ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)

இந்திய அரசியல் கட்சி
(ஜனதா தளம் (மதசார்பற்ற) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜனதா தளம் (மதசார்பற்ற) அல்லது மத சார்பற்ற ஜனதா தளம் (Janata Dal (Secular)) முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கௌடாவின் தலைமையில் இயங்கும் நடு-இடது கொள்கையுடைய ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும்.[1] இந்தக் கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சியாக கருநாடக மாநிலத்திலும் கேரள மாநிலத்திலும் அங்கீகரித்துள்ளது. சூலை 1999ஆம் ஆண்டில் ஜனதா தளம் பிளவுபட்டு இந்தக் கட்சி உருவானது.[2][3]

ஜனதா தளம் (மதசார்பற்ற)
தொடக்கம்ஏப்ரல் 6, 1999
தலைமையகம்காந்திநகர், பெங்களூரு
கொள்கைசமூகநீதி சனநாயகம்
சமயச் சார்பின்மை
அரசியல் நிலைப்பாடுநடு-இடது
கூட்டணிமூன்றாம் அணி (2009)
யூபிஏ (2009-2019)
இணையதளம்
www.janatadalsecular.org.in
இந்தியா அரசியல்

இந்தக் கட்சியில் உள்ள குறிப்பிடத்தக்க அரசியல்வாதிகள் எச். டி. குமாரசாமி (முன்னாள் கர்நாடக முதலமைச்சர் மற்றும் கர்நாடக மாநில அமைப்பின் தலைவர்), எம். பி. வீரேந்திர குமார் (நாடாளுமன்ற உறுப்பினரும் கேரள மாநில அமைப்பின் தலைவரும்) , எஸ். பங்காரப்பா (முன்னாள் கர்நாடக முதலமைச்சர், எச்.டி.ரேவண்ணா ஆகியோர் ஆவர்.

மேற்கோள்கள் தொகு