ஜான் டான்டன்

அமெரிக்கக் கண்மருத்துவர், தேசியவாதி, குடிவரவு எதிர்ப்பாளர்

ஜான் ஆமில்டன் டான்ட்டன் (John Hamilton Tanton)[1] (February 23, 1934 – July 16, 2019) ஓர் அமெரிக்க கண் மருத்துவரும், வெள்லையினத் தேசியவாதியும்[2][3][4] குடிவரவு எதிர்ப்புச் செயல்முனைவாளரும் ஆவார். இவர் ஃபேர்((FAIR) எனும் அமெரிக்கக் குடிவரவு சீர்திருத்தப் பேரவையை நிறுவியவரும் அதன் தலைவரும் ஆவார். இது அமெரிக்கக் குடிவரவுக்கான எதிர்ப்பியக்கம் ஆகும். இவர் குடிவரவு ஆய்வு மையத்தையும் நிறுவினார். இது குடிவரவு எத்திர்ப்பு சிந்தனைக் கட்டமைப்பாகும் இவர் இதே போன்ற குடிவரவு எதிர்ப்பு பரப்புரைக் குழுவையும் உருவாக்கினார். இது நம்பஎசுயூயெசே(NumbersUSA) என வழங்கியது. இவர் ஐக்கிய அமெரிக்க ஆங்கிலம் என்ற அமைப்பை உருவாக்கி, ஆங்கிலமே அல்வல் மொழியாக வேண்டும் எனப் போராடினார். இவர் சுழிய மக்கள்தொகை வளர்ச்சி அமைப்பின் தலைவரும் ஆவார்.. இவர் சமூக ஒப்பந்தம் எனும் தாயக, வெள்ளையினத் தேசியவாதிகளை இணைக்கும் செய்தி ஊடகத்தை உருவாக்கியவர் ஆவார். இது ஒரு காலாண்டிதழை, 2019 இலையுதிர்காலம் வரை, நடத்தியது. இதில் தாயக, வெள்ளையின ஆதரவு எழுத்தாளர்கள் கட்டுரைகளை எழுதினர்.[5] இவர் மரபியல் கல்விக்கான மீமரபியல்சார் ஒருங்கமைப்புக் கழகத்தை நிறுவினார்.

ஜான் டான்ட்டன்
John Tanton
பிறப்பு(1934-02-23)பெப்ரவரி 23, 1934
டெட்ராயிட், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா.
இறப்புசூலை 16, 2019(2019-07-16) (அகவை 85)
பீட்டோசுகி, மிச்சிகன்
படித்த கல்வி நிறுவனங்கள்மிச்சிகன் மாநிலப் பலகலைக்கழகம்
மிச்சிகன் பல்கலைக்கழகம்
பணிOphthalmologist, activist
வாழ்க்கைத்
துணை
மேரி இலவு டான்ட்டன்

இளமை

தொகு

டான்ட்டன் 1934 இல் டெட்ராயிட்டில் பிறந்தார்.[6][7] இவர் 1945 இல் தம் குடும்பத்தோடு மிச்சிகன், பே ந்கருக்கு வடக்கிழக்கில் இருந்த ஒரு பண்ணைக்கு நகர்ந்தார். இது தான் இவரது தாயார் வளர்ந்த, பணிபுரிந்த, வாழிடமாகும்.[8]

இவர் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் 1956 இல் வேதியியல் பட்டம் பெற்ற பின் டச்சுன் பட்டமும் பெற்றார், மேலும் 1960 ஆம் ஆண்டில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் அவருடைய மருத்துவப் பட்டத்தைப் பெற்றார். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் 1964 இல் கண் மருத்துவத்தில் ஒரு கண்மருத்துவ முதுவர் பட்டத்தையும் பெற்றார்.

