சோ. ராமேஸ்வரன்

சோ.ராமேஸ்வரன் (மார்ச் 31, 1950, மேலைப்புலோலியூர், பருத்தித்துறை, ஆத்தியடி, இலங்கை) ஈழத்து எழுத்தாளர். இவர் எஸ்.ராமேஷ், ஆத்தியடியூரான், ஆத்தியடி ராமேஷ், ராமேஷ், செல்வி ராமேஸ்வரன், புஷ்பா தங்கராஜா, ஆர்.பிரசன்னா ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். தற்சமயம் கொழும்பில் வாழ்கிறார்.

சோ.ராமேஸ்வரன்
பிறப்பு(1950-03-31)மார்ச்சு 31, 1950
அனுராதபுரம், இலங்கை
தொழில்எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
மொழிதமிழ்
தேசியம்இலங்கையர்
காலம்1974 - இன்று மட்டும்
குறிப்பிடத்தக்க படைப்புகள்முகவரியைத் தேடுகிறார்கள்
கானல் நீர் கங்கையாகிறது
வாழ நினைத்தால் வாழலாம்
திசை மாறிய பாதைகள்
குறிப்பிடத்தக்க விருதுகள்அரச சாகித்திய விருது (2005, 2007)
சிறுவர் இலக்கியத் துறை - வடக்கு கிழக்கு மாகாண சபை இலக்கிய நூற்பரிசு (1998, 2005)

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இவரது சொந்த ஊர் மேலைப்புலோலியூர், பருத்தித்துறை, ஆத்தியடி ஆக இருந்தாலும் இவர் பிறந்தது அநுராதபுரத்தில்.

கல்வி

தொகு

இவர் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியிலும், இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரியிலும் (1995-1997) கல்வி கற்றார். 1958 ஆம் ஆண்டு ஜூன் கலவரத்தின் பின் ஒன்றரை வருடங்கள் பருத்தித்துறையில் கற்றார்.

தொழில்

தொகு

இவர் வீரகேசரி, மித்திரன் பத்திரிகைகளின் வவுனியா நிருபராக 22 நவம்பர் 1971 தொடக்கம் 5 செப்டெம்பர் 1974 வரை கடமையாற்றியவர். இவர் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தினால் வெளியிடப்பட்ட “விஞ்ஞான முரசு" என்ற சஞ்சிகையின் உதவி ஆசிரியராகவும், கொழும்பு கதிர்காமத் தொண்டர் சபையின் பொருளாளராகவும் பணியாற்றியவர்.இவர் தகவல் வெளியிட்டு உத்தியோகராக ( Information and Publication officer) HARTIல 1980ல் இருந்து 2010 வரை தொழில் புரிந்தார்.

