ச. நா. குப்தா

இந்திய அரசியல்வாதி

சி. என். குப்தா (C. N. Gupta; 3 ஏப்ரல் 1947) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்றம் உறுப்பினரும் ஆவார்.

சதுர்புஜ் நாத் குப்தா
உறுப்பினர்-பீகார் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2020 முதல்
முன்னையவர்இரந்தீர் குமார் சிங்
தொகுதிசாப்ரா சட்டமன்றத் தொகுதி
உறுப்பினர்-பீகார் சட்டப் பேரவை
பதவியில்
2015–2020
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 ஏப்ரல் 1947 (1947-04-03) (அகவை 77)[1]
மோதிபூர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்
காயத்ரி ஆர்யானி (தி. 1971)
பிள்ளைகள்3
வாழிடம்பீகார்
வேலைஅரசியல்வாதி

இளமையும் கல்வியும்

தொகு

குப்தா தனது இடைநிலைப் பள்ளிக் கல்வியை 1965-இல் சீதாமாரியில் உள்ள சிறீ இராதா கிருட்டிணா கோயங்கா கல்லூரியில் முடித்தார். பின்னர் மருத்துவக் கல்வியினை தர்பங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 1970ஆம் ஆண்டு முடித்தார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

குப்தா சப்ரா, சிவான் மற்றும் கோபால்கஞ்ச் உள்ளிட்ட சரண் பிரிவின் ஆர். எஸ். எஸ். அமைப்பின் சேவகராக இருந்தார்.[2] சி. என். குப்தா சப்ரா மற்றும் சாப்பிராவினைச் ஒட்டிய பகுதிகளில் ஒரு மருத்துவராகவும் சமூக சேவகராகவும் நன்கு அறியப்பட்டவராக உள்ளார். 1967-இல் ஆர். எஸ். எஸ். அமைப்பில் சேர்ந்தார். இவர் 2014-இல் சப்ரா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, இடைத்தேர்தல் தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.[3]

குப்தா 2015 பீகார் சட்டமன்ற தேர்தல் மற்றும் 2020 பீகார் சட்டமன்ற தேர்தல்களில் பாஜக சார்பில் சப்ரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4][5][6][7][8]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

குப்தா 18 பிப்ரவரி 2021 அன்று காயத்ரி ஆரியானியை மணந்தார். காயத்ரி 2018 முதல் 2019 வரை சப்ராவின் இன்னர்வீல் சங்க (மாவட்டம் 325) மாவட்டத் தலைவராக இருந்தார்.[9]

குப்தா வைசிய சமூகத்தை (தெலி) சேர்ந்தவர். குப்தா 2013 வரை பீகார் தைலிக் சாகு சமாஜின் தலைவராக பணியாற்றினார். குப்தா 2007-இல் சிவானின் அறுவை சிகிச்சை நிபுணராக ஓய்வு பெற்றார். இதன் பின்னர் சப்ராவில் ஒரு நோயியல் ஆய்வகத்தை நடத்தி வருகிறார். 

மேற்கோள்கள்

தொகு
  1. "बिहार विधान सभा सचिवालय - सप्तदश बिहार विधान सभा मे माननीय सदस्यों की जन्म तिथि एवं टर्मवार सूची" (PDF). Bihar Vidhan Sabha (in Hindi). Archived (PDF) from the original on 27 April 2023.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "RSS activist joins fray against BJP in Chhapra". 17 August 2014. https://timesofindia.indiatimes.com/city/patna/rss-activist-joins-fray-against-bjp-in-chhapra/articleshow/40324808.cms. 
  3. "Saffron party struggles to keep flock together". 23 October 2015. https://timesofindia.indiatimes.com/city/patna/saffron-party-struggles-to-keep-flock-together/articleshow/49510105.cms. 
  4. "Dr.C.N Gupta Chara Candidate". News18.
  5. "C.N Gupta Profile". My Neta Info.
  6. "C N Gupta Election Results 2020: News, Votes, Results of Bihar Assembly". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-24.
  7. Live, A. B. P. "Bihar Elections 2020 Candidate | Dr. C. N. Gupta | Chapra". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-24.
  8. Desk, India com News (2020-11-10). "Chapra Constituency Result: BJP Candidate Dr CN Gupta Defeats RJD's Randhir Kumar For Second Term". India News, Breaking News | India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-24.
  9. "past district chairman". Archived from the original on 20 September 2022. பார்க்கப்பட்ட நாள் 17 September 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._நா._குப்தா&oldid=3989271" இலிருந்து மீள்விக்கப்பட்டது