வாழ்க்கைப்பணி

தொகு

இவர் கண் மருத்துவத் தொழிலை மிச்சிகன் சார்ந்த பெட்டோவுசுகியில் நடத்தினார்.[9]

அரசியல்வாதி

தொகு

டான்ட்டன் ஒரு குடியேற்ற எதிர்ப்புச் செயல்முனைவாளர் ஆவார்.[9] இவர் பல குடியேர்ற எதிர்ப்புச் சேவை நிற்வனங்களை நிறுவியவரும் ஆவார்.[10] இவர் சியெராக் குழுவின் பெட்டோசுகி குழுமல்கள், திட்டமிட்ட பெற்றோர்மை, சுழிய மக்கள்தொகை வளர்ச்சி ஆகிய அமைப்புகளை நிறுவியுள்ளார். இதில் இறுதியான நிறுவனத் தலைவரும் ஆவார் குடியேற்றத்தைக் குறைக்க, இந்தக் குழுக்களின் உறுப்பினர்களின் போதுமான ஆதரவு கிடக்காததால், இவர், 1979 இல் அமெரிக்கக் குடியேற்றச் சீர்திருத்தப் பேரவை எனும் சேவை நிறுவனத்தை வாரன் புஃபெட், இயூகின் மெக்கார்த்தி ஆகியோர் ஆதரவுடன், இது நடுநிலை/தாராளநிலை அரசியலைக் கடைபிடிக்கும் என்ற உறுதி கூறி, நிறுவியுள்ளார்".[9] இவர் 1983 இல் பிறரோடு இணைந்து ஐக்கிய அமெரிக்க ஆங்கில நிறுவனத்தையும் நிறுவினார்.[11][12][13]

மேலும், இவர் பிறருடன் இணைந்து நிறுவி தொடர்பு வைத்துள்ள அமைப்புகளாக, குடியேற்ற ஆய்வு மையம், எண்கள் அஐநா(USA0, அமெரிக்கக் குடியேற்ற கட்டுபாட்டு அறக்கட்டளை, அமெரிக்கப் பட்ரோவின் ஒருங்கிணைந்த குடிமக்கள் குரல், கலிபோர்னியா மக்கள்தொகை நிலைப்படுத்த்ல் அமைப்பு, அஐநா(USA) பெருந்திட்டம், ஆகியன அமைகின்றன. [2][3][14]இவருக்கு கொடை வழ்ங்கிய ஐக்கிய அமெரிக்க நிறுவனம்,[15][16]பின்வரும் அமைப்புகளுக்கும் கொடை வழங்குகிறது. அவை, மிச்சிகனில் உள்ள அமெரிக்கக் காட்சி, பன்னாட்டு இருள்வான் கழகம்மயல்நாட்டுக் கொள்கைக் கழகத்தின் மாபெரும் முடிவுகள் தொடர், வடக்கு நாட்டு மரபு கழகம் வெளியிடும் துறைமுக வேனில்கள் என்பனவாகும் . இவர் மக்கள்தொகை-சுற்றுச்சூழல் சமனிலை வாரியத்தில் பணிபுரிந்தார்.[17]

இவர் சமூக ஒப்பந்த அச்சகத்தை 1990 இல் நிறுவி, வெளியீட்டாளராகப் பண்புரிந்நார். மேலும், சமூபொப்பந்தம் எனும் இதழின்முதன்மைப் பதிப்பாசிரியராகவும்1998 இல் இருந்து செயல்பட்டார்.[18] இவர்வேய்னி உலுட்டனோடு இணைந்து குடியேர்ற முற்றுகை எனும் நூலை எழுதி, அதை 1994 இல் சமூக ஒப்பந்த அச்சகம் வழியாக வெளியிட்டார்.[19]

