ஜசிந்தா ஆர்டெர்ன்

நியூசிலாந்து பிரதமர்

ஜசிந்தா ஆர்டெர்ன் (Jacinda Ardern, பிறப்பு:26 ஜூலை 1980) என்பவர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் 26 அக்டோபர் 2017 முதல் நியூசிலாந்து நாட்டின் 40வது தலைமை அமைச்சராக பதவியில் உள்ளவரும் ஆவார். இவர் நியூசிலாந்து தொழிலாளிக் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இவர் ஆல்பெர்ட் மலைச்சிகரம் என்ற தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1][2]

மதிப்பிற்குரிய
ஜசிந்தா ஆர்டெர்ன்
நா.உ.
Smiling woman with dark hair
வெல்லிங்க்டனில் உள்ள அரச மாளிகையில் ஆர்டெர்ன், 2018
நியூசிலாந்தின் 40வது பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
26 அக்டோபர் 2017
அரசர் இரண்டாம் எலிசபெத்
தலைமை ஆளுநர் பாட்ஸி ரெட்டி
துணை வின்ஸ்டன் பீட்டர்ஸ்
முன்னவர் பில் இங்கிலீஷ்
ஆல்பெர்ட் மலைச்சிகரம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
8 மார்ச் 2017
முன்னவர் டேவிட் ஷியரர்
பெரும்பான்மை 15,264
நியூசிலாந்து தொழிலாளர் கட்சியின் 17வது தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1 ஆகஸ்ட் 2017
துணை கெல்வி
முன்னவர் ஆன்டிரியு லிட்டில்
36வது எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
1 ஆகஸ்ட் 2017 – 26 அக்டோபர் 2017
துணை கெல்வின் டேவிஸ்
முன்னவர் ஆன்டிரியு லிட்டில்
பின்வந்தவர் பில் இங்கிலீஷ்
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
7 மார்ச் 2017 – 1 ஆகஸ்ட் 2017
தலைவர் ஆன்டிரியு லிட்டில்
முன்னவர் அன்னெட் கிங்
பின்வந்தவர் கெல்வின் டேவிஸ்
தொழிலாளர் கட்சியின் 17வது துணைத்தலைவர்
பதவியில்
1 மார்ச் 2017 – 1 ஆகஸ்ட் 2017
தலைவர் ஆன்டிரியு லிட்டில்
முன்னவர் அன்னெட் கிங்
பின்வந்தவர் கெல்வின் டேவிஸ்
நியூசிலாந்து தொழிலாளர் கட்சி தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
8 நவம்பர் 2008 – 8 மார்ச் 2017
பின்வந்தவர் ரேமண்ட் ஹுவோ
தனிநபர் தகவல்
பிறப்பு ஜெசிந்தா கேட் லாரெல் ஆர்டெர்ன்
26 சூலை 1980 (1980-07-26) (அகவை 39)
ஆமில்டன், நியூசிலாந்து
அரசியல் கட்சி நியூசிலாந்து தொழிலாளர் கட்சி
துணைவர் கிளேர்க் கேஃபோர்டு
பிள்ளைகள் 1
பெற்றோர் ரோஸ் ஆர்டெர்ன்
லாரெல் ஆர்டெர்ன்
இருப்பிடம் பிரதமர் இல்லம், வெல்லிங்க்டன்
படித்த கல்வி நிறுவனங்கள் வெய்காட்டோ பல்கலைக்கழகம்

நியூசிலாந்து தொழிலாளர் கட்சியின் வாக்கு வங்கி வரலாறு காணாத அளவு சரிவடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் அன்டிரியு லிட்டில் 1 மார்ச் 2017 அன்று பதவி விலகினார்.[3] அதைத் தொடர்ந்து கட்சியின் தலைவராக ஜசிந்தா ஆர்டெர்ன் 1 ஆகஸ்ட் 2017 அன்று பதவியேற்றுக் கொண்டார். பிறகு 23 செப்டம்பர் 2017ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தன் கட்சியின் வாக்கு வங்கியை உயர்த்தினார். அத்தேர்தலில் தொழிலாளர் கட்சி 46 இடங்களைக் கைப்பற்றி இரண்டாம் இடம் பிடித்தது. பிறகு அக்கட்சி சிறு கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது. ஜெசிந்தா ஆர்டெர்ன் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.[4] 37 வயதில் பிரதமரான ஜெசிந்தா மிகச்சிறிய வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற உலகின் முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.[5]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜசிந்தா_ஆர்டெர்ன்&oldid=2707386" இருந்து மீள்விக்கப்பட்டது