ஜரிகை

ஒரு நூல் வகை

ஜரிகை என்பது பாரம்பரியமாக இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் தயாராகும்  ஆடைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது சுத்தமான தங்கம் அல்லது வெள்ளியால் ஆன ஒரு நூல் ஆகும். குறிப்பாக புடவைகளில் உடலில் புட்டா மற்றும் சேலைகளின் கரை மற்றும் முந்தானை பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. திருமணத்திற்காக நெய்யப்படும் பட்டுப் புடவைகளில் உடல் முழுவதும் ஜரிகையால் நெசவுச் செய்யபடுகிறது.

பட்டுச் சேலை முந்தானையில் கட்டப்படும் ஜரிகையிலானா குஞ்சலம்.

ஜரிகையின் தரம்

தொகு

பட்டுச் சேலைகளில் பயன்படுத்தப்படும் சுத்தமான ஜரிகையின் தரமானது, 245 கிராம் ஜரிகை ஒரு மார்க் என அழைக்கப்படுகிறது. இதில் 191 கிராம் வெள்ளி (78 சதவீதம்), 51.55 கிராம் பட்டு(21 சதவீதம்), 2.45 கிராம் தங்கம் (1 சதவீதம்) இருக்கும்.[1]

இவற்றையும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. தினமலர் செய்தித்தாள்.பதிவு செய்த நாள்: பிப் 20,2011 02:25 பார்த்த நாள் 18.03.2020
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜரிகை&oldid=3090193" இலிருந்து மீள்விக்கப்பட்டது