மீமரபியல் ஊக்குவிப்பு

தொகு

மின்வட வலைச் செய்தி CNN அலைவரிசையின்படி, டான்ட்டன் " மீமரபியல் நடைமுறையை பொது வெளியில் தெரியும்படியே தழுவி, தெரிவுசெய்த இனப்பெருக்க முறைவழி மக்கள்தொகையின் மரபியல் தரத்தை வளப்படுத்தும் போக்கைக் கடைப்பிடித்ததோடு, சிலவேளைகளில் தேவையானால் மரபியலாக வேண்டாத குழுக்களுக்கு கருக்கலைப்பு செய்தலையும் பற்றிப் பரப்புரை செய்தார்." [20] டான்ட்டன் 1975 இல் எழுதிய கட்டுரையில் 20 முதல் 35 வரையிலான அகவையினருக்கு மட்டுமே குழந்தை பெறும் வாய்ப்பை நல்கும் "மீமரபியல் ஒப்புதல்" வழங்க வேண்டும் என வாதிடுகிறார்.[21] மேலும், இவர் மீமரபியலை வளர்த்தெடுக்க, மரபியல் கல்வி அமைப்பை நிறுவினார்.[21]

குடியேற்ற எதிர்ப்பு

தொகு

தி கில் எனும் இதழின் இராபயேல் பெர்னாலின் கூற்றுப்படி, டான்ட்டனின் குடியேற்ற எதிர்ப்பு மக்கள்தொகைக் குறைப்புக்காகவும் வெள்ளையின பெரும்பான்மையைத் தக்கவைப்ப்பதற்காகவுமேயானது".[22] நியூயர்க் டைம்சு செய்திப்படி, இனவாத அடிப்படையிலேயே பெரிதும் டான்ட்டன் குடியேற்ற எதிர்ப்பை வளர்த்தெடுத்தார்.[23] நியூயர்க் டைம்சு செய்திப்படி, டான்ட்டன் மேலும் கூறியுள்ளார் " உன்னையும் என்னையும் போல் உள்ள மக்கள்தொகை குறைந்து வருவதே என் முதன்மை வாய்ந்த கவலையாகும் ... ஐரோப்பிய அமெரிக்கச் சமூகமும் அதன் பண்பாடும் நின்றுநிலைக்க, ஐரோப்பிய அமெரிக்கப் பெரும்பான்மை தேவை, ஆம் அது மிகமிகத் தேவையாகும்."[23]

ஐக்கிய அமெரிக்க ஆங்கில அமைப்புப் பதவி விலகல்

தொகு

அரிசோனா அரசு அலுவல் மொழியாக ஆங்கிலத்தைத் தேர்வு செய்யும் வாக்கெடுப்புக்கு மின்னால், 1988 இல் , டான்ட்டன் எழுதிய ஒரு தனியார்க் குறிப்புரை ஊடகத்தில் கசிந்தது. இக்குறிப்புரையில், ஐக்கிய அமெரிக்கவில் இசுபானியர் குடியேறும் உயர்நிலை அளவுகள் குறிப்பாக பிற இனங்களைவிட கூடுதலாக அமையும் இவர்களது உயர் இனப்பெருக்க வீதத்தை எண்ணிப் பார்க்கும்போது, இவை உருவாக்கும் அரசியல், பண்பாட்டு, சுற்றுச்சூழல், மக்கள்தொகையியல் தாக்கங்களைப் பற்றிய அக்கறைகளை வெளிப்படுத்தியுள்ளார்.. இதில் மேலும் இவர் இவ்வகைக் குடியேறற வேகத்தை அவர்கள் பண்பாட்டியலாகத் தன்மயமாகவல்ல வீதத்துக்குக் குறைக்க வேன்டும் என முடிக்கிறார். மேலும், இவரது கீழுள்ள கேள்விகளும் அறிவிப்புகளும் உணர்ச்சி தூண்டும் வகையிலேயே அமைகின்றன: "இலத்தீன அமெரிக்காவில் இருந்து புலம்பெயர்வோர் தங்களது வழக்கமாக, கையூட்டு, பொதுவாழ்வு அக்கறையின்மை போன்ற மரபுபுகளையும் தம்மோடு கொணர்வார்களா.?" ; "இசுபானியருக்கும்( இயல்பான 50% இடைநிற்றல் வீதம் உள்லோர்) ஆசிய மக்கள் ( தகுதியான பள்ளி ஆவணங்களும் கல்விநல்கை வளமரபு உள்ளோர்) இடையில் உள்ள வேறுபாடு என்ன?"; "மக்கள்தொகை நிலையில்< ஒருவேளை முழுக்கால் சட்டையாளரிடம்(வெள்ளையரிடம்) முக்கால் கால்சட்டைக்கார்கள்(மற்றவர்) மாட்டிக் கொள்வது இதுவே முதல்முறை நிகழ்வாகலாம்!" [24]இந்த ஊடகக் குறிப்புரை வெளியான பிறகு, பல முன்னணி ஐக்கிய அமெரிக்க ஆங்கில அமைப்பு உறுப்பினர்கள் அந்த அமைப்போடிருந்த தம் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டனர். அவர்களுள் அறிவுரைக்குழு உறுப்பினரான வால்ட்டேர் குரோங்கைட்டும் செயல் இயக்குநரான இலிண்டா சாவேசும் அடங்குவர்.[25]டான்ட்டன், தன்னை இனவாதியாக உருவகப்படுத்தும் பரப்புரைப் போக்கைக் கண்டித்துவிட்டு, ஐக்கிய அமெரிக்க ஆங்கில அமைப்பில் இருந்து பதவி விலகினார்..[26]

