சோலையாறு அணை, கேரளம்
சோலையாறு அணை என்பது இந்தியாவின் கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில், சாலக்குடி ஆற்றின் குறுக்கே மலக்கபாரை என்ற இடத்தில் கட்டப்பட்ட கற்காரை அணையாகும். இந்த அணையானது முதன்மை சோலையாறு அணை, சோலையாறு பக்கவாட்டு மற்றும் சோலையார் சேணம் அணை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த அணையில் கேரள அரசு மின்சார வாரியத்துக்குச் சொந்தமான சோலையாறு நீர்மின்சாரத் திட்டம் உள்ளது. நீர் மின் திட்டத்தின் மொத்த நிறுவப்பட்ட திறன் 3 விசை குழாய்களுடன் 54 மெகாவாட் ஆகும். அணையின் அதிகபட்ச சேமிப்பு கொள்ளளவு 2663 அடி. சோலையாறு சாலக்குடி நகரத்திலிருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ளது. சோலையாறு அணைக்கு மேல் உள்ள அணை, தமிழகத்திற்குச் சொந்தமான மேல் சோலையாறு அணையாகும் .
சோலையாறு அணை | |
---|---|
சோலையாறு அணை | |
அதிகாரபூர்வ பெயர் | சோலையாறு நீர்மின் திட்டம் |
அமைவிடம் | Malakkappara, திருச்சூர் இந்தியா |
புவியியல் ஆள்கூற்று | 10°19′18″N 76°44′07″E / 10.32167°N 76.73528°E |
நோக்கம் | மின்சாரம் |
திறந்தது | 1965 |
இயக்குனர்(கள்) | கேரள மாநில மின்சார வாரியம் |
அணையும் வழிகாலும் | |
தடுக்கப்படும் ஆறு | Sholayar சாலக்குடி ஆறு |
உயரம் | 56 m (184 அடி) |
நீளம் | 430.53 m (1,412 அடி) |
வழிகால் அளவு | 1825 M3/Sec |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | Lower Sholayar Reservoir |
மொத்தம் கொள் அளவு | 153,600,000 கன சதுர மீட்டர்கள் (5.42×109 cu ft) (5.42 tmcft) |
செயலில் உள்ள கொள் அளவு | 150,200,000 கன சதுர மீட்டர்கள் (5.30×109 cu ft) (5.31 tmcft) |
மேற்பரப்பு பகுதி | 8.705 எக்டேர்கள் (21.51 ஏக்கர்கள்) |
மின் நிலையம் | |
இயக்குனர்(கள்) | கேரள மாநில மின்சார வாரியம் |
பணியமர்த்தம் | 1961 |
சுழலிகள் | 3 x 18 மெகாவாட் (Francis-type) |
நிறுவப்பட்ட திறன் | 54 MW |
Annual உற்பத்தி | 233 MU |
Sholayar Power House |
வரலாறு
தொகுசோலையாறு அணை, சோலையார் சேணம் அணை மற்றும் சோலையார் பக்கவாட்டு அணை ஆகியவை 1965 இல் பயன்பாட்டுக்கு வந்தன. இந்த நீர்த்தேக்கம் 8.705 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும் அணையின் நீளம் 430.60 மீட்டர் ஆகும். சோலையாறு அணை 66 மீட்டர் உயரமும் 430 மீட்டர் அகலமும் கொண்டது, [1] சோலையாறு பக்கவாட்டு அணை அடித்தளத்திலிருந்து 18 மீட்டர் உயரம் 109 மீட்டர் நீளமும் கொண்டது. [2] சோலையாறு சேணம் அணை 259 மீட்டர் உயரமும் 109 மீட்டர் அகலமும் கொண்டது.
காட்சியகம்
தொகு-
சோலையார் அணை நீர்த்தேக்கம்
-
சோலையார் அணை நீர்த்தேக்கம் மற்றும் அணை
-
நீர்த்தேக்கத்தின் காட்சி
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dams in West flowing rivers from Tadri to Kanyakumari Basin". பார்க்கப்பட்ட நாள் 2021-03-18.
- ↑ "Dams in West flowing rivers from Tadri to Kanyakumari Basin". பார்க்கப்பட்ட நாள் 2021-03-18.