ஜங்கால அள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

ஜங்கால அள்ளி (Jangalahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643527.[1] இது பி. பள்ளிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

ஜங்கால அள்ளி
ஜங்காலள்ளி
ஜங்காலஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635301

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 286 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 211 குடும்பங்களும் 805 மக்களும் வசிக்கின்றனர். இதில் 405 ஆண்களும் 400 பெண்களும் அடங்குவர். கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 65.3 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள்

தொகு
  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  2. "Jangalahalli Village , Pappireddipatty Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜங்கால_அள்ளி&oldid=3600250" இலிருந்து மீள்விக்கப்பட்டது