ச. சுப்பையா

இந்திய அரசியல்வாதி

ச. சுப்பையா (S. Subbiah)(பிறப்பு 24 ஆகத்து 1934) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சங்கரன்கோயில் கழக உயர்நிலைப் பள்ளி, திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்து மேனிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினையும், திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் கல்லூரியில் கல்லூரிக் கல்வியினையும் முடித்துள்ளார். இவர் 1971 மற்றும் 1977ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிட்டு சங்கரன்கோவில் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1971 சங்கரன்கோவில் திமுக 35,677 61.84[3]
1977 சங்கரன்கோவில் திமுக 21,569 34.26[4]

மேற்கோள்கள் தொகு

  1. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
  2. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
  3. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  4. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._சுப்பையா&oldid=3552514" இலிருந்து மீள்விக்கப்பட்டது