராக பஞ்சாப் அரசியலில் இயங்கினார்.
சோரா சிங் மான் Zora Singh Maan | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1998-2009 | |
முன்னையவர் | மோகன் சிங் பலியன்வாலா |
பின்னவர் | செர் சிங் குபாயா |
தொகுதி | பிரோசுபூர் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிரோசுப்பூர், பஞ்சாப்பு, பிரித்தானிய இந்தியா | 18 சூன் 1940
இறப்பு | 27 சூன் 2010 புது தில்லி, இந்தியா | (அகவை 70)
அரசியல் கட்சி | சிரோமணி அகாலி தளம் |
துணைவர் | சரப்சீத் கவுர் |
பிள்ளைகள் | 2 மகன்கள், 2 மகள்கள் |
வாழிடம்(s) | பிரோசுப்பூர், பஞ்சாப்பு, இந்தியா |
As of 27 சூன், 2010 மூலம்: [1] |
சரப்சித்து கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். சோரா சிங் மான் 2010 ஆம் ஆண்டு சூன் மாதம் 27 ஆம் தேதியன்று தனது 70 ஆவது வயதில் காலமானார்.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "SAD-BJP juggernaut rolls in 11 seats". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 May 2004. பார்க்கப்பட்ட நாள் 17 May 2016.
- ↑ "Jagmeet uses 'art of eoquence' to outwit Zora". Balwant Garg & Parshotam Betab. Times of India. 2 April 2004. பார்க்கப்பட்ட நாள் 17 May 2016.