அமெரிக்கக் குடியேற்றச் சீர்திருத்தப் பேரவைக்கு நிதிவழங்கல்

தொகு

தேர்ந்தெடுத்த இனப்பெருக்கத்தை, குறிப்பாக மீமரபியல் நடைமுறையை வளர்க்கும் பயோனீர் சேவை நிறுவன நிதியைத் தொடர்ந்து, டான்ட்டன் தலைமையின்போது அமெரிக்கக் குடியேற்றச் சீர்திருத்தப் பேரவைக்குப் பெற்றுவந்தமை கண்டன விமர்சனத்துக்கு உள்ளானது.[25] அமெரிக்கக் குடியேற்றச் சீர்திருத்தப் பேரவை இந்தக் கண்டனத்துக்கு, பயோனீர் நிதி தன் கொள்கை விளக்கத்தில், இந்நிதி அமெரிக்கர் அனைவருக்கும் இனம், மதம், தேசியம்ஈனக்குழு பாராமல் சமவாய்ப்பு வழங்கும் என உறுதிபடக் கூறுவதாலும் பிற அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களைப் போன்ற பெரிய நிறுவனங்களும் இந்நிதி நல்கையை பெறுவதையும் சுட்டிக் காட்டிப் பதிலளித்தது;[27] மேலும் இந்நிதி, ஃபேர் நிறுவனத்தின் பொதுச் செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது எனவும் அந்நிறுவனம் வாதிட்டுள்ளது.

தெற்கு வறுமைச் சட்ட மைய விமர்சனம்

தொகு

தெற்கு வறுமைச் சட்ட மையம் ஃபேர் அமைப்பு, சமூக ஒப்பந்த அச்சகம் ஆகிய இரண்டையும் வெறுப்புக் குழுக்கள் எனக் கூறுகிறது.[28][29]மேலும், தெற்கு வறுமைச் சட்ட மையம் 2001 ஆண்டில், இந்த இரண்டு அமைப்புகளையும் வெளிப்படையாகவோ அல்லது ஓரளவு மறைமுகமாகவோ இனவாதம் கக்கும் டான்ட்டனின், குடியேற்ற எதிர்ப்புக் கழுக்களின் வலை இணைப்பில் உள்ள நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்கிறது. [30]தெற்கு வறுமைச் சட்ட மையம் 2009, பிப்ரவரி மாததித்தில் இவரது பார்வைகள் இனவாதம் சார்ந்தததாக விவரிக்கிறது.[31]மிச்சகன் பல்கலைக்கழகப் பென்ட்லி வரலாற்று நூலகத்துக்கு டான்ட்டன் கொடையாக அளித்த 15 ஆவணப் பேழைகளில் இவரது சூழலியல் வாத, குடியேற்ற எதிர்ப்பு செயல்பாடுகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன, மேலும், இவர் ஈந்த 10 ஆவணப் பேழைகள் 2035 ஆம் ஆண்டுவரை திறக்க் மறுக்கப்பட்டு இலச்சினைக் காப்பிட்டுப் பூட்டப்பட்டுள்ளது.[32][33]

