ஜன் தன் திட்டம்
ஜன் தன் திட்டம் அல்லது பிரதமர் மக்கள் நிதி திட்டம் (Pradhan Mantri Jan Dhan Yojana) வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு இருக்கும் வகையில் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி 28 ஆகஸ்டு 2014 வியாழக்கிழமை அன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
ஜன் தன் திட்டம் (PMJDY) | |
---|---|
PM Modi launches the " Pradhan Mantri Jan Dhan Yojana" | |
Motto | Mera Khata Bhagya Vidhata |
திட்ட வகை | பொருளாதாரம் |
நாடு | இந்தியா |
பிரதமர் | நரேந்திர மோடி |
Ministry | நிதி அமைச்சகம் |
Key people | நிர்மலா சீதாராமன் |
துவங்கியது | 28 ஆகத்து 2014 |
தற்போதைய நிலை | Active |
இணையத்தளம் | www |
பிரதமர் நரேந்திர மோடி 15 ஆகஸ்டு 2014 சுதந்திர தின உரையில், ‘பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா’ (பிரதமர் மக்கள் நிதி திட்டம்) என்ற திட்டத்தை பற்றி அறிவித்தார்.[1].[2]
இந்தத் திட்டத்தின் கீழ், வங்கியில் கணக்கு இல்லாத 7½ கோடி குடும்பத்தினருக்குக் காப்பீடு வசதியுடன் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது.
நாடு முழுவதும் மாநில தலைநகரங்களிலும் மற்றும் முக்கிய மாவட்ட தலைநகரங்களிலும் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், வங்கி கணக்கு தொடங்குவதற்கு ஆதார் அட்டை இருந்தால், வேறு ஆவணங்கள் தேவை இல்லை. வங்கி கணக்கு தொடங்கிய பிறகு, அவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும். அதை வைத்து நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடும் முப்பதாயிரம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடும்[3] வழங்கப்படும். ஆயுள் காப்பீட்டுக்கான சந்தா தொகையை இந்திய அரசே செலுத்தும். ஓய்வூதியம், காப்பீடு போன்ற வசதிகளும் அளிக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் நிதி உதவிகளை, வங்கிக் கணக்கு மூலம் பெற்றுக்கொள்ளலாம்.[4] [5] [6].
மாநில அரசுத் துறைகளின் திட்டங்களின் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அதற்கான தொகை உடனுக்குடன் அனுப்பப்படும். இந்தத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ருபே கிஷான் அட்டைகளை வழங்குவதற்குக் கூட்டுறவு வங்கிகள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.
வரலாறு
தொகு15 ஆகஸ்ட் 2014 அன்று இந்த திட்டம் பிரதமர் நரேந்திர மோடியினால் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் முழக்கம் "மேரா கதா, பாக்ய விதாதா" ("என் கணக்கு, விதியை மீட்டெடுப்பவர்" என்று பொருள்படும்).[7] 2005-06ல், ரிசர்வ் வங்கியானது அனைத்து வங்கிகளும் பொதுமக்களுக்கு "தேவையற்ற வசதிகள் அற்ற வங்கி கணக்குகளை" (ஆங்:No-frills account) கட்டணமின்றியோ அல்லது குறைந்த கட்டணத்தோடோ வழங்கவேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிட்டது.[8][9][10] 2012ல் ரிசர்வ் வங்கியானது, 2005ல் துவக்கப்பட்ட "தேவையற்ற வசதிகள் அற்ற வங்கி கணக்குகளை" "அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்காக" மாற்ற உத்தரவிட்டது.[11][12] ஸ்வாபிமான் உட்பட முந்தைய அரசின் திட்டங்கள் மக்களைப் பெருவாரியாக சென்றடைவதில் தோல்வியடைந்த பிறகு ஜன்தன் திட்டம் தொடங்கப்பட்டது.[13] ஸ்வாபிமான் என்பது இந்திய அரசாங்கத்தின் 2011 பிரச்சாரமாகும், இது பெரிய கிராமப்புறங்களுக்கு வங்கிச் சேவைகளைக் கொண்டுசெல்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது.[14]
புள்ளிவிவரம்
தொகு14 ஜனவரி 2021 அன்று, பிரதம மந்திரி ஜன்-தன் திட்டத்தின் புள்ளிவிவரங்கள் (அனைத்து புள்ளிவிவரங்களும் கோடியில்),[15]
வங்கிகளின் வகை | வங்கி கணக்கு எண்ணிக்கை | வங்கி கணக்கு இருப்பு | ரூபே கார்டுகளின் எண்ணிக்கை | |||
---|---|---|---|---|---|---|
கிராமம்/சிறிய நகரம் | கிராமப் பெண்கள் | நகரம் | மொத்தம் | |||
பொதுத் துறை வங்கிகள் | 20.21 | 18.09 | 12.77 | 32.98 | 106471.60 | 26.13 |
பிராந்திய கிராம வங்கிகள் | 6.51 | 4.29 | 0.92 | 7.43 | 26547.44 | 3.39 |
