ஜங்கர் சிங் ஷியாம்

ஜங்கர் சிங் ஷியாம் (Jangarh Singh Shyam) (1962-2001) ஒரு முன்னோடி சமகால இந்திய கலைஞர் ஆவார். ஜங்கர் கலாம் என்ற புதிய இந்திய கலைப் பள்ளியையும் உருவாக்கினார். போபால், தில்லி, தோக்கியோ, நியூயார்க்கு உட்பட உலகம் முழுவதும் இவரது படைப்புகள் பரவலாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பாரிஸில் உள்ள மேஜீசியன்ஸ் டி லா டெர்ரே (1989) மற்றும் புது தில்லி (1998) வரைகலைக் காட்சிக் கூடத்தில் ஜோதிந்திர ஜெயின் தொகுத்த ஓவியங்கள் ஆகியவை இவரது மிகவும் குறிப்பிடத்தக்க கண்காட்சிகளில் அடங்கும். இவரது 1988 ஆம் ஆண்டு லேண்ட்ஸ்கேப் வித் ஸ்பைடர் 2010 இல் நியூயார்க்கில் உள்ள ஏல நிறுவனமான சோதேபியில், $31,250க்கு விற்கப்பட்டது- இது ஒரு ஆதிவாசி கலைஞருக்கு முதல் கௌரவமாகும். [1] மத்தியப் பிரதேச சட்டமன்றம், விதான் பவன், பழங்குடி மற்றும் சமகால இந்திய கலைகளின் மிகவும் மதிப்புமிக்க அருங்காட்சியகங்களில் ஒன்றான பாரத் பவன் போன்ற இடங்களில் இவரது ஓவியங்கள் வரையப்பட்டது. தனது ஓவியங்களுக்கு காகிதம் மற்றும் கேன்வாஸைப் பயன்படுத்திய முதல் கோண்டு கலைஞர்களில் இவரும் ஒருவர். இதன்மூலம் இப்போது "ஜங்கர் கலாம்" என்று அழைக்கப்படும் கலைக்கூடத்தை திறந்து வைத்தார். [2]

ஜங்கர் சிங் ஷியாம்
பாரத் பவனில் ஷியாமின் பணி
பிறப்பு1962, பதங்கர் கிராமம், மண்ட்லா மாவட்டம், கிழக்கு மத்தியப் பிரதேசம்
இறப்பு2001, யப்பான்
தேசியம் இந்தியா
அறியப்படுவதுஓவியம், வண்ணம் தீட்டுதல், சிற்பம், சுவர் ஓவியம்
அரசியல் இயக்கம்ஜங்கர் கலாம்
வாழ்க்கைத்
துணை
நங்குசியா பாய்
விருதுகள்Shikhar Samman

சுயசரிதை

தொகு
 
பதங்கர் கிராமம், மண்ட்லா மாவட்டம், மத்தியப் பிரதேசம்

கிழக்கு மத்திய பிரதேசத்தின் (திண்டோரி மாவட்டம்), மண்டலா மாவட்டம், பதங்கர் கிராமத்தில் ஒரு பர்தான் கோண்டு குடும்பத்தில் ஜங்கர் பிறந்தார். இவர் கடுமையான வறுமையில் வளர்ந்தார். இது இவரை பள்ளியை விட்டு வெளியேறவும், விவசாயத்தில் ஈடுபடவும் கட்டாயப்படுத்தியது. இவர் எருமைகளை மேய்ந்து அருகிலுள்ள ஊரில் அதன் பாலை விற்று வந்தார். [3]

