சாந்திப்பூரி புடவை
சாந்திப்பூரி புடவை (Shantipuri sari) என்பது மேற்கு வங்காளத்தில் பாரம்பரியமாக கைத்தறியாக நெய்யப்படும் புடவை வகையாகும். இது மேற்கு வங்காளத்தின் சாந்திப்பூர் நகரம் மற்றும் நதியா மாவட்டத்தின் சுற்றியுள்ள பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது. சாந்திப்பூரி கைத்தறி புடவை (அல்லது துணிகள்) வடிவமைப்புகளின் புதுமை, கூடுதல் இழை கொண்ட கை நூற்பு முறை, வெவ்வேறு வண்ண வடிவங்கள் மற்றும் துணியின் மெல்லிய நுணுக்கம் ஆகியவற்றிற்கு பிரபலமானது. சிறந்த சாந்திப்பூரி புடவை உலகம் முழுவதும் மிகவும் விரும்பப்படும் ஒன்றாக இருக்கிறது.[1] சாந்திப்பூரி புடவை 2009 ஆம் ஆண்டில் புவியியல் சார்ந்த குறியீட்டைப் பெற்றது.[2][3]
சாந்திப்பூரி புடவையின் சிறப்பு என்னவென்றால், இது குடி பன்ஜ் என்று அழைக்கப்படும் எளிய பாரம்பரிய மடிப்பு வடிவத்தில் சந்தைப்படுத்தப்படுகிறது.[4]
பெயர்காரணம்
தொகுஜவுளி நெசவு 15 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் இருந்து சாந்திப்பூரில் தொடங்கியது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, துணி நெசவு சாந்திப்பூரைச் சுற்றி பரவியது. இங்கு நெய்யப்பட்ட துணிகளில் புடவைகளும் ஒன்றாகும். பின்னர் சாந்திப்பூரில் தயாரிக்கப்பட்ட புடவைகள் சாந்திப்பூரி புடவை என்று அழைக்கப்பட்டன. "சாந்திப்பூரி" என்ற சொல் துணிகளின் மையமான சாந்திப்பூரிலிருந்து பெறப்பட்டது.[4]
வரலாறு
தொகுபதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில், வங்காளத்தில் உள்ள கௌடாவின் ராஜா கணேசனின் ஆட்சியின் போது நெசவாளர்கள் முதலில் சாந்திப்பூரில் குடியேறினர். சாந்திப்பூர் புடவையின் பழமையான தேதி கிபி 1409 வரை செல்கிறது. பதிவுகளின்படி, முதல் புடவைகள் கிபி 1409 இல் கௌட மன்னர் கணேச தானு சதந்தேப்பின் ஆட்சியின் போது சாந்திப்பூரில் நெய்யப்பட்டன.[4][5] சாந்திப்பூரின் நெசவு பாரம்பரியம் அத்வைதி ஆச்சார்யாவின் (1460-1558) வாழ்க்கை வரலாற்று கையெழுத்துப் பிரதியில் அத்வைத் மங்கல் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.[6] நதியாவின் மன்னன் உருத்ர ராயன் ஆட்சிக் காலத்திலும், முகலாய ஆட்சி காலத்திலுமே சாந்திப்பூரில் கைத்தறி நெசவு ஒரு பாரம்பரிய தொழிலாக இருந்தது. நதியாவின் மன்னன் உருத்திர ராயனின் ஆட்சியின் போது, நெசவாளர்களின் பணி பெரும் பாராட்டையும் புகழும் பெற்றது. அந்த நேரத்தில் அரேபியா, கிரேக்கம், துருக்கி, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு புடவைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதன்பிறகு, இந்தத் தொழில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. தயாரிப்புகளில் முக்கியமாக புடவைகள் மற்றும் வேட்டிகள் இருந்தன. ஆனால் சாந்திப்பூர் புடவை தயாரிப்பதில் சிறந்து விளங்கின. சாந்திப்பூரில் உள்ள நெசவாளர்களும் புடவைகளும் மிகவும் பிரபலமாக இருந்தனர். மேலும், அவர்கள் வங்காள நாட்டுப்புற இலக்கியத்திலும் இடம் பெற்றனர்.[4][7]
ஆரம்ப கட்டங்களில், சாந்திப்பூரில் உற்பத்தி செய்யப்படும் துணிகள் கைத்தறி பருத்தி நூலை உள்ளடக்கி இருந்தது. கிபி 1824 இன் பிற்பகுதியில் நூற்பாலைகளால் நெய்யப்பட்டது.[4] சாந்திப்பூரைச் சேர்ந்த நெசவாளரான பிரேன் குமார் பாசக்கு, தனது பணிக்காக 2021 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருதைப் பெற்றார்.[8][9]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Geographical Indications Journal No.29". search.ipindia.gov.in. pp. 138–143. பார்க்கப்பட்ட நாள் 17 August 2023.
- ↑ "Santipur Saree". search.ipindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 18 August 2023.
- ↑ "রসগোল্লার মতো বাংলার শাড়িতেও রয়েছে জিআই স্বীকৃতি, পেয়ে যাবেন এ শহরেই". Anandabazar2 (in Bengali). Kolkata: Anandabazar Patrika. 10 February 2022. பார்க்கப்பட்ட நாள் 19 August 2023.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 "Geographical Indications Journal No.29". search.ipindia.gov.in. pp. 138–143. பார்க்கப்பட்ட நாள் 17 August 2023."Geographical Indications Journal No.29". search.ipindia.gov.in. pp. 138–143. Retrieved 17 August 2023.
- ↑ Rakesh Sarkar (25 August 2019). "হস্তচালিত তাঁতের শাড়ির শ্রমিকদের ঘর অন্ধকারই". Anandabazar (in Bengali). Anandabazar Patrika. பார்க்கப்பட்ட நாள் 18 August 2023.
- ↑ অদ্বৈতমঙ্গল (PDF) (in Bengali) (1 ed.). Bardhaman: Burdwan University Press. பார்க்கப்பட்ட நாள் 18 August 2023.
- ↑ Pradipta Dubey; Dr. Subhrangsu Santra (25 December 2013). "WEAVING AND LIVELIHOOD IN SHANTIPUR OF WEST BENGAL: PAST AND PRESENT". International Journal of Current Research 5 (12): 4014–4017. பன்னாட்டுத் தர தொடர் எண்:0975-833X. https://www.journalcra.com/sites/default/files/issue-pdf/Download%204605.pdf. பார்த்த நாள்: 18 August 2023.
- ↑ Ayan Das (13 November 2021). "শাড়িতে 'ধর্মনিরপেক্ষ' মোদী, শান্তিপুরের পদ্মশ্রীপ্রাপকের উপহারে আপ্লুত পিএম". bangla.hindustantimes.com (in Bengali). Hindustan Times - Bangla. பார்க்கப்பட்ட நாள் 19 August 2023.
- ↑ "Meet Biren Kumar Basak, from selling sarees to winning Padma Shri". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-01-26. பார்க்கப்பட்ட நாள் 19 August 2023.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Shantipuri sari தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Santipuri Saree — West Bengal Handloom