ஜக்கம்புடி ராம்மோகன் ராவ்

இந்திய அரசியல்வாதி

ஜக்கம்புடி ராம்மோகன் ராவ் (Jakkampudi Rammohan Rao) (6 ஆகஸ்ட் 1953 – 9 அக்டோபர் 2011) ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தில் மூன்று முறை கடையம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] 1989, 1999 மற்றும் 2004 தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளராக வெற்றி பெற்றார். 2004 இல் சாலைகள் மற்றும் கட்டிடங்கள் மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் கலால் துறை அமைச்சரானார்.[2] இவர் 2010 இல் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் [1]

ஜக்கம்புடி ராம்மோகன் ராவ்
சாலைகள் மற்றும் கட்டிடங்கள் மற்றும் கலால் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2004 - 2009
தொகுதிகடையம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 ஆகஸ்ட் 1953
அடூரு, கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு9 அக்டோபர் 2011
ராஜமன்றி
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ஜக்கம்புடி விஜயலட்சுமி
பிள்ளைகள்3
பெற்றோர்பெடா வீரையா, சீதாரத்தினம்

இறப்பு

தொகு

இவர் 6 ஆகஸ்ட் 1953 இல் அடூரில் பிறந்தார். பல ஆண்டுகளாக நீரிழிவு நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு, 9 அக்டோபர் 2011 அன்று பொல்லினேனி மருத்துவமனையில் இறந்தார்.

கடந்த 2009-ம் ஆண்டு விஜயலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.[1][3]

மேற்கோள்கள்

தொகு