சௌமினி ஜெயின்
சௌமினி ஜெயின் (Soumini Jain) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கொச்சி மாநகராட்சியின் நகரத் தந்தையாக பணியாற்றினார்.[1] 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டிற்கு இடையில் இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருந்தார்.[2] சௌமினி மாநகராட்சி சபையில் 36 வது பிரிவை (எலம்குளம்) பிரதிநிதித்துவப்படுத்தினார்.
சௌமினி ஜெயின் | |
---|---|
கொச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயர் | |
பதவியில் 2015–2020 | |
முன்னையவர் | டோனி சம்மனி |
பின்னவர் | அட்வகேட். எம். அனில் குமார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுசௌமினி ஜெயின் ரவிபுரம், கொச்சி இந்து நாயர் குடும்பத்தில் பிறந்தார். இவர் பி கே மேனனின் மகள். இவர் தேவாரம், தூய இருதயக் கல்லூரியில் இருந்து இளநிலைப் பட்டம் பெற்றார். மேலும், கேரளப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். இவர் கிறிஸ்தவ தொழிலதிபர் ஜெயின் என்பவரை மணந்தார். [3] இவர்களுக்கு பத்மினி ஜெயின் மற்றும் வருண் ஜெயின் என்ற குழந்தைகள் உள்ளனர். [4][5]
2015 ஆம் ஆண்டில் நகரத்தந்தையாக போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியலில் இவர் பெயர் முன்னிலைப்படுத்தப்பட்டது. நகரத்தந்தையின் பதவிக்காலம் ஐந்து ஆண்டு காலம் ஆகும்.
மேற்கோள்
தொகு- ↑ "Thiruvananthapuram: Soumini Jain sails through for now". தி டெக்கன் குரோனிக்கள் (in ஆங்கிலம்). 2019-10-31. பார்க்கப்பட்ட நாள் 2020-07-31.
- ↑ "Soumini Jain to step down; Shiny likely to be next Kochi mayor". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 2020-07-31.
- ↑ "പ്രണയിച്ച് വിവാഹം കഴിച്ച് ക്രൈസ്തവ തറവാട്ടിലെ അംഗമായി; കോൺഗ്രസ് എ ഗ്രൂപ്പിനൊപ്പം അടിയ..." www.marunadanmalayalee.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-31.
- ↑ "Soumini Jain All Set To Become 19th Mayor of Kochi Corporation". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 2020-07-31.
- ↑ "PressReader.com - Your favorite newspapers and magazines". PressReader. பார்க்கப்பட்ட நாள் 2020-07-31.