கலையுலகில்

தொகு

இவர் தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவர். நிறையவே எழுதியுள்ளார். சிறுகதை, நாவல், நகைச்சுவைக் கதை, நாடகம், சிறுவர் இலக்கியம் என சகல துறைகளிலும் தன் திறமையை நிரூபித்தவர். இவர் தனது 15 வயதிலேயே எழுதுவதில் ஆர்வம் கொண்டார். இவர் எழுதிய நகைச்சுவைத் துணுக்குகள் தமிழ் நாட்டில் இருந்து வெளிவந்த 'கண்ணன்' என்ற சிறுவர் சஞ்சிகையில் வெளியாகின. இவருக்கு தனது படைப்புக்கள் பிரசுரமாவதில் பெரும் ஆர்வம் இருந்தது. அதனால் 'கண்ணன்' இதழுக்கேற்ற கதைகளை எழுதி அனுப்பினார். அக்கதைகள் பிரசுரமாகவில்லை. ஆனாலும் மனம் தளராமல் எழுதுவதைத் தொடர்ந்தார். நகைச்சுவைத் துணுக்குகளை 'சிந்தாமணி' பத்திரிகைக்கு எழுதியனுப்பினார். அவை வெளியாகின. அவற்றில் ஒன்று பரிசுக்கும் தெரிவாகியிருந்தது. அடுத்து அவரது கவனம் சிறுகதைத் துறைக்குத் திரும்பியது. முதலில் சிறுகதையொன்றை எழுதி அதை 'வீரகேசரி வார வெளியீட்டின்' ஆசிரியராகத் திகழ்ந்த அமரர் பொன். இராஜகோபாலிடம் கையளித்தார். அவரது சிறுகதையின் பாணி பொன். இராஜகோபாலுக்குப் பிடிக்காததால் அக்கதையை மூன்று முறையாக திருப்பி, திருத்தி எழுத வைத்தார். மூன்றாவது முறை எழுதியதும் பிரசுமாகவில்லை. மனம் சலித்த ராமேஸ்வரன் அக்கதையை 'சிந்தாமணிக்கு' அனுப்பினார். அச் சிறுகதை 1969, டிசம்பர் 19ஆம் திகதி சிந்தாமணியில் பிரசுரமானது. 'அப்பா வரமாட்டார்' என்ற அச்சிறுகதையே இவரது முதற் சிறுகதை. இவை தவிர தொலைக்காட்சி நாடகங்களின் தயாரிப்பிலும் இவர் பங்காற்றியுள்ளார். இவரது முதலாவது நாவல் "யோகராணி கொழும்புக்கு போகிறாள்" 1992 இல் வெளிவந்தது. இவரது முதலாவது தொடர்கதை 'விமலா என்றொரு பெண் தெய்வம்'. இது 'மித்திரன்' பத்திரிகையில் 1972இல் 28 அத்தியாயங்களில் வெளிவந்தது. அன்றிலிருந்து இன்று வரை இவர் 44 நூல்கள் தமிழ், ஆங்கிலம், மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் வெளிக்கொண்டு வந்துள்ளார். இந்நூல்களின் பட்டியலில் ஏழு சிங்கள நூல்களும், இரு ஆங்கில நூல்களும் அடங்குகின்றன. மேலும் கண்நோய் பற்றி ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து இரு நூல்களை வெளியிட்டுள்ளார்.

மக்கள் சமாதான இலக்கிய மன்றத்தினால் 1996இல் நடத்தப்பட்ட நாவல் போட்டியில் ராமேஸ்வரன் எழுதிய "வடக்கும், தெற்கும்" என்ற நாவல் முதல் பரிசு பெற்றதுடன், இதே நாவல் அரச கரும மொழிகள் திணைக்களம் இன ஐக்கியத்தையும், மொழி வளர்ச்சியையும் கருத்திற் கொண்டு அகில இலங்கைரீதியில் ஏற்பாடு செய்திருந்த போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றது. அத்துடன் இவர் எழுதிய "திசை மாறிய பாதைகள்" என்ற சிறுவர் நவீனம் 1998 இலும், 'வாழ நினைத்தால் வாழலாம்" என்ற சிறுவர் நவீனம் 2005 இலும் வடக்கு கிழக்கு மாகாண சபையின் சாகித்திய போட்டியில் முதற் பரிசுகளைப் பெற்றன. தமிழ் இலக்கிய உலகுக்கு இவர் நல்கிய பங்களிப்பினைக் கௌரவப்படுத்துமுகமாக 15 டிசம்பர், 2012 இல் இவருக்கு 'கலாபூஷணம்' என்ற பட்டத்தை இலங்கை அரசாங்கம் வழங்கி கௌரவித்தது. இது தொடர்பான விழா கொழும்பு ஜோன் டீ சில்வா அரங்கில் நடைபெற்ற போது அவருக்கு விருதும், சான்றுப்பத்திரமும் வழங்கப்பட்டன. 1998இல் அமைச்சுக்கிடையிலான அரச உத்தியோகத்தர்களின் ஆக்கப் படைப்புக்களில் இவர் எழுதிய "நியாயம், தர்மம்.." என்ற சிறுகதை முதல் பரிசைப் பெற்றது.

