ஜகார்த்தா கோளரங்கம் மற்றும் ஆய்வகம்
ஜகார்த்தா கோளரங்கம் மற்றும் ஆய்வகம் (Jakarta Planetarium and Observatory) (இந்தோனேசிய: கோளரங்கம் டான் Observatorium ஜகார்த்தா), இந்தோனேஷியாவில் ஜகார்த்தாதாவில் உள்ள பொது கோளரங்கம் மற்றும் ஒரு ஆய்வகம் ஆகும். இது தாமான் இஸ்மாயில் மார்சுக்கி கலை மற்றும் அறிவியல் வளாகத்தின் ஒரு பிரிவாகும். இந்தோனேசியாவின் அமைந்துள்ள மூன்று கோளரங்குகளில் இந்தக் கோளரங்கம் மிகவும் பழமையானது ஆகும். இரண்டாவது கோளரங்கம் கிழக்கு ஜாவாவின் சுரபயாவில் அமைந்துள்ளது. மூன்றாவது கோளரங்கம் கிழக்கு காளிமந்தனின் குட்டை என்ற இடத்தில் அமைந்துள்ளது.[2]
ஜகார்த்தா கோளரங்கம் மற்றும் ஆய்வகம் | |
---|---|
ஜகார்த்தா கோளரங்கம் மற்றும் ஆய்வகம் (coordinates below is for the observatory) | |
அமைவிடம் | ஜகார்த்தா, இந்தோனேசியா |
ஆள்கூறுகள் | |
உயரம் | 10 m[1] |
அமைக்கப்பட்ட ஆண்டு | நவம்பர் 10, 1968 |
இணையதளம் https://planetarium.jakarta.go.id/ |
துவக்கம்
தொகுஜனாதிபதி சுகர்னோ1960 களின் முற்பகுதியில் ஒரு பெரிய அளவிலான கோளரங்கம் திட்டத்தை நிர்மாணிப்பது தொடர்பான திட்டத்தை மேற்கொண்டார். அது அவருடைய பெரிய முயற்சியாக அமைந்தது. இருந்தாலும், 1960 களின் அடுத்த பாதியில், வடிவமைப்பு மிகவும் சற்று மிதமான பாணிக்கு மாற்றப்பட்டது. கலை வளாகத்தின் கட்டுமானத்தின் ஒரு பகுதியாக இந்த ஜகார்த்தா கோளரங்கம் மற்றும் ஆய்வகத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்க ஆரம்பித்தன. இந்த கட்டுமானத்திற்கு இந்தோனேசிய அரசாங்கமும் இந்தோனேசிய பாடிக் கூட்டுறவு சங்கமும் (கபுங்கன் கோபராசி பாடிக் இந்தோனேசியா அல்லது ஜி.கே.பி.ஐ) நிதி உதவி செய்தன.
வளர்ச்சி நிலை
தொகுகோளரங்கத்தின் 22 மீட்டர் அளவில் அமைந்த குவிமாடம் 1968 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. நவம்பர் 10, 1968 ஆம் நாளன்று, இந்தக் கட்டிடத்தை ஜகார்த்தாவின் ஆளுநராக இருந்த அலி சாதிகின், கலை வளாகத்துடன் இணைந்து இதனை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். மார்ச் 1, 1969 ஆம் நான்று கோளரங்கம் பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்துவிடப்பட்டது; அந்த நாள் கோளரங்கத்தின் அதிகாரப்பூர்வமான துவக்க நாளாக மாற்றப்பட்டது. இந்தக் கோளரங்கம் கார்ல் ஜெய்ஸ் யுனிவர்சல் கோளரங்கம் ப்ரொஜெக்டரைப் பயன்படுத்தியது [2]
