ஜஸ்விந்தர் கவுர்
ஜஸ்விந்தர் கவுர், இந்தியாவின் பஞ்சாப்பின் கரார் என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த, பயணிகள் விமானஓட்டியாவார். [1] [2] [3]
ஜஸ்விந்தர் கவுர் | |
---|---|
ஜஸ்விந்தர் கவுர் | |
தாய்மொழியில் பெயர் | ஜஸ்விந்தர் கவுர் |
பிறப்பு | கரார் (பஞ்சாப்) |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | ஏர்பஸ் விமானி |
பஞ்சாப் அரசுப் பணியாளரான தந்தைக்கும் குடும்பத்தலைவியான தாய்க்கும் முதல் குழந்தையாக பிறந்துள்ள ஜஸ்விந்தர், சிறுவயதிலேயே வானத்தில் பறப்பதை பற்றி கனவுகளைக் கொண்டிருந்ததாக, தெரிவித்துள்ளார்.
தனது பதினாறாவது வயதிலேயே விமானியாக வேண்டும் என முடிவெடுத்துள்ள இவரின் குடும்பத்தினரும், உறவினர்களும் இந்திய விமானப்படை விமானியாக அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் பயணிகள் மற்றும் வணிக போக்குவரத்து விமானியாகவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்துள்ளார், அதற்காக தனது நகரத்தில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவில் இருந்த தனியார் விமான பயிற்சி பள்ளியில் சேர்ந்து பயின்றுள்ளார். இதற்காக தனது குடும்பத்தினரிடம், திருமண செலவிற்காக வைத்துள்ள பணத்தை படிப்பிற்கு செலவழிக்கும் படி வேண்டி, அதன்படி விமானப்பயிற்சியை பெற்றுள்ளார்.
பிஞ்சோர் விமான மையம் மூடப்பட்டதினால், அரியானா பயணிகள் விமான போக்குவரத்து நிறுவனத்தின் துணை சங்கமான, கர்னால் விமான சங்கத்தில் இணைந்து வணிக விமானங்களை இயக்கும் விமானி உரிமத்தை பெற்றுள்ளார்.[4] [5] [6]
பெங்களுருவில் ஏர் டெக்கான் விமானசேவை நிறுவனத்தில் விமானியாக முதல்முறையாக பொறுப்பேற்ற ஜஸ்விந்தர், பல்வேறு வகைப்பட்ட சிறிதும் பெரிதுமான பயணிகள் விமானங்களை, பல்வேறு விமானத்தடங்களில் ஓட்டியுள்ளார், தற்போது டாடா குழும நிறுவனங்களால் நடத்தப்படும் இந்திய ஏர்ஆசியா விமான நிறுவனத்தில் 2016 ஆம் ஆண்டு முதல் விமானியாக பணியாற்றி வருகிறார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Anupkumar, Anuradha. "Born to fly". tatareview.tataworld.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-01.
- ↑ Team, S. T. P. (2015-12-10). "She wanted to fly high and she did: Meet Captain Jaswinder Kaur from Go Air". SheThePeople TV (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-21.
- ↑ Bhatt, Shephali (2018-03-04). "Sky no bar: Despite struggle, an impressive 12% of Indian pilots are women". The Economic Times. https://economictimes.indiatimes.com/industry/transportation/airlines-/-aviation/sky-no-bar-despite-struggle-an-impressive-12-of-indian-pilots-are-women/articleshow/63151439.cms?from=mdr.
- ↑ "6 Badass Female Pilots Following Their Dreams & Breaking Boundaries". Global Citizen (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-21.
- ↑ "From humble beginnings to flying high | RITZ". RITZ Magazine (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-07-04. பார்க்கப்பட்ட நாள் 2020-03-21.
- ↑ "SHEROES - The Women-Only Social Network". sheroes.com. பார்க்கப்பட்ட நாள் 2020-03-21.
- ↑ "Jaswinder Kaur: Born To Fly | Tata group". www.tata.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-20.