1994 க்கும் 2008 க்கும் இடைப்பட்ட பத்து வருடங்களினுள் ராமேஸ்வரன் எழுதிய பன்னிரண்டு சிறுகதைகள் சர்வதேசரீதியிலும், இலங்கையிலும் பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்பது கதைகளைத் தொகுத்து "முகவரியைத் தேடுகிறார்கள்" என்ற மகுடத்தில் வெளியிடப்பட்ட சிறுகதைத் தொகுப்புக்கு 2005ஆம் ஆண்டுக்கான சாகித்திய மண்டல விருது கிட்டியது. அத்துடன் இவர் எழுதி வெளியிட்ட "கானல் நீர் கங்கையாகின்றது" என்ற நாடகம் 2006இல் சாகித்திய மண்டல விருதைப் பெற்றுள்ளது.

வவுனியாவில் வாழ்ந்த போது ராமேஸ்வரன் மூன்று நாடகங்களைமேடையேற்றினார். நாடகங்களின் கதை, வசனம், இயக்கம்,தயாரிப்பு என முக்கிய பொறுப்புக்களை சுமந்த ராமேஸ்வரன், தனதுஒரேயொரு நாடகத்திலேயே நடித்திருக்கிறார். மூன்றுமே முழு நீளநகைச்சுவை நாடகங்களாகும்.


இவற்றில் “சிங்கப்பூர் மாமா" என்ற நாடகம் முதல் தடவையாகவவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயக் கட்டிடநிதிக்காக வவுனியா தமிழ் மகா வித்தியாலய அரங்கில்25.9.1973இலும், இரண்டாவது தடவையாக இலங்கைக்காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் வவுனியா கிளை நகர சபை திறந்தவெளி அரங்கில் நடத்திய காப்புறுதி வார இறுதி நாள்கொண்டாட்டத்தில் 15.10.1973இலும் மேடையேற்றப்பட்டது. இதன் பின்னர் “மலேஷியா மாமி" என்ற நாடகம் 06.02.1974இல்வவுனியா நகர சபை திறந்த வெளி அரங்கில் மேடையேற்றப்பட்டது. ராமேஸ்வரனின் மூன்றாவது நாடகம் “ஓ! யோஜனா". இது26.03.1974இல் இதே அரங்கில் மேடையேற்றப்பட்டது. இதன்கதாநாயகனாக நடித்தவர் கல்வி அமைச்சின் மேலதிகச்செயலாளராக விளங்கிய எஸ். (உடுவை) தில்லைநடராஜா.


மேடை நாடகங்கள் மட்டுமன்றி, தொலைக்காட்சி நாடகங்களிலும்ராமேஸ்வரன் தனது பங்களிப்பினைச் செய்துள்ளார். 1992-93ஆம்ஆண்டுகளில் நான்கு தடவைகள் தேசிய தொலைக்காட்சிகளில் 22வாரங்கள் ஒளிபரப்பான “சுர அசுர" என்ற சிங்கள நாடகத்தில்ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டார். அதில் ஓரிருகாட்சிகளிலும் நடித்துள்ளார். வீணா ஜயக்கொடி தமிழ்பாத்திரமொன்றை இதில் ஏற்றிருந்ததுடன், அவர் தனது சொந்தக்குரலிலேயே தமிழும் பேசினார். அத்துடன் 1994இல் “சக்தி"யில்ஒளிபரப்பான “சூரிய உதயம்" என்ற தொலைக்காட்சி நாடகத்தில்உதவி இயக்குனராகச் செயற்பட்டார். தேசிய சமாதானப்பேரவையின் தயாரிப்பில் “நண்பன்" என்ற தொலைக்காட்சிநாடகத்தில் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டதுடன், ஓரிருகாட்சிகளிலும் நடித்தார். துரதிர்ஷ்டவசமாக இதுஒளிபரப்பப்படவில்லை.

