ஜகனரா ஆலம்

வங்காளதேச துடுப்பாட்டக்காரர்

ஜகனரா ஆலம் (Jahanara Alam வங்காள: জাহানারা আলম ) (பிறப்பு: 1 ஏப்ரல் 1993) என்பவர் வங்காளதேச பெண்கள் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் தலைவர் ஆவார். இவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்காக பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி மற்றும் பெண்கள் பன்னாட்டு இருபது20 சர்வதேச அளவில் விளையாடி வருகிறார். மேலும் இவர் இருபது20 போட்டிகளிலும் விளையாடி வருகிறார். 2011 ஆம் ஆண்டில் இவர் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் 152 ஓட்டங்களையும் 33 இலக்குகளையும் கைபற்றியுள்ளார். பன்னாட்டு இருபது20 போட்டிகளில் 156 ஓட்டங்களையும் 53 இலக்குகளையும் கைப்பற்றினார். மேலும் இவர் 19 வயதிற்கு உட்பட்ட வங்காளதேச அணி , வங்காளதேச அ அணி சார்பாகவும் இவர் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டார். [1] [2] [3] [4] அவர் ஒரு வலது கை மித வேகப்பந்து வீச்சாளர் மற்றும் வலது கை பெண் மட்டையாளர் ஆவார்.

ஜகனரா ஆலம்
Jahanara Alam (7) (cropped).jpg
பிறப்பு1 ஏப்ரல் 1993 (அகவை 27)
குல்னா

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணிதொகு

ஜஹானாரா வங்காளதேசத்தில் உள்ள குல்னாவில் பிறந்தார்.

தொழில்தொகு

ஆசிய விளையாட்டுக்கள்தொகு

சீனாவின் குவாங்சோவில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனாவின் தேசிய பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக துடுப்பாட்ட பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அணியில் ஆலம் உறுப்பினராக இருந்தார். [5]

சர்வதேச துடுப்பாட்டம்தொகு

நவம்பர் 26, 2011 அன்று அயர்லாந்து மகளிர் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஆலம் தனது ஒருநாள் போட்டியில் இவர் அறிமுகமானார்.

2012 ஆம் ஆண்டில் இவர் பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமனார். ஆகஸ்டு 28 இல் இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமனார். 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற பெண்கள் ஆசியத் துடுப்பாட்டக் கோப்பைத் தொடரில் இவர் வங்காளதேச பெண்கள் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். மேலும் அந்தத் தொடரை வங்காளதேச பெண்கள் அணி வென்றது. ஆசியக் கோப்பையினை அந்த அணி வெல்வது இதுவே முதல் முறையாகும்.[6][7] அதே மாதத்தின் பிற்பகுதியில், 2018 ஐ.சி.சி மகளிர் உலக இருபதுக்கு -20 தகுதிப் போட்டிக்கான வங்காளதேச அணியில் இவர் இடம் பெற்றார். [8] 2019 ஆம் ஆண்டில் நவமபர் 4 இல் லாகூர் துடுப்பாட்ட அரங்கத்தில் பாக்கித்தான் பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் விளையாடினார்.[9]

28 ஜூன் 2018 அன்று, அயர்லாந்துக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் ஐந்து இழப்புகளை வீழ்த்தினார். இதன் மூலம் பன்னாட்டு இருபது போட்டித் தொடரில் ஐந்து இலக்குகளை வீழ்த்திய முதல் வங்காளதேச பெண் வீரர் எனும் சாதனை படைத்தார்.[10]

அக்டோபர் 2018 இல், மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற 2018 ஐசிசி மகளிர் பன்னாட்டு இருபது -20 போட்டிக்கான வங்காளதேச அணியில் இடம் பெற்றார். [11] [12] இந்தத் தொடரில் இவர் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தினார். மேலும் நான்கு போட்டிகளில் ஆறு இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பெற்றார்.[13]இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த வீரராகத் தேர்வானார்.[14]

ஆகஸ்ட் 2019 இல், ஸ்காட்லாந்தில் நடைபெறும் 2019 ஐசிசி மகளிர் உலக இருபதுக்கு -20 தகுதிப் போட்டிக்கான வங்காளதேச அணியில் இடம் பெற்றார். [15]

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜகனரா_ஆலம்&oldid=2870299" இருந்து மீள்விக்கப்பட்டது