தங்காயில் புடவை

வங்காளதேசத்தில் பாரம்பரியமாக கையால் நெய்யப்படும் புடவை

தங்காயில் புடவை (Tangail saree) என்பது வங்காளதேசத்தில் பாரம்பரியமாக கைத்தறியாக நெய்யப்படும் புடவை வகையாகும். இது அந்நாட்டின் தங்காயில் மாவட்டத்தில் தோன்றியது. மேற்கு வங்காளத்தின் கிழக்கு வர்த்தமான் மற்றும் நதியா மாவட்டங்களில் முற்றிலும் மாறுபட்ட வகையான புடவை உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஜம்தானி புடவையின் எளிமைப்படுத்தப்பட்ட புடவையாகும்.

நெய்யப்படுவதற்கு முன் தங்காயில் புடவை

வரலாறு

தொகு

19ஆம் நூற்றாண்டின் இறுதியில், வங்காளத்தில் உள்ள தங்காயில் மாவட்டத்தில் கைத்தறி செழித்திருந்தது. வங்காளதேசத்தில் இவ்வகை புடவைகள் பாரம்பரிய மஸ்லின் துணி நெசவாளர்களின் சந்ததியினரால் உருவாக்கப்படுகிறாது. டாக்கா மாவட்டத்தின் தம்ராய் மற்றும் சௌஹட்டா ஆகியவை வங்காளதேசத்தின் தங்காயில் புடவை நெசவாளர்களின் அசல் வசிப்பிடங்களாக இருந்தன. பின்னர் அவர்கள் தங்காயிலில் குடியேறினர். ஆரம்பத்தில் அவர்கள் வடிவமைப்புகள் ஏதுமில்லாமல் துணிகளை உருவாக்கினர்.[1]

ஒரு காலத்தில், நதியா மாவட்டத்தில் பருத்தி நெசவு ஒரு மிக முக்கியமான தொழிலாக இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், சாந்திப்பூர் ஒரு பெரிய மற்றும் வளமான நெசவுத் தொழிலின் மையமாக இருந்தது. கிபி 1898இல், இந்த மாவட்டத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து கிராமங்களிலும் ஒரு சில நெசவாளர்கள் இருந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் இருந்து துணி அறிமுகப்படுத்தப்பட்டதால் சாந்திபூரில் நெசவுத் தொழில் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டது. இந்தத் தொழிலில் இலாபமில்லாததால் நெசவாளர்கள் பிற தொழில்களுக்கு மாறினர். இதன் விளைவாக இந்தத் தொழிலில் நெசவாளர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்தது. இருப்பினும், 1940 ஆம் ஆண்டில் வங்காளத் தொழில்துறை துறையால் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, சாந்திபூரில் உள்ள மொத்தம் 27,000 பேரில் 10,000 பேர் நெசவாளர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.[2]

நெசவாளரின் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் பிரித்தானிய வங்காளத்தில் உற்பத்தி செய்யப்படும் தங்காயில் புடவைகளை நெசவு செய்வதில் ஈடுபட்டனர். வெளியிலிருந்து நெசவாளர்களோ அல்லது தொழிலாளர்களோ யாரும் பணியமர்த்தப்படவில்லை. இது நெசவு நுட்பத்தை நெசவாளரின் குடும்பத்திற்கு வெளியே செல்ல அனுமதிக்காத நடைமுறையாக இருந்தது. பசக் குடும்பங்கள் தங்காயிலின் அசல் நெசவு குடும்பங்களாக இருந்தனர். இந்த நெசவாளர்கள் முக்கியமாக இந்து "பசக்" சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 1947இல் நாடு பிரிந்த பிறகு, இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த பெரும்பாலான பாரம்பரிய நெசவாளர்கள், பசக் நெசவாளர்களின் சமூகத்தினர் உட்பட, கிழக்கு பாக்கித்தானிலிருந்து மேற்கு வங்காளத்திற்கு குடிபெயர்ந்தனர். 1965இல் இடம்பெயர்வு தீவிரமடைந்து, 1971இல் 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் மற்றும் வங்காளதேச விடுதலைப் போரின் போது உச்சத்தை அடைந்தது.[3][4] வகுப்புவாத வன்முறை குறித்த அச்சம், மூலப்பொருட்களின் விலை பல மடங்கு அதிகரிப்பு, அரசாங்கத்திடமிருந்து கடன்கள் கிடைக்காமை, பொருட்களின் போக்குவரத்தில் நெருக்கடி, வணிகப் பாதுகாப்பு இல்லாததால் இந்து நெசவாளர்கள் படிப்படியாக வங்காளதேசத்திலிர்நுது இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர்.[5]