விருதுகள்/பரிசுகள்/பட்டங்கள்

தொகு
  • வவுனியூர் ஸ்ரீ இராமகிருஸ்ணா - கமலநாயகி தமிழியல் விருது (2013) [1][2]
  • கலாபூஷணம் - இலங்கை அரசாங்கம் (15.12.2012)
  • சாகித்திய மண்டல விருது (கானல் நீர் கங்கையாகின்றது - நாடகம் - 2007)
  • அரச இலக்கிய விருதை (சாகித்திய மண்டல விருது) முகவரியைத் தேடுகிறார்கள் - சிறுகதைத் தொகுப்பு 2005
  • வடக்கு கிழக்கு மாகாண சபை இலக்கிய நூற்பரிசு (வாழ நினைத்தால் வாழலாம் - சிறுவர் இலக்கியத் துறை - 2005)
  • வடக்கு கிழக்கு மாகாண சபை இலக்கிய நூற்பரிசு (திசை மாறிய பாதைகள் - சிறுவர் இலக்கியத் துறை - 1998)
  • கனடா பத்திரிகை விளம்பரம் நடத்திய குருநாவல் போட்டியில் 3வது பரிசு (யாழ்ப்பாணத்தில் ஓரு கனடா )

பரிசுபெற்ற சிறுகதைகள்

தொகு
  • சிறிபாலபுர மாத்தையா (1994) - முதலாவது பரிசு (இலங்கை சூழல் பத்திரிகையாளர் மன்றம், நுகேகொடை)
  • ஒரு கப்டனும் ஒரு பிராமணச் சிறுவனும் (1995)
  • பாதை தவறாமல் (1995)
  • ஆளில கொஞ்சம் ஐமிச்சம் (1995)
  • நியாயம், தர்மம்... (1998)
  • சேனாதீரவும், அந்தப் பெண்களும் (1999)
  • வாழ்வதற்காக சாவதா (1999)
  • ஊரில் ஒரு அம்மா (1999)
  • முகவரியைத் தேடுகிறார்கள் (2004) - முதலாவது பரிசு (லண்டன் பூபாள ராகங்கள்) [3]
  • பெண்மையின் மென்மை (2005)
  • பொருளாதாரத் தடை (2005)
  • ஒரு தூணும், ஆறேழு பலூன்களும் (2005)
  • Water (2005)
  • நீர்வீழ்ச்சி பின்னோக்கிப் பாய்வதில்லை (2006)
  • கோயில் காணியில் ஓர் எச்சரிக்கைப் பலகை (2006)
  • ஒரு விடியல் பொழுதில் (2007)
  • இது ஒரு பிரெஞ்சுக் கலியாணம் (2008)
  • கலாசார விலங்குகள் (2008)
  • பிரசவ வலி (2008)
  • பயங்கரவாதத்திலிருந்து விடுதலை (2010) - ஆறுதல் பரிசு (அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்) [4][5]
  • மனித உரிமைகள் சட்டத்தரணி (2011)
  • வன்னி மாப்பிள்ளை (2011)
  • ஓர் ஆறு வழி பிரித்தோடுகிறது கனடா, 'தாய்வீடு"  பத்திரிகை அமரர் நாகேஸ்வரி திருநாவுக்கரசு நினைவாக  நடத்திய போட்டி மூன்றாவது பரிசு (2017)
  • நடக்காது ஆனால் நடக்கும் கனடா, 'தாய்வீடு"  பத்திரிகை அமரர் நாகேஸ்வரி திருநாவுக்கரசு நினைவாக  நடத்திய போட்டி ஆறுதல் பரிசு (2017)

எழுதிய நூல்கள்

தொகு

நாவல்கள்

தொகு
  • யோகராணி கொழும்புக்கு போகிறாள் (1992)
  • இவர்களும் வாழ்கிறார்கள் (1993)
  • இலட்சியப் பயணம் (1994)
  • அக்கரைக்கு இக்கரைப் பச்சை (1995)
  • மௌன ஓலங்கள் (1995)
  • வடக்கும் தெற்கும் (1996)
  • இன்றல்ல, நாளையே கலியாணம் (1996)
  • சத்தியங்கள் சமாதிகளாவதில்லை (1996)
  • இந்த நாடகம் அந்த மேடையில் (1997)
  • உதுர சஹ தகுண (சிங்களம்) (1998)
  • சிவபுரத்து சைவர்கள் (1998)
  • நிலாக்கால இருள் (2000)
  • சிவபுரத்து கனவுகள் (2000)
  • கனகு (2003)
  • மணமாலிய வீ ஹெற்ற தவஸே (சிங்களம்) (2006)
  • யாழினி (2007)
  • பண்டார சஹ சசி (சிங்களம்) (2008)

