சௌத்ரி சர்தார் கான்

இந்திய அரசியல்வாதி

சௌத்ரி சர்தார் கான் (Chaudhary Sardar Khan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பிரித்தானிய இந்தியாவில் பரத்பூர் சமசுதானத்தில் இருந்த புனகனா நகரத்தில் சௌத்ரி சர்தார் கான் பிறந்தார். அரியானா மாநிலத்தின் உள்துறை அமைச்சராக பணியாற்றினார். 1977 ஆம் ஆண்டு அரியானா சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் சனதா கட்சியின் உறுப்பினராக நுகு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சௌத்ரி சர்தார் கான் ரகீம் கான் குலத்தைச் சேர்ந்தவராவார். அரியானாவின் மேவாட்டில் உள்ள அனைத்து அரசியல் குடும்பங்களிலும் மிக முக்கியமானவராகவும் கருதப்பட்டார்.[1]

சௌத்ரி சர்தார் கான்
உள்துறை அமைச்சர்,
அரியானா மாநில அரசு
பதவியில்
21 சூன் 1977 – 28 சூன் 1979
முதலமைச்சர்தேவிலால்
உறுப்பினர், அரியானா சட்டமன்றம்
பதவியில்
1977–1982
தொகுதிநூகு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபுனகனா, பரத்பூர் சமசுதானம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
(தற்பொழுது அரியானா, இந்தியா)
அரசியல் கட்சிசனதா கட்சி
உறவுகள்சௌத்ரி ரகீம் கான் (சகோதரர்), சௌத்ரி அபீபு உர் ரகுமான்]] (மருமகன்), சௌத்ரி மொகமது இலியாசு (மருமகன்)
பெற்றோர்சிறீ நவாசு கான் (தந்தை)

மேற்கோள்கள்

தொகு
  1. "Nuh Election Result 2019 - Candidate list, MLAs, Live Updates & News". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 2023-09-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌத்ரி_சர்தார்_கான்&oldid=3914892" இலிருந்து மீள்விக்கப்பட்டது