தற்போது, தங்காயிலில் உள்ள "பசக்" சமூகத்தின் நெசவாளர்களுடன் இணைந்து முஸ்லிம் நெசவாளர்களும் இந்த புடவையை நெசவு செய்கிறார்கள்.[6][7]

மேற்கு வங்காளப் புடவை

தொகு

பாரம்பரியமாக, நதியா சாந்திப்பூர் மற்றும் கிழக்கு வர்த்தமான் மாவட்டங்களின் கல்னா நகரம் ஆகியவை கையால் நெய்த துணிகளுக்கான பிரபலமான மையங்களாகும். எனவே பசக் நெசவாளர்கள் இந்த இடங்களிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் குடியேறினர். இருப்பினும், பசக் சமூகத்தினர் தங்கள் நெசவு நுட்பத்தை பல சிரமத்துக்குடியேயும் பராமரித்தனர். பெரும்பாலான நெசவாளர்கள் கிழக்கு பாக்கித்தானிலிருந்து (இப்போதைய வங்காளதேசம்) தங்களுடன் கொண்டு வரப்பட்ட தறிகளின் உதவியுடன் இந்திய அரசு மேற்கு வங்காள அரசு வழங்கிய தறிகளின் உதவியுடன் அகதி முகாம்களிலும் கூட புடவைகளை நெசவு செய்தனர்.[3]

 
புலியாவில் ஒரு நெசவாளர் சேலையை நெசவு செய்கிறார்.

முக்கியத்துவம்

தொகு

மேற்கு வங்காளத்தின் தங்காயில் புடவைக்கு புவியியல் சார்ந்த குறியீடு வழங்கப்பட்டுள்ளது.[8][9][10][11]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "টাঙ্গাইল শাড়ি নিজেদের দাবি করে সমালোচনার মুখে ভারত". https://www.somoynews.tv/news/2024-02-02/uTMvQ5DF. 
  2. "G.I. Application Number – 702". Chennai: Intellectual property in India. 31 August 2023. பார்க்கப்பட்ட நாள் 3 February 2024.
  3. 3.0 3.1 "G.I. Application Number – 702". Chennai: Intellectual property in India. 31 August 2023. பார்க்கப்பட்ட நாள் 3 February 2024.
  4. "সুদিন কি আদৌ ফিরবে, 'জিআই' তকমা পাওয়ার পরে প্রশ্ন তাঁতশিল্পীদের". https://www.anandabazar.com/west-bengal/bardhaman/artisans-hopes-better-income-after-district-received-the-gi-tag-of-tangail-saree/cid/1486695. 
  5. "টাঙ্গাইল শাড়ি কীভাবে ভারতের হয়". https://www.prothomalo.com/opinion/column/acpgtfam03. 
  6. Hasan, Kamrul. "টাঙ্গাইল শাড়ি: শেকড় ফিরে দেখা". egiyecholo.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-10.
  7. "গর্বের ধন ‌'টাঙ্গাইল শাড়ি' বেহাত হলো কার দোষে". https://www.samakal.com/opinion/article/221154/%E0%A6%97%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A7%E0%A6%A8-%E2%80%8C%E2%80%98%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2-%E0%A6%B6%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF%E2%80%99-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B7%E0%A7%87. 
  8. "Application details of the Tangail Saree of Bengal – Geographical Indications". Intellectual Property India. பார்க்கப்பட்ட நாள் 21 January 2024.
  9. G, Sarthak (5 January 2024). "Honey, Tangail, Garad among 5 more West Bengal products to get GI tag". The Times of India (Kolkata). https://timesofindia.indiatimes.com/city/kolkata/honey-tangail-garad-among-5-more-state-products-to-get-gi-tag/articleshow/106557464.cms. 
  10. "Three varieties of handloom sarees in West Bengal get GI tag". The New Indian Express (Kolkata). 4 January 2024. https://www.newindianexpress.com/nation/2024/Jan/04/three-varieties-of-handloom-sarees-in-west-bengal-get-gi-tag-2647857.html. 
  11. Gupta, Arundhati (30 January 2024). "Bengal weaves beautiful handloom stories" (in en). The Statesman. https://www.thestatesman.com/supplements/evolve/bengal-weaves-beautiful-handloom-stories-1503264820.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்காயில்_புடவை&oldid=4136040" இலிருந்து மீள்விக்கப்பட்டது