சோலோஹெட்பெக் வெடிமருந்து வழிப்பறி

சோலோஹெட்பெக் வெடிமருந்து வழிப்பறி (Soloheadbeg ambush) என்பது 1919 ஆம் ஆண்டு சனவரி 21 ஆம் நாள் அயர்லாந்தின் சோலோஹெட்பெகில் பதுங்கி இருந்த ஐரிஷ் தன்னார்வலர்களின் (அல்லது ஐரிஷ் குடியரசுக் கட்சி, ஐஆர்ஏ) உறுப்பினர்கள் ஐக்கிய இராச்சிய காவல் துறையிரைத் தாக்கி அவர்கள் பாதுகாப்பில் கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்களைக் கடத்திச் சென்றதைக் குறிப்பதாகும். இந்நிகழ்வில் காவல்துறையின் இரண்டு அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களது ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றபட்டன. இந்த நிகழ்வில் தொண்டர்கள் தங்கள் சொந்த முயற்சியால் செய்தனர். இவர்கள் தங்கள் இந்த நடவடிக்கைக்கு தலைமையிடம் எந்த அங்கீகாரத்தையும் பெறவில்லை. இதுவே பெரும்பாலும் பிற்கால ஐரிஷ் சுதந்திரப் போரின் முதல் ஆயுதந்தாங்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.[1]

சோலோஹெட்பெக் வெடிமருந்து வழிப்பறி
ஐரிஷ் விடுதலைப் போர் பகுதி

சோலோஹெட்பெக் வழிப்பறி தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களைப் பிடிக்க உதவுபவர்களுக்கு £ 1,000 பரிசு வழங்கவதற்கான அறிவிப்பு
நாள் 21 சனவரி 1919
இடம் அயர்லாந்து, கவுண்டி டிப்பரரி சோலோஹெட்பெக், அருகில்
52°31′N 8°10′W / 52.52°N 8.16°W / 52.52; -8.16
ஐ.ஆர்.ஏ. தன்னார்வலர்கள்
ஐ.ஆர்.ஏ முகுதியான வெடிப்பொருட்களைக் கைபற்றுகிறது.
பிரிவினர்
ஐரிஷ் தன்னார்வலர்கள்/ஐரிஷ் குடியரசு இராணுவம் பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் அயர்லாந்துக்கான பிரித்தானிய காவல் துறையினர்
தளபதிகள், தலைவர்கள்
சூமாஸ் ராபின்சன்
சீன் டிரேசி
பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் ஜேம்ஸ் மெக்டோனல்  
பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் பேட்ரிக் ஓ'கோனெல்  
பலம்
10 தன்னர்வலார்கள் 2 அதிகாரிகள்
இழப்புகள்
ஒருவருமில்லை 2 இறப்பு
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Island of Ireland" does not exist.

பின்னணி

தொகு

1916 ஏப்ரலில், முதல் உலகப் போரின் போது, ஐரிஷ் குடியரசுக் கட்சியினர் அயர்லாந்தில் பிரித்தானி ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். இது ஈஸ்டர் எழுசி என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் ஐரிஷ் குடியரசை அறிவித்தனர். ஒரு வாரம் கடும் கலகத்துக்குப் பிறகு, டப்ளினில், ஏற்பட்ட இந்த எழுச்சியானது பிரித்தானிய படைகளால் பெருமளவில் ஒடுக்கபட்டது. இச்சமயத்தில் சுமார் 3,500 பேர் ஆங்கிலேயர்களால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் பலர் இந்தக் கிளர்ச்சியில் எவ்விதத்திலும் ஈடுபடாதாவர்கள். கிளர்ச்சியில் ஈடுபட்ட பெரும்பாலான தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இந்தக் கிளர்ச்சிக்கு எதிராக பிரித்தானியரின் எதிர் நடவடிக்கைகள் மற்றும் இரண்டாம் உலகப் போரில் அயர்லாந்து மக்களை கட்டாயப்படுத்தப்படுத்தி ஈடுபடவைக்க பிரித்தானியா செய்த முயற்சி ஆகியவை ஐரிஷ் விடுதலைக்கு அதிக மக்கள் ஆதரவைப் பெற்றுத்தர வழிவகுத்தன.