தனியார் வங்கிகள் | 0.69 | 0.69 | 0.56 | 1.25 | 4176.90 | 1.12 |
மொத்தம் | 27.40 | 23.07 | 14.25 | 41.65 | 137195.93 | 30.65 |
ஆண்டுதோறும் துவக்கப்பட்ட வங்கிகணக்குகள் எண்ணிக்கை[16][17]
வருடம் | வங்கி கணக்குகள் எண்ணிக்கை (கோடி) |
---|---|
ஆகஸ்டு-15 | 17.9 |
ஆகஸ்டு-16 | 24.1 |
ஆகஸ்டு-17 | 30.9 |
ஆகஸ்டு-18 | 32.55 |
ஆகஸ்டு-19 | 36.79 |
ஆகஸ்டு-20 | 40.41 |
ஆகஸ்டு-21 | 43.04 |
ஆகஸ்டு-22 | 46.25 |
ஆகஸ்து-23 | 50.09 |
வருடம் | இயக்கத்திலிருக்கும் வங்கி கணக்குகள் எண்ணிக்கை (கோடி) | சதவீதம் |
---|---|---|
ஆகஸ்டு-17 | 23.15 | 76% |
ஆகஸ்டு-18 | 26.34 | 80.9% |
ஆகஸ்டு-19 | 30.16 | 82% |
ஆகஸ்டு-20 | 34.9 | 86.3% |
ஆகஸ்டு-21 | 36.86 | 85.6% |
ஆகஸ்டு-22 | 37.57 | 81.2% |
Year | டெபாசிட் தொகை(கோடி) |
---|---|
ஆக-15 | 22901 |
ஆக-16 | 42094 |
ஆக-17 | 65799 |
ஆக-18 | 82039 |
ஆக-19 | 102415 |
ஆக-20 | 130086 |
ஆக-21 | 146230 |
ஆக-22 | 173954 |
ஆக-23 | 203505 |
வருடம் | சராசரி டெபாசிட் தொகை எண்ணிக்கை (ரூ) |
---|---|
ஆகஸ்டு-15 | 1279 |
ஆகஸ்டு-16 | 1747 |
ஆகஸ்டு-17 | 2187 |
ஆகஸ்டு-18 | 2521 |
ஆகஸ்டு-19 | 2783 |
ஆகஸ்டு-20 | 3219 |
ஆகஸ்டு-21 | 3398 |
ஆகஸ்டு-22 | 3761 |
ஆகஸ்து-23 | 4063 |
சட்டவிரோத பண முதலீடு
தொகுஏழைகளுக்காக துவங்கப்பட்ட இந்த கணக்கில் இந்திய அரசு 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் திகதி 500 மற்றும் 1000 இந்திய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபோது இந்த கணக்குகளில் மட்டும் [18] 87,000 கோடி ரூபாய் சட்டவிரோதமான பணம் வைப்பு வைக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.[19]
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ http://www.pibchennai.gov.in/karuvoolam/releases%202014/August2014/25082014/25082014re8.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ஒரு வங்கிக் கணக்கு: புதிய திட்டம் இன்று தொடக்கம் தி இந்து தமிழ்
- ↑ https://financialservices.gov.in/insurance-divisions/Government-Sponsored-Socially-Oriented-Insurance-Schemes/Life-Cover-under-Pradhan-Mantri-Jan-Dhan-Yojana-(PMJDY)
- ↑ http://economictimes.indiatimes/news/economy/policy/jan-dhan-yojana-modi-plans-bank-account-for-every-household/articleshow/41013978.cms[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://ibnlive.in.com/news/pm-modi-to-launch-his-ambitious-plan-pradhan-mantri-jan-dhan-yojana-today/494742-37-64.htm[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.dnaindia.com/india/report-narendra-modi-to-launch-jan-dhan-yojana-on-aug-28-1-crore-bank-accounts-to-be-opened-on-day-1-2013938
- ↑ "Jan Dhan scheme: Going strong 3 years on", The Hindu Business Line, 14 August 2017
- ↑ https://www.rbi.org.in/scripts/NotificationUser.aspx?Id=2636&Mode=0
- ↑ https://www.microcapital.org/microcapital-brief-number-of-no-frills-bank-accounts-in-india-surpasses-100m/
- ↑ https://www.findevgateway.org/sites/default/files/publications/files/mfg-en-paper-dormancy-in-no-frill-accounts-may-2011.pdf
- ↑ https://www.rbi.org.in/commonperson/English/Scripts/FAQs.aspx?Id=1289
- ↑ https://www.rbi.org.in/scripts/NotificationUser.aspx?Id=7511&Mode=0
- ↑ "Why government's financial inclusion plans are floundering", பிசினஸ் ஸ்டாண்டர்ட், 23 November 2015
- ↑ "swabhimaan" (PDF).
- ↑ "பிரதம மந்திரி ஜன்-தன் திட்டம்", pmjdy.gov.in
- ↑ https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1854909
- ↑ https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1952793
- ↑ ரூ.500, ரூ.2000 நோட்டுகளின் நிலவரம்: அரசு விளக்கம் தி இந்து தமிழ் 09 நவம்பர் 2016
- ↑ தன் வங்கிக் கணக்கில் ரூ.87,000 கோடி டெபாசிட்: வரித்துறை ஆய்வு தி இந்து தமிழ் 02 சனவரி 2016]