டான்ட்டனின் எழுத்துவழித் தொடர்புகளை ஆய்வுசெய்த, தெற்கு வறுமைச் சட்ட மையத்தின் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத அறிக்கை[33]டான்ட்டனின் குடியேற்ற எதிர்ப்பு முயற்சிகளையும் வெள்ளையின மேலாத்திக்க வாதிகளுடனும் புதுநாசிச மீமரபியல் சார்புத் தலைவர்களுடனும் இருந்த நெருங்கிய தொடர்புகளை சுட்டிக் காட்டுகிறது. இந்த அறிக்கையின் அறிமுகம் பின்வருமாறு கூறுகிறது:

அமெரிக்கக் குடியேற்றச் சீர்திருத்தப் பேரவை, குடியேற்ற ஆய்வு மையம் எண்கள் அ ஐ நா, ஆகிய அனைத்தும் ஜான் டான்ட்டன் சிந்தித்து உருவாக்கிய குடியேற்றக் கட்டுபாட்டு நிறுவன வலையமைப்பின் பகுதிகளேயாகும். தாயக இயக்க "பாவனையாளரான" இவர், ஆழ்ந்த இனவாத வேர்கள் குடிகொண்டவர் ஆவார் . இந்த அறிக்கையின் முதல் பகுதி காட்டுவது போல, இவர் பல பத்தாண்டுகளாகவே வெள்ளைத் தேசியக் காட்சியின் மையக்கருவாக இருந்துள்ளார். இவர் வெள்ளை மேலாதிக்கவாதிகளயும் "புது நாசிச நிறுவனம்" எனும் மீமரபியல் அறக்கட்டளையின்முன்னணி இதழை நடத்தியத் தலைவர்களையும் சந்தித்து, அவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்துகொண்டிருப்பவர் ஆவார் இவர் இலத்தீன அமெரிக்கர்களைப் பற்றி பலமுறை இனவாத அறிக்கைகளை வெளியிட்டுவருபவரும் ஆவார். வெள்ளையரை விட அவர்களது இனப்பெருக்க வீதம் கூடுதலாக இருப்பதைக் குறித்து கவலையைத் தெரிவித்துள்ளார். ஒரு நிலையில், இவர் அமெரிக்கப் பண்பாடு நின்றுநிலைக்க, " ஐரோப்பிய அமெரிக்க பெரும்பான்மை" தேவையென அறுதியிட்டுக் கூறியவர் ஆவார்.[32]

டான்ட்டன் தன் 2010 ஆம் ஆண்டைய கட்டுரையில் தன்னை இனவாதியாகவும் மீமரபியல்வாதியகவும் விவரிக்கும் தெற்கு வறுமைச் சட்ட மையக் குற்றச்சாட்டுகளை மறுத்து அவை தன்மீது சுமத்தப்படும் பழிகள்("SPLC’s MO: Audacter calumniare semper aliquid haeret") என வாதிட்டுள்லார்.[34]

