ச. வி. கடே

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் முதல் பொதுச் செயலாளர்

சச்சிதானந்த் விஷ்ணு கடே (Sachchidanand Vishnu Ghate) (14 டிசம்பர் 1896-28 நவம்பர் 1970), எஸ். வி. கடே என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் சுதந்திர போராட்ட வீரரும் மற்றும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் முதல் பொதுச் செயலாளரும் ஆவார்.[1][2][3][4] இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் கர்நாடக மாநில தலைமை அலுவகத்திற்கு இவரது நினைவாக ‘கேட் பவன்’ என பெயரிடப்பட்டுள்ளது.[5]

சச்சிதானந்த் விஷ்ணு கடே
இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின்
முதல் பொதுச் செயலாளர்
பதவியில்
1925–1933
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னவர்கங்காதர் அதிகாரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1896-12-14)14 திசம்பர் 1896
மங்களூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு28 November 1970 (1970-11-29) (அகவை 73)
புது தில்லி
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
வேலைஅரசியல்வாதி

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

எஸ். வி. கடே, மங்களூரில் மராத்திய கர்கடே பிராமணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். தனது மூத்த சகோதரரின் உதவியுடன், இவர் மங்களூரில் உள்ள புனித அலோசியசு கல்லூரியில் பயின்றார்.[6] இராமகிருஷ்ணர் மற்றும் விவேகானந்தர் உள்ளிட்டோரின் இந்தியத் தத்துவங்களைப் படித்ததன் மூலம் தான் ஒரு பொதுவுடைமைவாதியாக மாறியதாக அவரே கூறினார். தத்துவத்தில் உள்ள அனைத்து தலைப்புகளிலும் முக்கியமானது “மக்களுக்கு சேவை செய்வதாகும்” எனவும் மேலும் கூறினார்.[7]

கட்சிப் பொதுச் செயலாளர்

தொகு

1925 டிசம்பரில் சத்ய பக்தாவின் தலைமையில் கான்பூரில் நடைபெற்ற இந்தியப் பொதுவுடைமை அமைப்புகளின் முதல் மாநாட்டில், பல சிறிய இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்பு மூலம் "இந்தியப் பொதுவுடைமைக் கட்சி" என்ற பெயரில் அகில இந்திய அமைப்பை நிறுவ அனுமதித்தது.

மாநாட்டின் போது, கட்சிக்கு பொருத்தமான பெயர் குறித்து தலைவர்களிடையே விவாதம் நடைபெற்றது. கட்சிக்கு “இந்தியப் பொதுவுடைமைக் கட்சி” என்று பெயரிடப்பட வேண்டும் என்றும் “தேசியப் பொதுவுடைமைக் கட்சி” என்றும் பல்வேறு கருத்துகள் எழுந்தன.[8] இறுதியாக, டிசம்பர் 26,1925 அன்று, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி உருவாக்கப்பட்டது. மேலும் கடே அதன் முதல் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Ghate, Sachchidanand Vishnu (July 29, 1971). "S. V. Ghate: Our First General Secretary: A Memorial Volume". Communist Party Publication – via Google Books.
  2. SV Ghate: First General Secretary of CPI, in New Age Weekly. No. 69, 2021. pp. 11-12
  3. "Remembering S.V. Ghate - Mainstream Weekly". www.mainstreamweekly.net.
  4. "Kanpur Communist Conference (December 1926)". Communist Party of India (Marxist). April 28, 2015. Archived from the original on நவம்பர் 29, 2022. பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 14, 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  5. IPA Staff (December 27, 2019). "Jharkhand Defeat Is A Definite Shift - India Press Agency". IPA Newspack (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-20.
  6. Kooiman, Dick (July 19, 1980). "Bombay Communists and the 1924 Textile Strike". Economic and Political Weekly 15 (29): 1228–1229. https://www.jstor.org/stable/4368873. 
  7. Hesse, Patrick (July 25, 2015). ""To the Masses." Communism and Religion in North India, 1920–47". Humboldt-Universitat zu Berlin: 83. https://edoc.hu-berlin.de/bitstream/handle/18452/20068/dissertation_hesse_patrick.pdf. 
  8. Noorani, A.G. (May 18, 2012). "Origins of Indian Communism". Frontline 28. https://frontline.thehindu.com/the-nation/article30165649.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._வி._கடே&oldid=4107726" இலிருந்து மீள்விக்கப்பட்டது