1918 திசம்பர் பொதுத் தேர்தலில், ஐரிஷ் குடியரசுக் கட்சியான சின் பெயின் அயர்லாந்தில் மகத்தான வெற்றியைப் பெற்றது. ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையில் 105 இடங்களில் 73 இடங்களைப் பெற்றது (இவற்றில் 25 இடங்கள் போட்டியின்றி). இருப்பினும், கட்சி தனது தேர்தல் அறிக்கையில், பிரித்தானிய பாராளுமன்றத்தில் அமராமல் அயர்லாந்தில் தனி அரசை அமைப்பதாக உறுதியளித்திருந்தது. 1919 சனவரி 21 அன்று டப்ளினில் நடந்த ஒரு கூட்டத்தில், சின் பெயின் கட்சியானது சுயாதீனமான பாராளுமன்றத்தை டெய்ல் ஐரேன் என்ற பெயரில் நிறுவி ஐக்கிய இராச்சியத்திலிருந்து தனது விடுதலையை அறிவித்தது .[2]

திட்டமிடல்

தொகு

அதே நாளில், 3 வது டிப்பரரி படையணியைச் சேர்ந்த ஐரிஷ் தன்னார்வலர்களால் இந்த வழிப்பறி மேற்கொள்ளப்பட்டது. இதில் சீன் டிரேசி, தான்பிரீன், சீன் ஹோகன், சூமாஸ் ராபின்சன், தாத் கிரோவ், பேட்ரிக் மெக்கார்மேக், பேட்ரிக் ஓ'ட்வயர், மைக்கேல் ரியான் ஆகியோர் ஈடுபட்டனர்.[3] ராபின்சன் ( ஈஸ்டர் எழுச்சியில் பங்கேற்றவர்) தாக்குதலை நடத்திய குழுவின் தளபதியாக இருந்தார் மேலும் டிரேசி (1911 முதல் ஐரிஷ் குடியரசு சகோதரவத்துவக் கட்சியின் உறுப்பினர்) தாக்குதல் திட்டத்தை ஒருங்கிணைத்தார்.[4] இதில் சம்பந்தப்பட்ட அலகே தன் சொந்த முயற்சியில் செயல்பட்டது.

1918 ஆம் ஆண்டு திசம்பரில், டிப்பெரரி பிரித்தானிய இராணுவ முகாம்களில் இருந்து சோலோஹெட்பெக் கல்லுடைக்கும் பாறைகளுக்கு ஜெலட்டின் வெடி பொருட்களை கொண்டுசெல்வதற்கான திட்டம் இருப்பதாக இவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இவர்கள் சரக்குகளை இடைமறிக்கும் திட்டங்களைத் தொடங்கினர், 1919 சனவரி 16 ஆம் நாள் சரக்குகளை கொண்டுசெல்வதாக குவாரியில் பணிபுரிந்த டான் பிரீனின் சகோதரர் லார்ஸ் வழியாக தகவல் கிடைத்தது. வெடி பொருட்களுக்கு இரண்டு முதல் ஆறு ஆயுதந் தாங்கிய பாதுகாவலர்கள் இருப்பார்கள் என்று இவர்கள் எதிர்பார்த்தார்கள். இதுகுறித்து வெவ்வேறு திட்டங்களைப் பற்றி இவர்கள் விவாதித்தனர். வழிக்காவலர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தாமலேயே மடக்கலாம் என்று இவர்கள் நம்பினர். இவர்கள் ஓளிந்திருந்த இடத்தில் வாயடைப்பான்கள், கயிறுகள் போன்றவற்றை மறைத்து வைக்கப்பட்டன. இதைக் கொண்டு சரண்டையும் அதிகாரிகளை கட்டிப்போட்டு பிணைக்கலாம் என திட்டமிடப்பட்டது.[5] வழிப்பறிக்காக திட்டமிடல்கள் கிரீன்னேவில் தனித்திருந்த வீடான 'டின் ஹட்' இல் நடந்தன.[3]

ஆங்கிலேயரின் சிறையில் அடைபட்டிருந்து விடுவிக்கப்பட்டு, புரட்சிப் படைப்பிரிவு பகுதிக்கு திரும்பிய ராபின்சனிடம், ஜெலட்டின்களைக் கைப்பற்றும் திட்டங்கள் குறித்து டிரேசியால் விளக்கினார். ராபின்சன் இந்த திட்டத்தை ஆதரித்தார். மேலும் இவர்கள் ஐரிஷ் தன்னார்வ அமைப்பின் தலைமையிடம் அனுமதி கோரவேண்டாம் என்று முடிவெடுத்தனர். இவர்கள் அவ்வாறு அனுமதி கோரினால், தலைமையின் பதிலுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும். ஒருகால் இதற்கு சாதகமான பதில் வந்தாலும், அது ஜெலட்டின் சரக்கு நகர்ந்து செல்லுவதற்குள் வரும் என்பதற்கு உத்திரவாதமில்லை.[6]