சொந்தவாழ்க்கை

தொகு

இவர் மேரி இலவு டான்ட்டனை மணந்தார். இவரது துணைவி ஐக்கிய அமெரிக்கக் குடியேற்றச் சீர்திருத்தப் PAC இன் தலைமைப் பொறுப்பு ஏற்றார்.[35] மேலும், மேரி இலவு டான்ட்டன் கண்வரோடு இணைந்து மிச்சிகனில் அமைந்த அமெரிக்கக் காட்சி அமைப்பை நிறுவியுள்ளார்.[36]

இவர் இறுதிப் 16 ஆண்டுகள் பார்கின்சன் நோய்த்தொகையால் பீடிக்கப்பட்டுள்ளார்.[1] He died in Petoskey on July 16, 2019.[37][38]


குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Schudel, Matt (July 21, 2019). "John Tanton, architect of anti-immigration and English-only efforts, dies at 85". The Washington Post. https://www.washingtonpost.com/local/obituaries/john-tanton-architect-of-anti-immigration-and-english-only-efforts-dies-at-85/2019/07/21/2301f728-aa3f-11e9-86dd-d7f0e60391e9_story.html. 
  2. 2.0 2.1 Woods, Joshua; Manning, Jason; Matz, Jacob (2 October 2015). "The Impression Management Tactics of an Immigration Think Tank". Sociological Focus 48 (4): 354–372. doi:10.1080/00380237.2015.1064852. பன்னாட்டுத் தர தொடர் எண்:0038-0237. 
  3. 3.0 3.1 Ellis, Emma (January 14, 2017). "Fake Think Tanks Fuel Fake News". Wired. பார்க்கப்பட்ட நாள் March 13, 2018.
  4. Corbett, Erin (25 May 2019). "Who Is Julie Kirchner? Anti-Immigration Activist May Head Immigration". Fortune. Archived from the original on 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-07-19.
  5. "The Social Contract Publishes its Last Tract". Southern Poverty Law Center. 23 April 2020.
  6. Gonzalez, Josue M. (5 June 2008). Encyclopedia of Bilingual Education. SAGE Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781452265964. பார்க்கப்பட்ட நாள் 1 March 2019 – via Google Books.
  7. "John Tanton Papers 1960-2007: Biography". Bentley Historical Library. University of Michigan. பார்க்கப்பட்ட நாள் February 22, 2016.
  8. "Sustainable Agriculture?" (PDF). The Social Contract Press.
  9. 9.0 9.1 9.2 DeParle, Jason (April 17, 2011). "The Anti-Immigration Crusader". The New York Times. https://www.nytimes.com/2011/04/17/us/17immig.html?pagewanted=all&_r=0. 
  10. "John Tanton's Network". Intelligence Report. Southern Poverty Law Center. Summer 2002. பார்க்கப்பட்ட நாள் 2017-08-30.
  11. Hayes, Christopher (2006-04-24). "Keeping America Empty -- In These Times". In These Times இம் மூலத்தில் இருந்து 2008-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081104154402/http://www.inthesetimes.com/article/2608/. 
  12. Pear, Robert (2007-07-15). "Little-Known Group Claims a Win on Immigration". New York Times. https://www.nytimes.com/2007/07/15/us/politics/15immig.html. "Numbers USA is one of many organizations fostered by John H. Tanton, an ophthalmologist from Michigan who has also championed efforts to protect the environment, limit population growth and promote English as an official language." 
  13. "'English Only': The movement to limit Spanish speaking in US" (in en-GB). BBC News. 2019-12-03. https://www.bbc.com/news/world-us-canada-50550742. 
  14. Sherman, Amy (March 22, 2017). "Is the Center for Immigration Studies a 'hate group' ?" (in en). PolitiFact Florida. http://www.politifact.com/florida/article/2017/mar/22/center-immigration-studies-hate-group-southern-pov/. 
  15. "The organized anti-immigration 'movement,' increasingly in bed with racist hate groups, is dominated by one man, John Tanton". Intelligence Report. Southern Poverty Law Center. Summer 2002. பார்க்கப்பட்ட நாள் 2017-08-30.
