ஜபாலி உபநிடதம்

இந்து மதத்தின் சிறிய உரை

ஜபாலி உபநிடதம் (Jabali Upanishad) ( சமக்கிருதம்: जबालि उपनिषत्), ஒரு சமசுகிருத உரையும் இந்து மதத்தின் சிறிய உபநிடதங்களில் ஒன்றுமாகும்.[1] இது சாமவேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சைவ உபநிடதங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஜபாலி
திரித்துவம் - பிரம்மா, விஷ்ணு, மகேசுவரன் அல்லது சிவன்
தேவநாகரிजबालि
சமக்கிருத ஒலிப்பெயர்ப்புjābāli
உபநிடத வகைசைவம்
தொடர்பான வேதம்சாம வேதம்
அத்தியாயங்கள்1
அடிப்படைத் தத்துவம்சைவ சமயம்
உபநிடதத்தில் குறிப்பிடப்படும் நெற்றியில் பூசிக்கொள்ளும் திருநீறு.

இது ஒரு சிறிய உபநிடதமாகும். மேலும் இது ஜபாலி முனிவருக்கும் பிப்பலாத மகரிசிக்கும் இடையிலான உரையாடலாக கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது பிப்பலாத மகரிசி இறையியலை வழங்குவதில் குறிப்பிடத்தக்கது.[1] பசு மற்றும் பதம் என்றால் என்ன என்பதையும், ஒருவரின் நெற்றியில் இடப்படும் திருநீறு வாழ்க்கையின் இடைநிலை இயல்பு, சிவனின் மாறாத உலகளாவிய தன்மை மற்றும் ஒருவரின் இரட்சிப்பின் வழிமுறையாக இது விளக்குகிறது.[1][3]

வரலாறு

தொகு

உரையின் தலைப்பு இந்து புராணங்களில் பிரபலமான ஜபாலி முனிவரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் அவர் இந்து இதிகாசமான இராமாயணத்தில் இடம்பெற்றுள்ளார்.[4]

அனுமனுக்கு இராமனால் விவரிக்கப்பட்ட முக்திகா எனும் 108 உபநிடதங்களின் தெலுங்கு மொழித் தொகுப்பில், இது 104 வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.[5]

உள்ளடக்கம்

தொகு

பிப்பலாதா முனிவர் ஜபாலி முனிவரிடம் "ஜீவன் என்பது யார்? அதன் இறுதியான நிலை என்ன? யார் பசு? பதி யார்? மேலும் ஒருவர் எவ்வாறு இரட்சிப்பை அடைய முடியும்?" என வினா எழுப்புகிறார்.[6][7] இந்த கேள்விகளுக்கான பதில்களை தியானத்தின் மூலம் ஈசானன் (சிவனின் ஒரு வடிவம்) உணர்ந்தார் என்று ஜபாலி உறுதிப்படுத்துகிறார். பசுபதி, அல்லது சிவனே இறுதி உண்மை என்று உரையின் 8வது வசனம் கூறுகிறது. [6][7]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Vedic Literature, Volume 1, A Descriptive Catalogue of the Sanskrit Manuscripts, p. PA384, கூகுள் புத்தகங்களில், Government of Tamil Nadu, Madras, India, page 384
  2. Tinoco 1997, ப. 87-88.
  3. Kramrisch 1981, ப. 340.
  4. James Lochtefeld (2002), Brahman, The Illustrated Encyclopedia of Hinduism, Vol. 1: A–M, Rosen Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8239-3179-8, page 308
  5. Deussen 1997, ப. 557.
  6. 6.0 6.1 Sastri 1950.
  7. 7.0 7.1 Hattangadi 2000.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜபாலி_உபநிடதம்&oldid=3500815" இலிருந்து மீள்விக்கப்பட்டது