ஜள்காவ் வன்கலவி வழக்கு
ஜள்காவ் வன்கலவி வழக்கு (Jalgaon rape case) மனித கடத்தல், கற்பழிப்பு மற்றும் பாலியல் அடிமைத்தனம் ஆகியனவற்றை உள்ளடக்கிய ஒரு வழக்கினைக் குறிப்பதாகும்,[1] இது இந்தியாவின் மகாராஷ்டிராவின் ஜள்காவ்னில் நடந்தது. [2]இது ஜூலை 1994 இல் பரவலான கவனத்தினைப் பெற்றது. பெண்கள், பள்ளிக்குச் செல்லும் சிறார்களில் பலர், வணிகர்கள், தொழில் வல்லுநர்கள், அரசியல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளால் பாலியல் வன்கலவிக்காக ஏமாற்றப்பட்டனர், போதைப்பொருள் செலுத்தியும் மற்றும் சில சமயங்களில் சித்திரவதையும் செய்யப்பட்டனர். இந்தச் செயல் 300 முதல் 500 பெண்களை உள்ளடக்கியதாகவும் 5 முதல் 12 வருடங்களாக நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. சிறுமிகளை வன்கலவி செய்த பலர் பரவலாக நகரத்தின் செல்வாக்குள்ள நபர்களாக இருந்தனர்.
ஜள்காவில் பெண்கள் துன்புறுத்தப்படுவது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்தது. ஆண்கள் , பெண்களுக்கான கல்லூரி வளாகங்கள், அழகு நிலையங்கள், பனிக்கூழ் மண்டபம், மருத்துவமனைகள் மற்றும் பேருந்து முனையங்கள் போன்ற இடங்களில் ஒற்றர்கள் மூலம் அங்குள்ள பெண்களை நோட்டமிடுவார்கள் . பாலியல் வன்கொடுமை மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு முன்பு தாங்கள் அமைதியாக இருந்ததாக பாதிக்கப்பட்ட சிலர் கூறினர். அவர்கள் அந்தப் புகைப்படங்களை வைத்து, அவர்களை அச்சுறுத்துறுத்தல் செய்வார்கள்.[3]
காவல் துறை விசாரணை
தொகுஇருப்பினும், 1993 இல், ஒரு சில பெண்கள் இறுதியாக ஒரு காவல் துறையினரிடம் புகார் செய்தனர். பின்னர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் ஜாக் விசாரணையைத் தொடங்கினார், விரைவில் பல புகார்கள் வரத் தொடங்கின.
இந்த வழக்குகள் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த ஜள்காவ் நகராட்சி குழு (ஜேஎம்சி) உறுப்பினர்களான பண்டிட் சப்கலே மற்றும் ராஜு தத்வி ஆகியோரின் தொடர்பு பற்றிய வதந்திகளால், மாநில சட்டசபையிலும் இந்த விவகாரம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஜள்காவில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு உருவாக்கப்பட்டது. அரவிந்த் இனாம்தார், மீரா போர்வாங்கர் மற்றும் தீபக் ஜாக் தலைமையில், இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடத்த புனேவில் குற்றவியல் நீதிபதி மிருதுளா பட்கரின் தலைமையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. ஆதாரங்களை பதிவு செய்வது 1995 இல் தொடங்கியது.
12 பாலியல் வன்கலவிகள் உட்பட சுமார் 20 பாலியல் சுரண்டல் வழக்குகள் ஜள்கான் மற்றும் அண்டை நாடான புசாவலில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் 12 வயதுடையவர்கள், அனைவரும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள்
தொகுகுற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் இரண்டு சிவசேனா தலைவர்கள் மற்றும் ஜள்காவின் நகராட்சி மன்ற உறுப்பினர்கள், ஒரு மருத்துவர், ஒரு வழக்கறிஞர், ஒரு வானொலி ஒலிபரப்பு நிலைய ஊழியர் மற்றும் ஒரு விடுதி உரிமையாளர் ஆகியோர் ஆவர். முக்கிய உள்ளூர் காங்கிரசு தலைவர் சுரேஷ் ஜெயின் (சுரேஷ்தாடா) சம்பந்தப்பட்டவர் என்று ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர் அதனை மறுத்து வந்தார்.
நீதிமன்ற வழக்கு
தொகுமீரா போர்வாங்கர், பின்னர் மும்பையில் இணை ஆணையராக (குற்றம்) ஆனார்: '' குற்றங்கள் தாமதமாக அறிவிக்கப்பட்டதுதான் முக்கிய பிரச்சனையாகப் பார்க்கப்பட்டது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட ஒரு வருட காலம் ஆனது. அதனால் இந்த வழக்கில் மருத்துவ ஆதாரம் இல்லாமல் போனது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது கூட, வழக்குகள் பலவீனமானவை என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் நாங்கள் அதை மனசாட்சிப்படி நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றோம் என்று அவர் கூறினார்.