குறுநாவல்

தொகு
  • நிழல் (1998)

சிறுகதை

தொகு
  • "முகவரியைத் தேடுகிறார்கள்" (சிறுகதைத் தொகுப்பு)
  • சுதந்திரக் காற்று (1994)
  • பஞ்சம் (1995)
  • நிதாஸே வா ரலி (சிங்களம்) (1996)
  • புண்ணிய பூமி (1997)
  • புண்ய பூமி (சிங்களம்) (1998)
  • புதிய வீட்டில் (2000)
  • போராட்டம் (2001)
  • முகவரியைத் தேடுகிறார்கள் (2004)
  • ஒரு விடியல் பொழுதில் (2006)
  • திவய உதேஸா திவி புதன்னோ (சிங்களம்) (2007)
  • கலாசார விலங்குகள் (2008)

நாடகம்

தொகு
  • கானல் நீர் கங்கையாகின்றது (2006)
  • கறுப்பும் வெள்ளையும் (2008)

சிறுவர் இலக்கியம்

தொகு
  • படித்து மகிழ பயன்மிகு பத்துக் கதைகள் (1997)
  • திசை மாறிய பாதைகள் (நவீனம்) (1998)
  • சதியை வென்ற சாதுரியம் (2001)
  • அந்த அழகான பனை (2002)
  • வாழ நினைத்தால் வாழலாம் (2005)
  • மவ ரக்ககென் வீர புத்தா (சிங்களம்) (2006)
  • தாயைக் காத்த தனயன் (2007)

