சௌமியா அன்புமணி

சௌமியா அன்புமணி (Sowmiya Anbumani) ஒரு தமிழக அரசியல்வாதியும், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரும் ஆவார். இவரின் கணவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஆவார். இவர் மக்கள் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநராகவும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராகவும் உள்ளார். 2024 இந்திய மக்களவைப் பொது தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டார்.[1][2]

சௌமியா அன்புமணி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி
துணைவர்அன்புமணி ராமதாஸ்
பிள்ளைகள்சம்யுக்தா,
சங்கமித்ரா,
சஞ்சுத்ரா
வாழிடம்(s)சென்னை, தமிழ்நாடு, இந்தியா
கல்விசமூகவியல் முனைவர் பட்டம்
வேலைஅரசியல்வாதி,
அறியப்படுவதுபசுமைத் தாயகம்

குடும்பம்

தொகு

இவர் காங்கிரசின் முன்னாள் தலைவரான எம். கிருஷ்ணசாமியின் மகளும்,[3] எம். கே. விஷ்ணு பிரசாத்தின் தங்கையும் ஆவார்

கல்வி

தொகு

சௌமியா சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிக் கல்லூரியில் இளங்கலையும், முதுகலைப் பட்டமும் பெற்றார்.[1] இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "SOWMIYA ANBUMANI". மை நேட்டா. பார்க்கப்பட்ட நாள் 4 June 2024.
  2. "சௌமியா அன்புமணி தேர்தலில் போட்டியிடுவது குடும்ப அரசியலா, இல்லையா?' - விகடன் கருத்துக்கணிப்பு". ஆனந்த விகடன். https://www.vikatan.com/government-and-politics/vikatan-poll-results-about-sowmiya-anbumani-lok-sabha-election-contesting-is-nepotism-politics-or-not#google_vignette. பார்த்த நாள்: 4 June 2024. 
  3. "அன்புமணியை தாக்கி பேசிய உறவினர் விஷ்ணுபிரசாத்". இந்து தமிழ் (பிப்ரவரி 21, 2019)
  4. "Sowmiya Anbumani gets Ph.D in sociology". தி இந்து. https://www.thehindu.com/news/cities/Madurai/sowmiya-anbumani-gets-phd-in-sociology/article29546347.ece. பார்த்த நாள்: 4 June 2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌமியா_அன்புமணி&oldid=3999689" இலிருந்து மீள்விக்கப்பட்டது