1975 ஆம் ஆண்டில், 1964 களில் இருந்து ஏற்கனவே நிறுவனத்தின் சொத்தாக இருந்து வந்த ஒரு கூட் தொலைநோக்கி இரண்டு மாடிக் கட்டிடத்தில் நிறுவப்பட்டது. அந்த தொலைநோக்கி அமைக்கப்பட்ட இடம் கோளரங்கத்திலிருந்து வெகு தொலைவில் இல்லாத நிலையில் அமைந்தது. தொலைநோக்கி முன்பு இருந்த இந்த நிலம் மற்றொரு உரிமையாளருக்கு சொந்தமானதாக இருந்ததால், 1982 ஆம் ஆண்டில், கூட் தொலைநோக்கியானது தற்போதைய ஆய்வகத்திற்கு நெருக்கமாக நகர்த்தி வைக்கப்பட்டது.[3]
1984 ஆம் ஆண்டில், ஜகார்த்தா கோளரங்கம் அதிகாரப்பூர்வமாக ஜகார்த்தா கோளரங்கம் மற்றும் ஆய்வகமாக பெயர் மாற்றம் பெற ஆரம்பித்தது. 1991 ஆம் ஆண்டில், கட்டிடம் நீட்டிக்கப்பட்டது. பின்னர் அக் கட்டடத்தில் வகுப்பு அறைகள் உள்ளிட்ட பல வசதிகள் சேர்க்கப்பட்டன. 1994 ஆம் ஆண்டில், பழைய தொலைநோக்கியை மாற்றுவதற்காக 31 செ.மீ அளவிலான நட்சத்திர தொலைநோக்கி வாங்கப்பட்டது.[3]
1996 ஆம் ஆண்டில் கோளரங்கத்தின் பெரிய புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டதோடு, தொழில்நுட்ப மேம்பாடும் செய்யப்பட்டது. முந்தைய யுனிவர்சல் ப்ரொஜெக்டருக்கு பதிலாக கணினிமயமாக்கப்பட்ட யுனிவர்சேரியம் VIII வகையிலான ப்ரொஜெக்டர் அமைக்கப்பட்டது. குவிமாடத்தின் திரைக்கான பொருள் மாற்றப்பட்டு குவிமாடத்தின் விட்டம் 23 மீட்டரிலிருந்து 22 மீட்டராகக் குறைக்கப்பட்டது. அதே சமயத்தில் தளத்தின் உயரம் மேம்படுத்தப்பட்டது. முன்பு அமைந்திருந்த மையப்பகுதியை எதிர்கொள்ளும் வகையில் அமைந்திருந்த இருக்கை உள்ளமைவு தெற்கு நோக்கிய உள்ளமைவாக மாற்றி மறுசீரமைக்கப்பட்டது, மேலும் இருக்கைகளின் எண்ணிக்கை 500 முதல் 320 ஆக குறைக்கப்பட்டது.[2]
2010 ஆம் ஆண்டில், ஒரு மொபைல் கண்காணிப்புப் பிரிவான, LUNT 80 மிமீ சூரிய தொலைநோக்கி, விக்சன் விசி 200 தொலைநோக்கி மற்றும் 120 மிமீ ஒளிவிலகல் போன்ற பல தொலைநோக்கிகளைக் கொண்டு செல்லும் அளவிலான ஒரு மினி பஸ் [3] வாங்கப்பட்டது:
வசதி
தொகுஜகார்த்தா கோளரங்கம் மற்றும் ஆய்வகம் வானியல் கண்காட்சி மண்டபத்தைக் கொண்டுள்ளது. கோளரங்கத்தில் ஒன்பது திரைப்படங்கள், ஒவ்வொன்றும் 60 நிமிடங்களுக்குத் திரையிடப்படுகின்றன.
குறிப்புகள்
தொகு- ↑ Google Earth observation
- ↑ 2.0 2.1 2.2 "Sejarah Planetarium" (in Indonesian). Planetarium Jakarta. December 12, 2011. Archived from the original on January 1, 2013. பார்க்கப்பட்ட நாள் February 2, 2013.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 3.0 3.1 3.2 "Koleksi Teleskop". planetariumjkt.com (in Indonesian). Planetarium Jakarta. December 12, 2011. Archived from the original on July 4, 2013. பார்க்கப்பட்ட நாள் June 17, 2013.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)