மொழிபெயர்ப்பு - ஆங்கிலம்/தமிழ்

தொகு
  • துயரத்தில் வருந்துவது ஏன்?
  • ஆரோக்கியமான கண்கள் செயற்பாட்டு நூல்
    பத்திரிகைகளில் தொடராக வெளியாகிய ஆக்கங்கள்
பத்திரிகையின் பெயர் விபரம் வெளியானஆண்டு அத்தியாயங்களின்/இதழ்களின்எண்ணிக்கை
வீரகேசரி வார வெளியீடு
1 நிறைவேறாத சொர்க்கங்கள் தொடர் கதை 1992 14 அத்தியாயங்கள்
2 இந்த நாடகம் அந்த மேடையில் தொடர் கதை 1995 41 அத்தியாயங்கள்
3 மனம் என்னும் மேடையில் தொடர் கதை 2012 20 அத்தியாயங்கள்
4 வாடா மச்சான் ஊருக்கு நகைச்சுவைத் தொடர் 1991 40க்கு மேற்பட்ட இதழ்கள்
5 அக்கரைக்கு இக்கரை பச்சை நகைச்சுவைத் தொடர் 1993 45க்கு மேற்பட்ட இதழ்கள்
6 வடக்கு வாசல் நகைச்சுவைத் தொடர் 1992 6 இதழ்கள்
7 கொழும்பில் ஒரு தகிங்கிணதோம் நகைச்சுவைத் தொடர் 1992 20க்கு மேற்பட்ட இதழ்கள்
8 அக்கப்போர் நகைச்சுவைத் தொடர் 1994 6 இதழ்கள்
9 என்னதான் நடக்கும்நடக்கட்டுமே நகைச்சுவைத் தொடர் 1996 8 இதழ்கள்
மித்திரன் வாரமலர்
1 காதல் நீரில் தோன்றும்நிழலல்ல தொடர் கதை 1977 17 அத்தியாயங்கள்
2 ஒரு தாயும், மகனும்வாழ்கிறார்கள் தொடர் கதை 1985 18 அத்தியாயங்கள்
3 உலகம் சுற்றும் மனோ தொடர் கதை 1983 11 அத்தியாயங்கள்
4 விடிந்தால் வினிதா தொடர் கதை 1996 32 அத்தியாயங்கள்
5 ராத்திரிப் பொழுதுகாத்திருக்கு தொடர் கதை 1985 21 அத்தியாயங்கள்
6 டோக்கியோ அழைக்கிறது தொடர் கதை 1981 10 அத்தியாயங்கள்
7 ராஜ்னீஸ் சுவாமியின் அதிர்ச்சிஉலகம் உண்மைச் சம்பவங்களின்தொகுப்பு 1979 8 அத்தியாயங்கள்
8 ஒரு மனோதத்துவ டாக்டரின்ஏட்டிலிருந்து உண்மைச் சம்பவங்களின்தொகுப்பு 1980 15 இதழ்கள்
9 மிஸ்டர் அன்ட் மிஸிஸ் ஒப்பிலாமணி நகைச்சுவைத் தொடர் 1992 8 அத்தியாயங்கள்
மித்திரன் தினசரி
1 விமலா என்று ஒரு பெண் தெய்வம் தொடர் கதை 1972 28 அத்தியாயங்கள்
2 என் காதலர்கள் தொடர் கதை 1972 28 அத்தியாயங்கள்
3 உன் முகம் என் நெஞ்சில் தொடர் கதை 1985 10 அத்தியாயங்கள்
4 உறங்காத பறவைகள் தொடர் கதை 1981 13 அத்தியாயங்கள்
5 இளைய நிலா அழுகிறது தொடர் கதை 1981 37 அத்தியாயங்கள்
6 யோகராணி கொழும்புக்குப் போகிறாள் தொடர் கதை 1985 24 அத்தியாயங்கள்
7 13, பொன்சேகா வீதி தொடர் கதை 1985 32 அத்தியாயங்கள்
8 கசக்கும் இளமை தொடர் கதை 1985 10 அத்தியாயங்கள்
9 மர்மக் காதலி தொடர் கதை 1979 26 அத்தியாயங்கள்
10 அடிமைப் பெண் நெமி தொடர் கதை 1983 34 அத்தியாயங்கள்
11 அந்த ஆறு இரவுகள் தொடர் கதை 1983 40 அத்தியாயங்கள்
12 என்றும், எப்பொழுதும் பேசுவதற்குமட்டும் தொடர் கதை 1985 10 அத்தியாயங்கள்
13 உயிரின் விலை​தொடர் கதை தொடர் கதை 1985 24 அத்தியாயங்கள்
14 அம்பிகா... அம்பி... அம்... அ... தொடர் கதை 1984 43 அத்தியாயங்கள்
15 இதோ... இதோ.... தொடர் கதை 1984 6 அத்தியாயங்கள்
16 தேவி.... ஸ்ரீ.... தேவி தொடர் கதை 1984 6 அத்தியாயங்கள்
17 காதலுக்கு கண்ணுண்டு தொடர் கதை 1981 43 அத்தியாயங்கள்
18 வேர்ஜினியா தொடர் கதை 1981 7 அத்தியாயங்கள்
19 உச்சக் கட்டம் தொடர் கதை 1985 25 அத்தியாயங்கள்
20 ரோஸி... மை டார்லிங்ரோஸி தொடர் கதை 1984 43 அத்தியாயங்கள்
21 அன்ஜி அவள் ஒரு... தொடர் கதை 1984 21 அத்தியாயங்கள்
22 ஒரு சாமித்தம்பியும், ஒரு டுஷ்யந்தியும் தொடர் கதை 1984 6 அத்தியாயங்கள்
23 அந்த 14 நாட்கள் தொடர் கதை 1984 38 அத்தியாயங்கள்

பத்திரிகைகளில்/நூல்களில் வெளிவந்த சிறுகதைகள்

இதுவரை அவர் நூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். அவற்றில் 72 சிறுகதைகளின் விபரம் வருமாறு:

1. ஓர் ஆறு வழி பிரித்து ஓடுகிறது 2.​விழித்தெழும்உணர்வுகளுக்கு சாட்டை 3. தொடரும் சிறுகதை   4. சுதந்திரக்காற்று 5. என்று தணியும் இந்தப் போராட்டம் 6. டில்ருக்ஷியும், ஒருபாலன் “அய்யா”வும்   7. “மிஸிஸ்” சமரக்கொடியிள் “அனெக்ஸ்” 8.ஓர் ஆச்சரியக்குறி கேள்விக்குறியாகிறது 9. சொந்த மண்   10.“டிராபிக் புளொக்” 11. மண்ணை நம்பி... 12. பஞ்சம் 13. ஒரு“கப்டனும்” ஒரு பிராமணச் சிறுவனும்   14. சிறிபாலபுர“மாத்தையா” 15. “அவளும்”, அவளும் 16. ஊரில ஓர் அம்மா 17. தீபாவளி “போனஸ்”      18. ஊர் திருந்தாது 19. ஒரு திரைவிலகுகிறது 20. மேடை முழக்கம்  21. பெண்மையின் மென்மை             22. பண்டாரவும், அந்த நெடிந்துயர்ந்த மரமும் 23. அது ரஷ்யாவின்கலாசாரமாம் 24. புண்ணிய பூமி     25. தணிக்கப்படுவதல்ல மனிதப்பெறுமதிகள் 26. அசகியத்திலும் சுகமே 27. எங்கட ஊர் பரியாரியார்  28. விடலைப் பருவத்திலே... 29. ஜிம்மியின் இறுதிச் சடங்குகள்30.​ கண் திறந்த போது... 31. இருள் விலகுகின்றது 32. சேனாதீரவும், அந்தப் பெண்களும் 33. பழைய உறவின் புதியஆரம்பம் 34. நியாயம், தர்மம்... 35. புதிய வீட்டில் 36. மலர்வளையத்திற்கும் வாசமுண்டு 37. பவளக்கொடி 38. வாழ்வதற்காகசாவதா 39. தற்குறி 40. நியதி 41. பைத்தியம் 42. போராட்டம் 43. அம்மா 44. வைதீகம் 45. மொழி 46. மலர்கள் 47. முகவரியைத்தேடுகிறார்கள் 48. பால்ய திருமணம் 49. சா வரம் 50. ஒரு விடியல்பொழுதில் 51. ஒரு தூணும், ஆறேழு பலூன்களும் 52. சூறாவளியின்முன்னே ஒரு தீபம் 53. தவறுகள் திருத்தப்படலாம்   54. பனந்தோட்டத்து மாம்பழம் 55. கலாசார விலங்குகள் 56. நிரந்தரவதிவிடத்துடன் ஒரு மணப்பெண்! 57. பொருளாதாரத் தடை 58. இருள் விலகுகிறது 59. போராட்டமும், வடிவங்களும் 60. நீர்வீழ்ச்சிபின்னோக்கிப் பாய்வதில்லை 61. கோயில் காணியில் ஓர்எச்சரிக்கைப் பலகை 62. சில்லறைத்தனங்கள் 63. மூன்றாம் வகுப்புமனிதர்கள் 64. வணக்கம் யாழ்ப்பாணம் 65. விடியாத இரவு 66. பிரசவவலி        67. பயங்கரவாதத்திலிருந்து விடுதலை 68. லண்டனில் ஒருபோராட்டம் 69. வன்னி மாப்பிள்ளை 70. குட்டி 71. மனித உரிமைகள்சட்டத்தரணி 72. அப்பா வரமாட்டார்


வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Tamilmirror, 2013 ஒக்டோபர் 01
  3. http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=326&Itemid=60&limit=1&limitstart=2
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-21.
  5. http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/8935--2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோ._ராமேஸ்வரன்&oldid=3616944" இலிருந்து மீள்விக்கப்பட்டது