சௌதாலா, சிர்சா

இந்தியாவின் அரியானா மாநில கிராமம்

சௌதலா (Chautala) இந்தியாவின் அரியானாவில் உள்ள சிர்சா மாவட்டத்தில் அமைந்துள்ள தப்வாலி மண்டலத்தில் சிர்சாவுக்கு அருகிலுள்ள ஒரு கிராமமாகும்.[1] அரியானாவின் முன்னாள் முதலமைச்சர்களான தேவி லால் மற்றும் ஓம் பிரகாசு சௌதாலா ஆகியோர் இக்கிராமத்தைச் சேர்ந்தவர்களாவர். 1919 ஆம் ஆண்டில் இவர்களுடைய மூதாதையர்கள் சௌதாலா கிராமத்தில் குடியேறி வாழ்ந்தனர்.[2]

Chautala
சௌதாலா
Chutala
கிராமம்
Chautala is located in அரியானா
Chautala
Chautala
இந்தியாவின் அரியானாவில் அமைவிடம்
Chautala is located in இந்தியா
Chautala
Chautala
Chautala (இந்தியா)
ஆள்கூறுகள்: 29°46′50.7″N 74°31′21.2″E / 29.780750°N 74.522556°E / 29.780750; 74.522556
நாடு இந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்சிர்சா
அரசு
 • வகைஇந்தியாவின் ஊராட்சி மன்றம்
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
பரப்பளவு
 • மொத்தம்7.5 km2 (2.9 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்16,178
 • அடர்த்தி2,200/km2 (5,600/sq mi)
மொழிகள்
 • அலுவல்இந்தி, Regional அரியான்வி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
தொலைபேசிக் குறியீடு1668
ஐஎசுஓ 3166 குறியீடுஎச்.ஆர்-ஐ.என்
இணையதளம்haryana.gov.in

கிராமத்தில் ஒரு மருத்துவமனை, ஒரு தொழில்துறை பயிற்சி நிறுவனம், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான அரசு மேல்நிலைப் பள்ளிகள், சீத்தல் உயர்நிலைப் பள்ளி என்ற தனியார் பள்ளி, இரண்டு விளையாட்டு அரங்கங்கள் மற்றும் இரண்டு வங்கிகள் உள்ளன.[3]

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுக்களுக்கான குயின்சு பேட்டன் தொடரோட்டம் இந்த கிராமத்தின் வழியாக சென்றது.[4] 51 ஆவது மூத்த தேசிய கைப்பந்து வெற்றியாளர் போட்டி 2002 ஆம் ஆண்டில் சௌதாலாவின் சௌத்ரி சாகிப் ராம் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Chutala". 2011 Census of India. Government of India. Archived from the original on 1 May 2017. பார்க்கப்பட்ட நாள் 16 June 2017.
  2. "Om Prakash Chautala's ancestors came from Rajasthan". Times of India. 25 Jan 2013. http://timesofindia.indiatimes.com/india/Om-Prakash-Chautalas-ancestors-came-from-Rajasthan/articleshow/18175626.cms. 
  3. "Chautala and Badal, villages united by a family bond". Indian Express. 9 April 2014. http://indianexpress.com/article/india/politics/chautala-and-badal-villages-united-by-a-family-bond/. 
  4. "Queen's baton gets warm welcome". Times of India. http://timesofindia.indiatimes.com/sports/events-tournaments/cwg-2010/queens-baton-relay/Queens-baton-gets-warm-welcome/articleshow/6632625.cms?referral=PM. 
  5. "Stage set for volleyball nationals". The Tribune. 24 November 2002. http://www.tribuneindia.com/2002/20021124/sports.htm#10. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌதாலா,_சிர்சா&oldid=4111489" இலிருந்து மீள்விக்கப்பட்டது