பதுங்கித் தாக்குதல்

தொகு

சனவரி 16 முதல் 21 வரை, ஒவ்வொரு நாளும் பதுங்கிப்பாய தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் அதிகாலையில் இருந்து பிற்பகல் வரை உரிய இடத்தில் கண்காணித்தபடி பதுங்கி காத்திருந்தனர் பின்னர் ஆளரவமற்ற வீட்டில் இரவைக் கழித்தனர். இவ்வாறு ஏழு தன்னார்வலர்கள் கைத்துப்பாக்கி ஆயுதங்களை ஏந்தியிருந்தனர், டிரேசி ஒரு சிறிய தானியங்கி துப்பாக்கியை ஏந்தியிருந்தார்.[3] சனவரி 21 அன்று, நண்பகலில், முகாமில் இருந்து வாகங்கள் வெளியேறுவதை பேட்ரிக் ஓ'ட்வயர் கண்டார். குதிரை வண்டியில் 160 எல்பி வெடிபொருட்கள் [5] இருந்தன. இவற்றை குறும்மசுகெத்து துப்பாக்கிகளை ஏந்திய இரண்டு ஆர்.ஐ.சி அதிகாரிகளால் பாதுகாக்கப்பட்டு வழிநடத்தப்பட்டது.[7] பதுங்கிப்பாயப தன்னார்வலர்கள் காத்திருக்கும் இடத்திற்கு ஓ'ட்வயர் மிதிவண்டியில் விரைந்து வந்து, தகவல் கொடுத்தார்.[4] இதையடுத்து ராபின்சன் மற்றும் ஓ'ட்வயர் ஆகிய இருவரும் ஆறு பேர் கொண்ட முதன்மைக் குழுவுக்கு முன்னால் சுமார் 20 கெஜம் தொலைவில் மறைத்து இருந்தனர்.[8]

வெடிமருந்து வண்டி முதன்மைக் குழு பதுங்கியிருந்த இடத்தை நெருங்கியபோது, முகமூடி அணிந்த தொண்டர்கள் தங்கள் துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு முன்னால் வந்து, காவல் அதிகாரிகள் தங்கள் கைகளை உயர்த்தி சரணடையுமாறு ஒருமுறைக்கு மேல் எச்சரித்தனர்.[3][7] அப்போது மழை பெய்து கொண்டிருந்தது.[5] ஒரு அதிகாரி வண்டியின் பின்னால் இறங்கினார், மற்றவர் தனது துப்பாக்கியை எடுத்தார். தொண்டர்களின் கூற்றுப்படி, அதிகாரிகள் தங்கள் துப்பாக்கிகளைக் கொண்டு இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். சூமாஸ் ராபின்சன் ஆகிய அதிகாரிகள் சுட முயன்றனர். ஆனால் துப்பாக்கிகள் சுடவில்லை, ஏனெனில் "கட்-ஆஃப்   கவனிக்கப்படவில்லை ".[9] தொண்டர்கள் உடனடியாக அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், மேலும் டிரேசி முதல் சூட்டை நடத்தினார் என்று நம்பப்படுகிறது. இரண்டு அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். அதிகாரிகளான ஜேம்ஸ் மெக்டோனல் மற்றும் பேட்ரிக் ஓ'கோனெல், பாரம்பரிய ரோமன் கத்தோலிக்கர்கள்.[8] மெக்டோனல் தலையின் இடது பக்கத்திலும் இடது கை வழியாகவும் சுடப்பட்டார்; ஓ'கானல் இடது புறம் சுட்டுக் கொல்லப்பட்டார். மெக்டோனல் மாயோவின் மாவட்டத்தில் பிறந்தார். அவர் இறக்கும் போது 50 வயதாக இருந்தார். அவருக்கு ஒரு மனைவியும் ஐந்து குழந்தைகளும் இருந்தனர். ஓ'கோனெல் திருமணமாகாதவர். கார்க்கின் கோச்ஃபோர்ட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

திட்டமிட்டபடி, ஹோகன், பிரீன், டிரேசி ஆகியோர் வெடிபொருட்களுடன் குதிரை வண்டியை விரைவாக ஓட்டிச் சென்றனர்.[3] வெடிபொருட்களை கிரீனானில் ஒரு வயலில் மறைத்து வைத்தனர். வெடிபொருட்கள் பல முறை இடம் மாற்றபட்டு பின்னர் படைப்பிரிவின் படையணிகள்ளுக்கு பகிர்ந்து அளிக்கபட்டன.[10] நிகழ்வின்போது கொல்லபட்ட அதிகாரிகளான தாத் க்ரோவ், பேட்ரிக் ஓ'ட்வயர் ஆகியோரின் துப்பாக்கிகளையும், வெடி பொருட்களையும் எடுத்துக்கொண்டனர்.

பின்விளைவு

தொகு
 
தான் பிரீன் குறித்த அறிவிப்பு சுவரொட்டி.