தொழில்

தொகு

தனது பதினாறாவது வயதில் சோன்பூர் கிராமத்தைச் சேர்ந்த நங்குசியா பாய் என்பவரை மணந்தார்; இவரது மனைவியும் பின்னர் ஒரு சக கலைஞராக மாறினார். இவரது திருமணத்திற்கு சில வருடங்கள் கழித்து, அக்டோபர் 1981 இல், கலை அருங்காட்சியகமான பாரத் பவனிலிருந்து அணுகினர். [4] அதன் முதல் இயக்குனரான கலைஞர் ஜகதீஷ் சுவாமிநாதனை இவர் சந்தித்தார். இவரது திறமையை உணர்ந்து சுவாமிநாதன் அவரை நகரத்திற்கு அழைத்துச் சென்று ஷியாமின் ஓவியங்களின் கண்காட்சிகளை நடத்தினார். ஷியாம் விரைவில் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றார். மேலும், அவரது ஓவியங்கள் சப்பான், ஐக்கிய இராச்சியம், அமெரிக்காவில் உள்ள கண்காட்சிகளில் சேர்க்கப்பட்டன. 1982 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட போபாலின் பலகலை வளாகமான பாரத் பவன் மற்றும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பழங்குடி கலைகளின் தொகுப்புக்கு சுவாமிநாதன் உதவினார். [5] [6]

பிப்ரவரி 1982இல் பாரத் பவனின் தொடக்க கண்காட்சியில் இவரது முதல் மாதிரி ஓவியங்களை காட்சிப் படுத்தினார். பின்னர், இவர் பாரத் பவனின் வரைகலை துறையில் பணிபுரிந்தார். மேலும் இவர் தனது குடும்பத்தினருடன் போபாலின் பேராசிரியர் காலனியில் உள்ள சுவாமிநாதனின் வீட்டின் பின்னால் வாழத் தொடங்கினார்.

1986 ஆம் ஆண்டில், மத்தியப் பிரதேச அரசு வழங்கிய மிக உயர்ந்த ஷிக்கார் சம்மான் விருது வழங்கப்பட்டது. புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் சார்லசு கொரியா வடிவமைத்த போபாலில் புதிய சட்டமன்றக் கட்டடம் விதான் பவனுக்கான வெளிப்புற சுவரோவியங்களை வரைய இவர் நியமிக்கப்பட்டார். 1989 ஆம் ஆண்டில், பாரிஸில் நடந்த பாம்பிடோ மையத்தின் மேஜிசியன்ஸ் டி லா டெர்ரே (பூமியின் மந்திரவாதிகள்) கண்காட்சியில் இவரது ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. சப்பானின் டோகாமாச்சியில் உள்ள மிதிலா அருங்காட்சியகத்தில் [7] தங்கி சில காலம் தனது பணிகளைச் செய்தார்.

இறப்பு

தொகு

2001 ஆம் ஆண்டில், மிதிலா அருங்காட்சியகத்தில் தனது அறையில் இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சப்பானில் உள்ள அருங்காட்சியகத்தின் உரிமையாளரை இந்திய கலைச் சமூகம் குற்றம் சாட்டினாலும், இவர் உயிரை மாய்த்துக் கொண்டதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை. [8]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2019-02-21. பார்க்கப்பட்ட நாள் 2021-03-13.
  2. "Tribute to tribal Gond artist Jangarh Singh Shyam". Business Standard. 8 January 2015.
  3. Udayan Vajpeyi. 2008.Jangarh Kalam.Vanya.
  4. John Bowles. 2009.Painted Songs and Stories.Intach.
  5. "Untitled, it depicts personal spaces". http://www.telegraphindia.com/1091026/jsp/calcutta/story_11656806.jsp. 
  6. Udyan Vajpeyi: "Jangarh Kalam - Narrative of a tradition - Gond Painting". Madhya Pradesh, India: Tribal Welfare Department. 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-903764-3-8.
  7. "Mithila Museum an Introduction". www.mithila-museum.com.
  8. "Arrested Kinetics". https://www.outlookindia.com/magazine/story/arrested-kinetics/212712. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜங்கர்_சிங்_ஷியாம்&oldid=3572847" இலிருந்து மீள்விக்கப்பட்டது