ஜம்மு காஷ்மீர் பொதுப் பாதுகாப்புச் சட்டம், 1978
ஜம்மு காஷ்மிர் பொதுப் பாதுகாப்புச் சட்டம், 1978 (Jammu and Kashmir Public Safety Act, 1978 (PSA) இந்தியாவின் வடக்கில் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கை பராமரிப்பதற்கு எதிராக தீங்கு விளைவிப்பதைத் தடுப்பதற்கு ஒரு நபரை காவலில் வைக்கப்படும் ஒரு தடுப்புக் காவல் சட்டமாகும்.[2][3] இது இந்திய அரசு இயற்றிய 1980 தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்றதே. [4]சேக் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக இருந்தபோது இச்சட்டம் இயற்றப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் பொதுப் பாதுகாப்புச் சட்டம், 1978 | |
---|---|
ஜம்மு காஷ்மீர் பொதுப் பாதுகாப்புச் சட்டம், 1978 | |
சான்று | [1] |
நிலப்பரப்பு எல்லை | ஜம்மு காஷ்மீர் |
இயற்றியது | ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் |
சட்டத்தின் மையக் கருத்துக்கள்
தொகு- மாவட்ட நீதிபதி தகுதியில் உள்ள காவல்துறை ஆணையாளர் அல்லது மாவட்ட ஆட்சியர்களே இந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
- 2012-அம் ஆண்டில் இந்தச் சட்டத்தின் கீழ் 18 வயதுக்குட்பட்டவர்களைக் கைது செய்யக் கூடாது என்று மாற்றம் செய்யப்பட்டது. பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்ட 4 வாரங்களுக்குள் ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்படும். 8 வாரங்களுக்குள் கைதானவர்கள், சரியான காரணத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்து இந்தக் குழு ஆராயும். சரியான காரணம் இருப்பின் 12 மாதங்கள் முதல் 2 வருடங்கள் தடுப்புக் காவலிலிருந்து வெளியே வர முடியாது.
- இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒரு நபரை 2 ஆண்டுகள் வரை எவ்வித விசாரணையின்றி தடுப்புக் காவலில் வைக்க முடியும். மேலும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டியதில்லை. தடுப்புக்காவல் என்பது பாதுகாப்பானது, தண்டனைக்குரியது அல்ல.
2019 - 2020 ஆண்டுகளில் பொதுப் பாதுகாப்புச் சட்டம்
தொகுஇந்திய நாடாளுமன்றம் ஆகஸ்டு, 2019-இல் 2019-இல் ஜம்மு காஷ்மீர் மறுசீரைமைப்புச் சட்டத்தை இயற்றிய போது, ஜம்மு காஷ்மீரின் பொது அமைதிக்காக, காஷ்மீர அரசியல் தலைவர்கள் மற்றும் பிரிவினைவாதிகளை, ஜம்மு காஷ்மீர் ஆளுநர் இந்தப் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரவர் வீடுகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி முதலியவர்கள் 6 மாதங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் பொதுப் பாதுகாப்புச் சட்ட்டத்தின் கீழ் அவரவர் வீடுகளில் மார்ச் 2020 வரை தடுத்து வைக்கப்பட்டனர்.[5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Jammu and Kashmir Public Safety Act, 1978
- ↑ Jammu and Kashmir Public Safety Act, 1978
- ↑ Explained: The Jammu & Kashmir Public Safety Act – The Hindu
- ↑ The Indian Express (17 September 2019). "Explained: What is Jammu and Kashmir's Public Safety Act?". https://indianexpress.com/article/explained/farooq-abdullah-psa-jammu-and-kashmir-explained-6001031/. பார்த்த நாள்: 12 March 2020.
- ↑ 2 ஆண்டுகள் வீட்டுச் சிறை... காஷ்மீர் தலைவர்கள்மீது பாய்ந்த பொது பாதுகாப்புச் சட்டம்
- ↑ பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லா கைது
ஆதராங்கள்
தொகு- Bhat, Mohmad Aabid (2019), "Preventive Detention in Counter-insurgencies: The Case of Kashmir", Insight Turkey 2019/04, SET Vakfı İktisadi İşletmesi
- Bose, Sumantra (2003), Kashmir: Roots of Conflict, Paths to Peace, Harvard University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-01173-2
- Duschinski, Haley; Ghosh, Shrimoyee Nandini (2017). "Constituting the occupation: preventive detention and permanent emergency in Kashmir". The Journal of Legal Pluralism and Unofficial Law 49 (3): 314–337. doi:10.1080/07329113.2017.1347850. பன்னாட்டுத் தர தொடர் எண்:0732-9113.
- Cottrell, Jill (2013), "Kashmir: The vanishing autonomy", in Yash Ghai; Sophia Woodman (eds.), Practising Self-Government: A Comparative Study of Autonomous Regions, Cambridge University Press, pp. 163–199, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1017/CBO9781139088206.006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-29235-2
- Pandit, Huzaifa (2019). "Schools of resistance – a brief history of student activism in Kashmir". Postcolonial Studies 22 (1): 95–116. doi:10.1080/13688790.2019.1568171. பன்னாட்டுத் தர தொடர் எண்:1368-8790.
- Rai, Mridu (2018), "Kashmir: From Princely State to Insurgency", Oxford Research Encyclopedia of Asian History, Oxford University Press, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acrefore/9780190277727.013.184, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780190277727
மேலும் படிக்க
தொகு- Amnesty International (2019). Tyranny of a ‘Lawless Law': Detention Without Charge or Trial Under The J&K Public Safety Act. Indians For Amnesty International Trust. Retrieved on 17 February 2020. Archived on 17 February 2020.
- Amnesty International (2011). A ‘Lawless Law': Detention Under The J&K Public Safety Act. Amnesty International. Retrieved on 12 March 2020. Archived on 16 April 2019.
- Library of Congress (11 April 2012). India: State of Jammu and Kashmir Amends Public Safety Act. Global Legal Monitor
- IANS (3 January 2018). No rules, no procedures for preventive detentions under Jammu and Kashmir Public Safety Act, reveals RTI. தி நியூ இந்தியன் எக்சுபிரசு
- B. V. Kumar (1991). Preventive Detention Laws of India. Konark Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8122002358
வெளி இணைப்புகள்
தொகு- ஜம்மு காஷ்மீரின் முதல் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபைஸல் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்கு
- Jammu and Kashmir Public Safety Act, 1978
- Department of Forests, Environment & Ecology (2014). Sanction for approved of revised Working Plans of Anantnag, Shopian and Udhampur Forest Divisions. Government of Jammu and Kashmir