ரூபே

அட்டைகாசு

ரூபே (RuPay) என்பது இந்திய தேசிய கட்டண நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட உள்நாட்டு கட்டண அட்டை திட்டமாகும்.[1] இது உருவாக்கப்பட்டதன் நோக்கமானது இந்திய ரிசர்வ் வங்கியின் விருப்பமான உள்நாட்டு, திறந்தநிலை, பன்முக கட்டண அமைப்பை ஏற்படுத்துவதாகும். ரூபே அனைத்து இந்திய வங்கிகளுக்கும், நிதி நிர்வாகங்களுக்கும் மின்வழி நிதி மாற்றம் வசதியை அந்நிய நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர்கார்டுக்கு மாற்றாக அளிக்கிறது. NPCI ஆனது Discover Financial Service என்ற உலகளாவிய அமைப்புடன் உடன்படிக்கை செய்துகொண்டு இந்திய வாடிக்கையாளர்களுக்கு உலகளாவிய மின்வழி நிதி மாற்றம் என்ற வசதியை அளிக்கிறது.

ரூபே
நிறுவுகை26 மார்ச் 2012
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
இணையத்தளம்ரூபே

பின்னணி

தொகு

இந்தத் திட்டம் முதலில் இந்தியா பே என்ற பெயரில்தான் விசா மற்றும் மாஸ்டர்கார்டுக்கு மாற்றாக சுதேசி கட்டண முறையாக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே இந்த பெயரில் இந்திய நிதி நிறுவனங்கள் பண பரிவர்த்தனை செய்து வருவதால் ரூபே எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ரூபே அட்டை 2012 மார்ச் 26 இல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ரூபே, 2014 மே 8ல் புது தில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜியினால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.[2][3][4][5][6]

பயன்பாடு

தொகு

ரூபே அட்டைகள் இந்தியா முழுவதும் உள்ள தானியங்கி காசளிப்பு இயந்திரங்களில் (ATMs) ஏற்றுக்கொள்ளப்படும். Discover Financial Service என்ற உலகளாவிய அமைப்புடன் ஏற்படுத்தப்பட்டுள்ள உடன்படிக்கையினால் உலகளாவிய Discover network களில் ஏற்றுக்கொள்ளப்படும். இந்தியா தேசிய கொடுப்பனவு நிறுவனத் தரவுகளின் படி நாடு முழுவதும் இந்த ரூபே அட்டை திட்டத்தின் கீழ் 145,270 தானியங்கி காசளிப்பு இயந்திரங்கள் (ATMs) மற்றும் 875,000 க்கும் அதிகமான் விற்பனை முனையங்கள் (PoS terminals) உள்ளன. இது மட்டுமல்லாது ரூபே அட்டைகள் சுமார் 10,000 இணைய விற்பனை தளங்களில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.[7][8][9][10][11]

நாட்டில் உள்ள அனைத்து விற்பனை முனையங்களிலும் ரூபே அட்டைகள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள தங்கள் விற்பனை முனையங்கள் மூலமாக இதை செயல்படுத்த ரூபே 29 பெரிய வங்கிகளுக்கு அனுமதி அளித்து உள்ளது.[12]

வெளியீட்டாளர்கள்

தொகு

தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரூபே நிதி அட்டை வழங்க வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து பெரிய பொதுத்துறை வங்கிகள் உட்பட 240 வங்கிகள் தற்போது ரூபே அட்டை வெளியிடுகின்றன.[13]

சான்றுகள்

தொகு
  1. "ரூபே". Archived from the original on 2015-02-07. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2015.
  2. IANS (2014-05-08). "Pranab launches RuPay, India's own card payment network". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.
  3. "Pranab Mukherjee dedicates India's own payment gateway 'RuPay' to nation | Latest News & Updates at Daily News & Analysis". Dnaindia.com. 2014-05-09. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.
  4. ENS Economic Bureau - புது தில்லி. "India Gets its Own Payment Gateway - RuPay". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.
  5. "India's own payment gateway 'RuPay' launched". Livemint. 2014-05-08. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.
  6. Our Bureau. "Soon, you can use the RuPay platform to shop abroad, book railway tickets | Business Line". Thehindubusinessline.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.
  7. Megha Mandavia (2013-03-29). "Come ஏப்ரல், you can use RuPay even online | Latest News & Updates at". Dnaindia.com. பார்க்கப்பட்ட நாள் 2014-02-09.
  8. "National Payments Corporation of India". Npci.org.in. Archived from the original on 2014-02-08. பார்க்கப்பட்ட நாள் 2014-02-09.
  9. "'Aadhaar, chip & pin need to coexist' - The Times of India". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2014-02-09.
  10. "NPCI launches e-commerce solution in RuPay Card". Business Standard. 2013-06-21. பார்க்கப்பட்ட நாள் 2014-02-09.
  11. "RuPay cards can be used online - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. 2013-06-22. Archived from the original on 2014-02-08. பார்க்கப்பட்ட நாள் 2014-02-09.
  12. "National Payments Corporation of India". Npci.org.in. Archived from the original on 2014-02-08. பார்க்கப்பட்ட நாள் 2014-02-09.
  13. "RuPay Card base to touch 25 mn by Mar: NCPI - Economic Times". Articles.economictimes.indiatimes.com. 2014-02-02. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.

வெளிப்புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபே&oldid=3635724" இலிருந்து மீள்விக்கப்பட்டது