  16. "The Puppeteer". Hate in the News. Tolerance.org. June 18, 2002. Archived from the original on 10 August 2002.
  17. "The Network". Hate in the News. Tolerance.org. June 18, 2002. Archived from the original on 26 December 2002.
  18. "The Social Contract Journal". Social Contract Press.
  19. Lutton, Wayne; Tanton, John (1994). The Immigrant Invasion. Petoskey: Social Contract Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1881780015. இணையக் கணினி நூலக மைய எண் 476592586.
  20. Santana, Maria (12 April 2017). "Hard-line anti-illegal immigration advocates hired at 2 federal agencies". CNN.com. பார்க்கப்பட்ட நாள் 2017-04-12.
  21. 21.0 21.1 "Ties Between Anti-Immigrant Movement and Eugenics". Anti-Defamation League (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-12.
  22. Master, Cyra (2017-04-12). "DHS hires incense immigration supporters". TheHill. http://thehill.com/latino/328571-dhs-hires-incense-immigration-supporters. 
  23. 23.0 23.1 Deparle, Jason (2011-04-17). "The Anti-Immigration Crusader". The New York Times. https://www.nytimes.com/2011/04/17/us/17immig.html. 
  24. Tanton, John (January 20, 2009) [October 10, 1986]. "'WITAN MEMO' III". Intelligence Report. பார்க்கப்பட்ட நாள் May 4, 2017 – via Southern Poverty Law Center.
  25. 25.0 25.1 Potok, Mark, Intelligence Report, Spring 2004, pp. 59-63.
  26. Tanton, John (30 Oct 1988). "U.S. English - it's being victimized by the 'Big Lie'". Houston Chronicle: p. 5. 
  27. "Pioneer Fund Grants, Part VI". Institute for the Study of Academic Racism. Ferris State University. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2022-12-24.
  28. "Federation for American Immigration Reform". Southern Poverty Law Center (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 December 2018.
  29. "The Social Contract Press". Southern Poverty Law Center (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 December 2018.
  30. "Anti-Immigration Groups". Intelligence Report (Southern Poverty Law Center) (101). Spring 2001. http://www.splcenter.org/get-informed/intelligence-report/browse-all-issues/2001/spring/blood-on-the-border/anti-immigration-. பார்த்த நாள்: December 4, 2018. 
  31. "John Tanton". Southern Poverty Law Center. பார்க்கப்பட்ட நாள் 2017-08-30.
  32. 32.0 32.1 Beirich, Heidi (February 26, 2009). "SPLC: The Nativist Lobby: Three Faces of Intolerance" (PDF). Intelligence Report. Southern Poverty Law Center. Archived from the original (PDF) on 14 October 2014. பார்க்கப்பட்ட நாள் 29 April 2017.
  33. 33.0 33.1 "John Tanton's files". Bentley Historical Library, University of Michigan.
  34. "The Social Contract Journal", Volume 20, Number 3 (Spring 2010)Issue theme: "The Southern Poverty Law Center - A Special Report". cf. https://www.thesocialcontract.com/artman2/publish/tsc_20_3/tsc_20_3_tanton.shtml
  35. Bulkeley, Deborah (2006-02-25). "Foe of immigrant tuition denies supremacist links". Deseret News: pp. B.01. 
  36. "Mary Lou Tanton". Michigan 4-H Foundation (in ஆங்கிலம்).
  37. "Anti-immigrant leader Dr. John Tanton of Michigan dies at 85". Detroit Free Press. பார்க்கப்பட்ட நாள் 2019-07-18.
  38. Slagter, Martin (18 July 2019). "Michigan founder of anti-immigration movement John Tanton dead at 85". mlive.com. பார்க்கப்பட்ட நாள் 2019-07-18.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_டான்டன்&oldid=3637135" இலிருந்து மீள்விக்கப்பட்டது