ஜம்தானி
ஜம்தானி (Jamdani) என்பது வங்காளதேசத்தின் நாராயண்கஞ்ச் மாவட்டத்தின் தெற்கு ரூப்ஷி என்ற இடத்தில் சிதாலக்வா ஆற்றின் கரையில் பல நூற்றாண்டுகளாக உற்பத்தி செய்யப்படும் மஸ்லின் புடவையாகும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஜம்தானி தயாரிப்பு முகலாய சகாப்தத்தில் அரச குடும்பத்தினரால் ஆதரிக்கப்பட்டது. பிரித்தானியர் ஆட்சியின்போது, பிரிட்டனில் உற்பத்தி செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட துணிகளுடன் போட்டியிட முடியாததால் வங்காளத்தின் ஜம்தானி மற்றும் மஸ்லின் தொழில்கள் வேகமாக வீழ்ச்சியடைந்தன. சமீப ஆண்டுகளில், வங்காளதேசத்தில் ஜம்தானி உற்பத்தி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. ஜம்தானி பொதுவாக பருத்தி மற்றும் தங்க நூல் கலவையைப் பயன்படுத்தி நெய்யப்படுகிறது.
பெயர்க்காரணம்
தொகுஜம்தானி முதலில் ‘டாக்காய்’ என்று அழைக்கப்பட்டது (டாக்கா நகரத்தின் பெயரால் ‘டாக்காய்’ என்று பெயரிடப்பட்டது) வங்காளப் பிராந்தியத்தில் உள்ள பல பண்டைய ஜவுளி நெசவு மையங்களில் டாக்காவும் ஒன்றாகும்.[1] முகலாயப் பேரரசின் கீழ் ஜம்தானி என்ற பாரசீகச் சொல் மொகலாயர்களின் அரசவை மொழியாக இருந்ததால், மக்கள் மத்தியில் பிரபலமாக பயன்படுத்தப்பட்டது. ஜம்தானி புடவைகள் ‘டாக்காய் ஜம்தானி’ அல்லது வெறுமனே ‘டாக்காய்’ என்று பிரபலமாக அழைக்கப்பட்டது. ஜம்தானியின் வளர்ச்சி பற்றிய டாக்காவின் ஆரம்பகால குறிப்புகளில் காணப்படுகிறது.
தோற்றம்
தொகுஉரோம மாலுமிகளால் கையேடு போன்று பயன்படுத்தப்பட்ட செங்கடல் செலவு என்ற புத்தகத்திலும், அரபு, சீன மற்றும் இத்தாலிய பயணிகள் மற்றும் வர்த்தகர்களின் கணக்குகளிலும் மஸ்லினின் இந்திய தோற்றம் பற்றிய ஆரம்ப குறிப்பு காணப்படுகிறது.
ஜம்தானி என்பது பருத்தியால் செய்யப்பட்ட கைத்தறி துணி ஆகும். இது வரலாற்று ரீதியாக மஸ்லின் என்று குறிப்பிடப்பட்டது. ஜம்தானி நெசவு பாரம்பரியம் வங்காள வம்சாவளியைச் சேர்ந்தது. இது மிகவும் நேரமும் உழைப்பும் எடுத்துக்கொள்ளும் கைத்தறி நெசவு வடிவங்களில் ஒன்று. மேலும் இது மிகச்சிறந்த மஸ்லின் வகைகளில் ஒன்றாகவும், வங்காளதேச நெசவாளர்களின் மிகவும் கலை வடிவங்களின் ஒன்றாகவும் கருதப்படுகிறது.[2] பாரம்பரியமாக டாக்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில் தறியில் உருவாக்கப்பட்ட ஜம்தானி, கருத்தாக்கங்கள் நிறைந்ததாகும்.
பெரும்பாலும் புடவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டாலும், ஜம்தானி தலையை மூடவும் மற்றும் கைக்குட்டைகளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஜம்தானி என்பது வங்காளத்தின் பண்டைய துணி தயாரிக்கும் நுட்பங்களின் (2,000 ஆண்டுகள் பழமையானது) 14 ஆம் நூற்றாண்டிலிருந்து வங்காள முஸ்லிம்களால் தயாரிக்கப்பட்ட மஸ்லினுடன் இணைந்ததாக நம்பப்படுகிறது. ஜம்தானி டாக்கா தறிகளின் மிகவும் விலையுயர்ந்த தயாரிபாகும். ஏனெனில் இதற்கு மிக நீண்ட நேரமும் மற்றும் அர்ப்பணிப்பும் தேவைப்படுகிறது.
முக்கியத்துவம்
தொகு2013 ஆம் ஆண்டில், ஜம்தானி நெசவு பாரம்பரிய கலை யுனெஸ்கோவால் மனிதகுலத்தின் அழிந்துவரும் கலாச்சார பாரம்பரியமாக அறிவிக்கப்பட்டது.[3][4][5]
ஜம்தானி புடவை 2016 ஆம் ஆண்டில், வங்காளதேசத்தின் புவியியல் சார்ந்த குறியீட்டைப் பெற்றது.[6]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Rashid, Raffat Binte (April 28, 2009). "Dhakais in danger". Vol. 5, no. 65. Archived from the original on Jun 8, 2021. Retrieved 2012-06-28.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ Mahapatra, N. N. (2016). Sarees of India. Woodhead Publishing India PVT. Limited. p. 72. ISBN 9789385059698.
- ↑ "jamdani". Britannica. Retrieved 2013-12-04.
- ↑ "Jamdani recognised as intangible cultural heritage by Unesco". The Daily Star. December 5, 2013. Archived from the original on Dec 6, 2013. Retrieved 2013-12-04.
- ↑ "Traditional art of Jamdani weaving". UNESCO Culture Sector. Archived from the original on Dec 16, 2013. Retrieved 2013-12-04.
- ↑ "Jamdani Sari gets GI registration certificate". The Daily Star. Nov 17, 2016. Archived from the original on Jun 17, 2023.