ஜான் ஏ. பீகாக்
ஜான் ஆந்திரூ பீகாக் FRS, FRSE (பிறப்பு 27 மார்ச் 1956) ஒரு பிரித்தானிய அண்டவியலாளரும் வானியலாளரும் ஆவார்.[1] 1இவர் 998 முதல் எடின்பர்கு பல்கலைக்கழகத்தில் அண்டவியல் பேராசிரியராக உள்ளார்.[2] இவர் 2014 ஆம் ஆண்டின் சா பரிசை இணைந்து வென்றவர்.[3]
1989 ஆம் ஆண்டில் எடின்பரோ ராயல் வான்காணகத்தில் பணியாளர் வானியலாளராக இருந்தார். ஆர்.ஓ.இ.யின் மேற்கு கோபுரம் பின்னணியில் உள்ளது. | |
பிறப்பு | 27 மார்ச்சு 1956 ஷாஃப்டெஸ்பரி, இங்கிலாந்து |
---|---|
துறை | வானியற்பியல், அண்டவியல் |
நிறுவனம் | எடின்பரோ பல்கலைக்கழகம் |
Alma mater | இயேசு கல்லூரி,கேம்பிரிச்சு |
துறை ஆலோசகர் | மால்கம் லோங்கெய்ர், ஜே. வால் |
அறியப்பட்டது | விண்மீன் திரள்களின் பெரிய அளவிலான கட்டமைப்பு |
பரிசுகள் | எடின்பரோ ராயல் சொசைட்டியின் உறுப்பினர் (2006) அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினர் (2007) வானியலில் ஷா பரிசு (2014) அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (2023) |
இளமையும் கல்வியும்
தொகுபீகாக் 27 மார்ச் 1956 அன்று இங்கிலாந்து தோர்செட்டில் உள்ள சாபிதெசுபரியில் இங்கிலாந்தில் ஆர்தர் பீகாக், ஐசோபெல் பீகாக் (நீ மோயிர்) ஆகியோருக்கு பிறந்தார்.[1][4] இவர் கேம்பிரிட்ஜ் இயேசு கல்லூரியில் இயற்கை அறிவியல் பயின்றார். இவர் 1977 இல் முதல் வகுப்பு இளங்கலை கலை பட்டம் பெற்றார்.[1] பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கேவெண்டிசு ஆய்வகத்தில் எம். எசு. லாங்கேர், ஜே. வி. வால் ஆகியோரின் மேற்பார்வையில் முனைவர் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.[1] 1981 ஆம் ஆண்டில் " பால்வெளிக்கு அப்பாலான கதிரலை வாயில்களின் கதிரலைக் கதிர்நிரல்களும் அண்டவியல் படிமலர்ச்சியும் விண்மீன் மண்டலத்திற்கு வெளியே உள்ள ரேடியோ ஆதாரங்கள் " என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.[5]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகு1982 ஆம் ஆண்டில் பீகாக் ஒரு செவிலியர் மற்றும் மருத்துவ கல்வியாளரான கீதர் என்பவரை மணந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.[6]
தகைமைகள்
தொகு2006 ஆம் ஆண்டில் பீகாக் எடின்பர்கு அரசு கழகத்தின் பொறியியல் ஆய்வுறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] 2007 ஆம் ஆண்டில் அவர் அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] 2014 ஆம் ஆண்டில் , வானியலுக்கான சா பரிசு ' பெரிய அளவிலான கட்டமைப்பில் உள்ள கூறுபாடுகளை அளவிடுவதில் அவர்கள் செய்த பங்களிப்புகளுக்காக வழங்கப்பட்டது. அடர்துகள் ஒலி அலைவுகள், சிவப்புப் பெயர்ச்சிக் குலைவுகள் உள்ளிட்ட அண்டவியல் படிமத்தைக் கட்டுப்படுத்கிது பயன்படுத்தப்பட்டது. இப்பரிச டேனியல் ஐன்சுட்டைன், சான் கோல் ஆகியோரும் இவருடன் இணைந்து பெற்றனர்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Curriculum Vitae: John Andrew Peacock" (PDF). University of Edinburgh. பார்க்கப்பட்ட நாள் 5 June 2014.
- ↑ "Biographical Notes of Laureates". The Shaw Prize Foundation. Archived from the original on 17 July 2018. பார்க்கப்பட்ட நாள் 5 June 2014.
- ↑ 3.0 3.1 "The Shaw Prize in Astronomy 2014". The Shaw Prize Foundation. 27 May 2014. Archived from the original on 11 September 2018. பார்க்கப்பட்ட நாள் 5 June 2014.
- ↑ "PEACOCK, Prof. John Andrew". Who's Who 2016. Oxford University Press. November 2015. பார்க்கப்பட்ட நாள் 25 September 2016.
- ↑ Peacock, J. A. (1981). "The radio spectra and cosmological evolution of extragalactic radio sources". E-Thesis Online Service. The British Library. பார்க்கப்பட்ட நாள் 25 September 2016.
- ↑ "Autobiography - John A Peacock". Shaw Laureates. The Shaw Prize. 24 September 2014. Archived from the original on 22 June 2018. பார்க்கப்பட்ட நாள் 2 May 2015.
- ↑ "Directory 2013/14" (PDF). Royal Society of Edinburgh. 2013. Archived from the original (PDF) on 2 March 2014. பார்க்கப்பட்ட நாள் 5 June 2014.
- ↑ "Fellows". The Royal Society. பார்க்கப்பட்ட நாள் 5 June 2014.