ஜமுனா போரோ

ஜமுனா போரோ (Jamuna_Boro) என்பவர் ஓர் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். 2019 ஆம் ஆண்டு உருசியாவில் நடந்த ஏஐபிஏ உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டப் போட்டி ஆட்டத்தில் வெண்கலம் வென்றார். அதே வருடம் நடந்த இரண்டாவது இந்திய திறந்தநிலை பன்னாட்டு குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றார். 23 ஆவது பன்னாட்டு குடியரசுத்தலைவர் கோப்பை குத்துச்சண்டை போட்டியிலும் முதன்மை வகித்தார். ([1]3) அசாமைச் சேர்ந்த முதன்மை ஊடக துறையான பிரதிதின் இவருக்கு 2019 ஆம் ஆண்டில் சாதனையாளர் விருதினை வழங்கியது.

ஜமுனா போரோ
Jamuna Baro.jpg
குத்துச்சண்டை வீராங்கனை
புள்ளிவிபரம்
தேசியம்இந்தியன்
பிறப்பு7 மே 1997 (1997-05-07) (அகவை 24)
பிறந்த இடம்சோணித்பூர் மாவட்டம், அசாம், இந்தியா
நிலைOrthodox stance
குத்துச்சண்டைத் தரவுகள்
மொத்த சண்டைகள்3
வெற்றிகள்3
வீழ்த்தல் வெற்றிகள்0
தோல்விகள்0
சமநிலைகள்0
போட்டி நடக்காதவை0

வாழ்க்கைதொகு

போரோ அசாம் மாநிலம் சோனிட்பூர மாவட்டத்திலுள்ள தேகியாஜூலி அருகே பெல்சிரி என்ற கிராமத்தில் மே 7, 1997 இல் பிறந்தார். தனது 6 வயதில் தந்தையை இழந்த இவரை தாயார் தனியாக காய்கறி மற்றும் தேனீர் விற்று வளர்த்தார். இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகளில் இன்று சிறந்து விளங்கும் போரோ முதலில் ஒரு வுஷு விளையாட்டு வீராங்கனையாக தனது பயணத்தை தொடங்கினார்.  வுஷு விளையாட்டு வீரர்கள் பயிற்சியை கண்டபோது இவரக்கு ஆர்வம் ஏற்பட்டு இவரும் அந்த விளையாட்டுப் பயிற்சியை மேற்கொண்டார்.[2] ஜான் ஸ்மித் நார்சரி என்ற பயிற்சியாளரின் கீழ் பயிற்சி பெற்றார். பயிற்சியாளர் கௌஹாத்தியில் நடந்த ஆணையத்தின் தேர்வுக்கு இவரை அழைத்து சென்றார். அங்கு போரோ குத்துச்சண்டை பிரிவில் தேர்ச்சி பெற்று பயிற்சியில் ஈடுபட்டார்.[3]

ஜமுனா போரோ
 
குத்துச்சண்டை வீராங்கனை
புள்ளிவிபரம்
தேசியம்இந்தியன்
பிறப்பு7 மே 1997 (1997-05-07) (அகவை 24)
பிறந்த இடம்சோணித்பூர் மாவட்டம், அசாம், இந்தியா
நிலைOrthodox stance
குத்துச்சண்டைத் தரவுகள்
மொத்த சண்டைகள்3
வெற்றிகள்3
வீழ்த்தல் வெற்றிகள்0
தோல்விகள்0
சமநிலைகள்0
போட்டி நடக்காதவை0

சாதனைகள்தொகு

 • 2010 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் நடந்த சப் ஜூனியர் தேசிய பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 52 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார். அடுத்த ஆண்டு கோவையில் நடந்த அதே போட்டியில் தனது தங்கத்தை தக்க வைத்து கொண்டார்.
 • போரோ தனது முதல் சர்வதேச பதக்கத்தை 2013 இல் செர்பியாவில் நடந்த இரண்டாவது நேஷன்ஸ் கப் சப்-ஜுனியர் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் கைபற்றினார்.
 • 2014 ஆம் ஆண்டில் உருசியாவில் நடந்த போட்டியில் தங்கமும், 2015ல் தாய்பேயில் நடந்த உலக இளைஞர் குத்துச்சண்டையில் 57 கிலோ எடை பிரிவில் வெண்கலமும் வென்றார்.
 • வெண்கலம் : 2015 உலக இளைஞர் குத்துச் சண்டை போட்டி. தைபெய்
 • 2018ல் செர்பியாவில் நடந்த பெல்கிரேட் குத்துசண்டை சாம்பியன்ஷிப்பில் போரோ வெள்ளி பதக்கம் வென்றார்.(6[4])
 • அடுத்த ஆண்டும் கவுஹாதியில் நடந்த இரண்டாவது இந்திய சர்வதேச ஓபன் குத்துச்சண்டை போட்டியிலும் இந்தோனேசியாவின் 23 ஆம் பிரெசிடென்ட் கோப்பை சர்வதேச குத்துச்சண்டை போட்டியிலும் தங்க பதக்கம் வென்றார்.(2[5]) அதே வருடம் ரஷ்யாவில் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றார்.([6]4)
 • அசாம் ரைபில்சில் பணியாற்றுகிறார் போரோ. அவரது ஒப்புதல்கள் மற்றும் வணிக நலன்களை IOS (infinity optimal solutions) என்ற விளையாட்டு மேலான்மை நிறுவனம் மேற்கொள்கிறது (8[7])
 • வெண்கலம் 2019 உலகக் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்,உலன்-உடே,ரஷ்ய
  • தங்கம் 2019 இந்திய சர்வதேச ஓபன் குத்துச் சண்டை போட்டி,கௌஹாத்தி.
  • தங்கம்: 2019 பிரசிடெண்ட் கப் சர்வதேச ஓபன் கேத்துச் சண்டை போட்டி,இந்தோனேஷியா.
  • தங்கம்: 2013 நேஷன்ஸ் கப் சர்வதேச சப் ஜூனியர் குத்துச்சண்டை போட்டி,செர்பியா

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமுனா_போரோ&oldid=3208290" இருந்து மீள்விக்கப்பட்டது