இந்த வெடிமருந்து கட்டத்தலே பிற்கால ஐரிஷ் விடுதலைப் போரின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.[11][12][13][14] இரண்டு நாட்கள் கழித்து பிரித்தானிய அரசாங்கத்தால் தென் அயர்லாந்தானது சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பு சட்டத்தின்படி சிறப்பு ராணுவப் பகுதியாக அறிவிக்கபட்டது.[15][16] வழிப்பறியின்போது நடந்ந்த கொலைக்கு அயர்லாந்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபையால் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. டிப்பரரி டவுனின் பாரிஷ் பாதிரியார் இறந்த அதிகாரிகளை "வேதசாட்சி"யாக மரித்த தியாகிகள் என்று அழைத்தார்.[17]

1919 பெப்ரவரியில், நோட்ஸ்டவுன் டிப்பரரியில் நடந்த தன்னார்வலர்களின் படைப்பிரிவு கூட்டத்தில், படைப்பிரிவு அதிகாரிகள் வெளியிட்ட பிரகடனத்தில் (சீமஸ் ராபின்சனால் O / C என கையெழுத்திட்டது) பிரித்தானியரின் இராணுவத்தையும், கால்துறையினரையும் தெற்கு டிப்பரரியில் இருந்து வெளியேற்றுமாறு எச்சரிக்கபட்டது. மீறி அவர்கள் தங்கியிருந்தால் அவர்களின் "உயிருக்கு உத்திரவாதமில்லை" எனப்பட்டது. இந்தப் பிரகடனத்தை பகிரங்கமாகக் காட்ட வேண்டாம் என்று கோரப்பட்டது. என்றாலும் இது டிப்பரரியில் பல இடங்களில் வெளியிடப்பட்டது.[6][18]

பிடிபடுவதிலிருந்து தப்புவதற்காக, பிரீன், டிரேசி, ஹோகனும் பிற பங்கேற்பாளர்களும் அடுத்தடுத்த மாதங்கள் தொடர்ந்து இடம் மாறிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். பெரும்பாலும் ஆதரவாளர்களின் களஞ்சியங்களிலும், பரண்களிலும் மறைந்திருந்தனர்.[19]

நினைவு

தொகு

பதுங்கிப்பாய்ந்த இடத்தில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு நினைவுகூறும் விழா நடத்தப்படுகிறது.[20]

வெளி இணைப்புகள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. English, Richard (1998), Ernie O'Malley: IRA Intellectual, Oxford: Oxford University Press
  2. "Explainer: Establishing the First Dáil". Century Ireland.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Ambrose, Joe. Seán Treacy and the Tan War. Mercier Press, 2007. pp.89-98
  4. 4.0 4.1 Aengus Ó Snodaigh (21 January 1999). "Gearing up for war: Soloheadbeg 1919"
  5. 5.0 5.1 5.2 "Soloheadbeg: what really happened?". History Ireland, Volume 5, Issue 1 (Spring 1997).
  6. 6.0 6.1 Bureau of Military History, Witness Statement 1721, Séumas Robinson பரணிடப்பட்டது 2017-11-23 at the வந்தவழி இயந்திரம்
  7. 7.0 7.1 Tomkins, Phil. Twice A Hero: From the Trenches of the Great War to the Ditches of the Irish Midlands 1915-1922. Memoirs Publishing, 2013. pp.96-97
  8. 8.0 8.1 Bureau of Military History, Witness Statement 1432, Patrick O'Dwyer பரணிடப்பட்டது 2019-07-16 at the வந்தவழி இயந்திரம்
  9. "The Soloheadbeg ambush - Sudden, bloody and unexpected". RTÉ, 20 January 2019.
  10. Bureau of Military History, Witness Statement 1450, John Ryan பரணிடப்பட்டது 2019-07-17 at the வந்தவழி இயந்திரம்
  11. Irish Freedom by Richard English (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-330-42759-3), page 287
  12. The Irish War of Independence by Michael Hopkinson (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0773528406), page 115
  13. A Military History of Ireland by Thomas Bartlett and Keith Jeffery (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521629898), page 407
  14. Michael Collins: A Life by James Mackay (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85158-857-4), page 106
  15. Sean Treacy and the 3rd. Tipperary Brigade by Desmond Ryan (Tralee 1945), p.74
  16. Police Casualties in Ireland, 1919-1922 by Richard Abbott (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1856353144), p.49
  17. Stewart, Bruce. Hearts and Minds: Irish Culture and Society Under the Act of Union. Colin Smythe Publishing, 2002. p.222
  18. Sean Treacy and the 3rd. Tipperary Brigade by Desmond Ryan (Tralee 1945)
  19. Sean Treacy and the 3rd. Tipperary Brigade by Desmond Ryan (Tralee 1945)
  20. "The Irish Times view on Soloheadbeg: a complex legacy". The Irish Times, 21 January 2019.